பக்கம் எண் :

132சத்திய சோதனை

Untitled Document
குறித்துப் பள்ளிக்கூடத்திலோ,   பிறகு இங்கிலாந்தில் இருந்தபோதோ
நான்      கற்றுக் கொண்டதில்லை.   நான் எந்த    வழக்குக்காகத்
தென்னாப்பிரிக்காவுக்குப்   போயிருந்தேனோ அந்த வழக்கு, கணக்கு
சம்பந்தமானது.        கணக்கு வைக்கும் முறையைத் தெரிந்தவர்கள்
மாத்திரமே அதைப் புரிந்து கொள்ளவும்,    விளக்கவும் முடியும். இது
பற்று எழுதப்பட்டது,  இது வரவு வைக்கப்பட்டது      என்றெல்லாம்
குமாஸ்தா சொல்லிக் கொண்டே போனார். எனக்கோ மேலும்  மேலும்
அதிகக்     குழப்பமாகிக் கொண்டிருந்தது. பி. நோட்டு   (பிராமிசரி
நோட்டு)      என்றால் என்ன    என்பதே    எனக்குத் தெரியாது.
அகராதியிலும் இந்த      வார்த்தையைக் காணவில்லை. என்னுடைய
அறியாமையைக் குமாஸ்தாவுக்கு    வெளிப்படுத்தினேன். பி. நோட்டு
என்றால் பிராமிசரி நோட்டு என்று அவர் சொல்ல,    நான் தெரிந்து
கொண்டேன். கணக்கு வைக்கும் முறையைப் பற்றிய புத்தகம் ஒன்றை
வாங்கி    அதைப்படித்தேன்.  அதன் பிறகு    எனக்குக் கொஞ்சம்
நம்பிக்கை ஏற்பட்டது.   வழக்கையும் புரிந்து கொண்டேன்.  கணக்கு
எழுதுவது      எப்படி என்பது,  அப்துல்லா சேத்துக்கும் தெரியாது
என்றாலும். அவருக்கு இருந்த நல்ல அனுபவ ஞானத்தினால் கணக்கு
முறையில் ஏற்படும் எந்தச் சிக்கலையும் உடனே தீர்த்துவிடும் திறமை
அவருக்கு இருந்ததைக் கண்டேன்.

     “பிரிட்டோரியாவுக்குப் போக     நான் தயாராக இருக்கிறேன்”
என்று அவரிடம் சொன்னேன்.

     “நீங்கள் அங்கு எங்கே தங்குவீர்கள்?” என்று சேத் கேட்டார்.

     “நான் எங்கே தங்க வேண்டும்     என்று விரும்புகிறீர்களோ
அங்கே தங்குகிறேன்” என்றேன்.

     “அப்படியானால்      நம் வக்கீலுக்கு எழுதுகிறேன்.  நீங்கள்
தங்குவதற்கு     வேண்டிய ஏற்பாடுகளை அவர் செய்வார். அதோடு
அங்கே இருக்கும்      என் மேமன் நண்பர்களுக்கும் எழுதுகிறேன்.
ஆனால்,     அவர்களுடன் தங்குங்கள்       என்று உங்களுக்குச்
சொல்லமாட்டேன்.எதிர்க் கட்சியினருக்குப் பிரிட்டோரியாவில் அதிகச்
செல்வாக்கு உண்டு. நமது அந்தரங்கக்     கடிதங்களை அவர்களில்
எவராவது படித்து விட்டால் அதனால் நமக்கு     அதிகத் தீமைகள்
ஏற்படும். நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு   அவர்களுடன் நெருங்கிப்
பழகாமல் இருக்கிறீர்களோ   அவ்வளவும் நமக்கு நல்லது” என்றார்.

     “உங்கள் வக்கீல் என்னை    எங்கே இருக்கச் சொல்கிறாரோ
அங்கே தங்குகிறேன். இல்லாவிட்டால் நானே  என் இருப்பிடத்திற்கு
ஏற்பாடு செய்துகொள்ளுகிறேன்.     நமக்குள் ரகசியமாக இருக்கும்
எதையும் மற்றொரு        ஆத்மா அறிந்து கொண்டு விடமுடியாது.
பிரதிவாதிகளை அறிமுகம்      செய்துகொள்ள வேண்டும்  என்றே
எண்ணியிருக்கிறேன். சாத்தியமானால், இவ் வழக்கைக்  கோர்ட்டுக்கு