பக்கம் எண் :

மேலும் துன்பங்கள்s139

Untitled Document
பல ஹோட்டல்களின்      பெயர்கள் எனக்குத் தெரியும். வண்டியை
அமர்த்திக் கொண்டு நேரே       கிராண்டு நாஷனல் ஹோட்டலுக்கு
ஓட்டச் சொன்னேன்.  மானேஜரைப் பார்த்து, ‘தங்குவதற்கு ஓர் அறை
வேண்டும்‘ என்று கேட்டேன்.       அவர் என்னைக் கொஞ்ச நேரம்
உற்றுப் பார்த்தார். ‘இடம் நிரம்பி விட்டது!  வருத்தப்படுகிறேன்’ என்று
மரியாதையாகக் கூறி, என்னை வழியனுப்பி விட்டார். ஆகவே, முகமது
காஸீம் கம்ருதீன் கடைக்கு   ஓட்டுமாறு வண்டிக்காரனிடம் கூறினேன்.
அங்கே அப்துல்கனி சேத், என்னை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவர்      என்னை அன்போடு வரவேற்றார்.  ஹோட்டலில் எனக்கு
ஏற்பட்ட அனுபவத்தைக் கேட்டு   விட்டு, விழுந்து விழுந்து சிரித்தார்.
“ஹோட்டலில் இருக்க,    உங்களை அனுமதிப்பார்கள் என்று எப்படி
எதிர்பார்த்தீர்கள்?” என்றார்.

     “ஏன்      அனுமதிக்கமாட்டார்கள்?” என்று நான் கேட்டேன்.

     “நீங்கள் இங்கே சில தினங்கள் தங்கியதும்   அதைத் தெரிந்து
கொள்ளுவீர்கள்” என்றார். இது போன்றதோர்  நாட்டில் நாங்கள்தான்
வசிக்க        முடியும்.    ஏனெனில்,   பணம்   சம்பாதிப்பதற்காக
அவமானங்களைச்       சகித்துக் கொள்ளுவதைக்  குறித்து நாங்கள்
கவலைப்படுவதில்லை.    ஆகையால்,  நாங்கள் இங்கே இருக்கிறோம்
என்றார். அதோடு தென்னாப்பிரிக்காவில் இந்தியர்  அனுபவித்துவரும்
துன்பங்களைப்    பற்றிய கதையையும் விரிவாகக் கூறினார்.  மேலே
போகப் போகச் சேத்    அப்துல்கனியைக் குறித்து நாம் அதிகமாகத்
தெரிந்து கொள்ளுவோம்.

     அவர் மேலும் சொன்னதாவது: “உங்களைப் போன்றவர்களுக்கு
ஏற்ற நாடல்ல இது. நீங்களோ,   நாளை பிரிட்டோரியாவுக்குப் போக
வேண்டியிருக்கிறது.       மூன்றாம் வகுப்பு வண்டியில்தான் நீங்கள்
பிரயாணம் செய்தாக வேண்டும். டிரான்ஸ்வாலில் இருக்கும் நிலைமை,
நேட்டாலில்      இருக்கும் நிலைமையைவிட     மகா மோசமானது.
இந்தியருக்கு முதல்,    இரண்டாவது வகுப்பு      டிக்கெட்டுகளைக்
கொடுப்பதே இல்லை.”

     “இது சம்பந்தமாக நீங்கள் விடாமல் முயன்றிருக்க மாட்டீர்கள்”
என்றேன்.

     “விண்ணப்பங்களை       அனுப்பியிருக்கிறோம்.  வழக்கமாக
நம்மவர்கள் முதல்,    இரண்டாம் வகுப்புக்களில் பிரயாணம் செய்ய
விரும்புவதில்லை என்பதையும்     ஒப்புக்கொள்ளுகிறேன்” என்றார்,
சேத் கனி.

     ரெயில்வே    விதிகளைத் தருவித்து,    அவற்றைப் படித்துப்
படித்துப் பார்த்தேன்.        விதிகளில் ஓரளவு இடம் இருந்ததைக்
கண்டேன்.       டிரான்ஸ்வாலின் பழைய சட்டங்களின் வாசகங்கள்
அவ்வளவு திட்டவட்டமாக இல்லை. ரெயில்வே விதிகளோ, அதையும்
விடத்