பக்கம் எண் :

140சத்திய சோதனை

Untitled Document
திட்டவட்டமில்லாமல் இருந்தன.

     “நான் முதல் வகுப்பிலேயே போக விரும்புகிறேன்.    அப்படிப்
போக       முடியவில்லையென்றால்,   பிரிட்டோரியாவுக்கு முப்பத்து
ஏழுமைல்    தூரமேயாகையால் கோச் வண்டியில் போகிறேன்” என்று
சேத்திடம் சொன்னேன்.

     இதனால் ஏற்படக் கூடிய காலதாமதத்தையும் பணச் செலவையும்
சேத் அப்துல் கனி,      எனக்கு எடுத்துக்கூறினார். ஆனால், முதல்
வகுப்பில்      பிரயாணம் செய்வதென்ற  என் யோசனையை ஒப்புக்
கொண்டார்.   அதன்பேரில்    ஸ்டேஷன் மாஷ்டருக்கு ஒரு  குறிப்பு
அனுப்பினேன். நான் பாரிஸ்டர் என்றும், நான்   முதல் வகுப்பிலேயே
எப்பொழுதும்   பிரயாணம்   செய்வது     வழக்கம் என்றும் அதில்
குறிப்பிட்டேன்.    பிரிட்டோரியாவுக்குச்     சீக்கிரத்தில் நான் போக
வேண்டியிருக்கிறது என்றும், அவருடைய    பதிலுக்காகக் காத்திருக்க
நேரமில்லையாகையால்      பதிலை ஸ்டேஷனிலேயே நான் வாங்கிக்
கொள்ளுவதாகவும், முதல் வகுப்பு டிக்கெட்டை     எதிர்பார்க்கிறேன்
என்றும்    அக்கடிதத்தில் எழுதியிருந்தேன். பதிலை நேரில் வாங்கிக்
கொள்ளுவதாக நான் கூறியிருந்ததற்கும்  ஒரு காரணம் உண்டு. ‘கூலி‘
பாரிஸ்டர் என்றால்  எப்படி இருப்பார் என்பதைக் குறித்து ஸ்டேஷன்
மாஸ்டருக்கும் ஒரு வகையான எண்ணம் இருக்கக்கூடும். ஆகையால்,
எழுத்து மூலம் ஸ்டேசன்    மாஸ்டர் எனக்குப் பதில்  அனுப்புவதாக
இருந்தால், ‘இல்லை‘ என்றுதான் எனக்கு நிச்சயமாகச் சொல்லிவிடுவார்.
எனவே, சரியான       ஆங்கில உடையில் அவரிடம் போய், நேரில்
பேசினால்,  முதல் வகுப்பு டிக்கெட்       கொடுத்துவிடும்படி செய்து
விடக்கூடும் என்று எண்ணினேன்.       மறுநாள் காலை நாகரிகமான
சட்டை, டை   முதலியவைகளை அணிந்து கொண்டு, ஸ்டேஷனுக்குப்
போய்,   என் கட்டணத்திற்காக      சவரனை டிக்கெட் கொடுக்கும்
இடத்தில் வைத்து, “முதல் வகுப்பு ஒரு டிக்கெட்   வேண்டும்” என்று
கேட்டேன்.

     “இக் கடிதத்தை     நீங்கள்தானே   அனுப்பினீர்கள்?” என்று
ஸ்டேஷன் மாஸ்டர் என்னைக் கேட்டார்.

     “நான் தான் அனுப்பினேன். எனக்கு ஒரு டிக்கெட் கொடுத்தால்
அதிக உபகாரமாக இருக்கும். நான் இன்றே     பிரிட்டோரியாவுக்குப்
போயாக வேண்டும்” என்றேன்.

     அவர் சிரித்தார்.   பச்சாதாபப்பட்டார். பின்வருமாறு சொன்னார்.
“நான்         டிரான்ஸ்வால்காரன் அல்ல; ஹாலந்துக்காரன். உங்கள்
உணர்ச்சியை நான்  மதிக்கிறேன். உங்களிடம்   எனக்கு அனுதாபமும்
உண்டு. உங்களுக்கு டிக்கெட் கொடுக்கவே  விரும்புகிறேன். ஆனால்,
ஒரு    நிபந்தனை : உங்களை   மூன்றாம் வகுப்பு      வண்டிக்குப்
போய்விடுமாறு    கார்டு கூறினால்,   என்னை இவ்விஷயத்தில் சிக்க
வைத்துவிடக்கூடாது. ரெயில்வே கம்பெனிமீது