பக்கம் எண் :

பிரிட்டோரியாவுக்குப் போகும் வழியில் 133

Untitled Document
வெளியிலேயே சமரசம் செய்துவிட விரும்புகிறேன். எப்படியும் தயாப்
சேத் உங்கள் உறவினர்தானே” என்றேன்.பிரதிவாதியான சேத் தயாப்
ஹாஜி கான் முகம்மது, அப்துல்லா சேத்திற்கு நெருங்கிய  உறவினர்.

     சமரசம் ஏற்படக்கூடும் என்ற   சொல்லைக் கேட்டதுமே சேத்
திடுக்கிட்டுவிட்டார் என்பதை நான் காண முடிந்தது.  நான் டர்பனில்
ஆறு, ஏழு நாட்களாக இருந்திருக்கிறேன். நாங்கள் ஒருவரையொருவர்
அறிந்து, புரிந்துகொண்டும் இருக்கிறோம்.    என்னை வைத்திருப்பது
இப்போது       யானையைக் கட்டித் தீனி போடுவதுபோல் இல்லை.
ஆகையால்,        அவர் சொன்னார்:   “ஆம்...ம்    கோர்ட்டுக்கு
வெளியிலேயே சமரசமாகப்    போய்விடுவதைவிடச் சிறந்தது எதுவும்
இல்லை தான். ஆனால்,         நாங்கள் எல்லோரும் உறவினர்கள்.
ஆகையால் ஒருவரையொருவர் நன்றாக அறிந்து கொண்டிருக்கிறோம்.
தயாப் சேத் அவ்வளவு எளிதில் சமரசத்திற்கு  ஒப்புக்கொண்டுவிடக்
கூடியவரல்ல.     நம்மளவில் நாம்    கொஞ்சம்  அஜாக்கிரதையாக
இருந்தாலும்,     நம்மிடம் இருக்கும்        ரகசியங்களை எல்லாம்
தெரிந்துகொண்டு,     முடிவில் நம்மையே கவிழ்த்திவிடப் பார்ப்பார்.
ஆகையால் எதையும் தீர யோசித்துச் செய்யுங்கள்.”

     “அதைப்பற்றி உங்களுக்குக்     கவலை வேண்டாம். வழக்கை
குறித்துத்    தயாப் சேத்திடமோ,    மற்றவர்களிடமோ,  நான் பேச
வேண்டும் என்ற அவசியம் இல்லை.    ஒரு    சமரசத்திற்கு வந்து,
அனாவசியமான கோர்ட்டு   விவகாரக் கஷ்டத்திலிருந்து காப்பாற்றிக்
கொள்ளும்படி மாத்திரமே     அவருக்குச் சொல்லுவேன்” என்றேன்.

     நான் டர்பன் சேர்ந்த ஏழாவது   அல்லது    எட்டாவது நாள்
அங்கிருந்து புறப்பட்டேன். ‘எனக்கு ரெயிலில் முதல் வகுப்பு டிக்கெட்
வாங்கப்பட்டிருந்தது.     இரவில்   படுக்கையும் வேண்டும் என்றால்
அதற்காகத் தனியாக    ஐந்து ஷில்லிங் கொடுத்துச் சீட்டுப் பெறுவது
அங்கிருந்த     வழக்கம்.    எனக்கு படுக்கை சீட்டும் வாங்கி விட
வேண்டும்’ என்று       அப்துல்லா சேத் வற்புறுத்தினார்.  ஆனால்,
பிடிவாதத்தினாலும், கர்வத்தினாலும்,    ஐந்து ஷில்லிங் மிச்சப்படுத்தி
விடலாம் என்ற   எண்ணத்தினாலும், அதற்கு நான் மறுத்துவிட்டேன்.

     “இந்நாடு இந்தியா அல்ல  என்பதைக் கவனத்தில் வையுங்கள்.
எங்களுக்கு போதிய செல்வத்தை    ஆண்டவன் அளித்திருக்கிறார்.
செலவு செய்யவும் முடியும்.      உங்களுடைய தேவைக்குச் செலவு
செய்து கொள்ளுவதில்        தயவு செய்து வீண் சிக்கனம் பிடிக்க
வேண்டாம்” என்று சேத், எச்சரிக்கை செய்தார்.

     அவருக்கு நன்றி தெரிவித்தேன். “என்னைப்பற்றிக் கவலைப்பட
வேண்டாம்” என்றேன்.

     நான் சென்ற ரெயில்,      இரவு 9 மணிக்கு     நேட்டாலின்
தலைநகரான     மாரிட்ஸ்பர்க் போய்ச்சேர்ந்தது.  அந்த ஸ்டேசனில்