பக்கம் எண் :

142சத்திய சோதனை

Untitled Document
அட்டர்னியும்  யாரையும்   அனுப்பவில்லை.  நான் அங்கே போய்ச்
சேர்ந்த நாள்      ஞாயிற்றுக்கிழமை. ஆகையால், அன்று யாரையும்
அனுப்ப அவருக்கு     சௌகரியப்படவில்லை என்பதைப் பின்னால்
தெரிந்து கொண்டேன். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப்
போனேன். எந்த ஹோட்டலிலும் எனக்கு இடம் கொடுக்கமாட்டார்கள்
என்று நான் பயந்ததால் எங்கே போவது என்று புரியாமல் விழித்தேன்.

     பிரிட்டோரியா ஸ்டேஷன் 1914 ல்     இருந்ததற்கும் 1893 இல்
இருந்ததற்கும்   அதிக வித்தியாசம் உண்டு. அப்பொழுது விளக்குகள்
மங்கலாக எரிந்துகொண்டிருந்தன. பிரயாணிகளும் மிகச் சிலரே. மற்றப்
பிரயாணிகளெல்லாம்     போகட்டும் என்று காத்திருந்தேன். டிக்கெட்
வசூலிப்பவர் (டிக்கெட் கலெக்டர்)        ஓய்வாக இருக்கும் போது
அவரிடம் என்    டிக்கெட்டைக் கொடுத்துவிட்டு, ஏதாவது ஒரு சிறு
ஹோட்டலுக்காவது,   நான்    தங்கக்கூடிய   வேறு இடத்திற்காவது
வழி      சொல்லும்படி   கேட்கலாம்   என்று இருந்தேன். அப்படி
இல்லையென்றால், இரவு ஸ்டேஷனிலேயே இருந்து விடுவது  என்றும்
நினைத்தேன். ஆனால்,     உண்மையில்  இதைக் கேட்பதற்குக்கூட
எனக்குப்    பயமாக இருந்தது.  அவர் எங்கே என்னை அவமதித்து
விடுவாரோ? என்று அஞ்சினேன்.

     ஸ்டேஷனிலிருந்து எல்லாப்  பிரயாணிகளும் போய்விட்டார்கள்.
நான் டிக்கெட் கலெக்டரிடம்    என் டிக்கெட்டைக் கொடுத்து விட்டு
விசாரிக்க ஆரம்பித்தேன். அவர் மரியாதையாகவே பதில் சொன்னார்.
என்றாலும் அவரால் எனக்கு    அதிகமாக எந்த உதவியும் ஏற்படாது
என்று கண்டேன்.   ஆனால், பக்கத்தில்    நின்றுகொண்டிருந்த ஓர்
அமெரிக்க நீக்கிரோவரும் பேச்சில் எங்களுடன்  கலந்து கொண்டார்.

     “நீங்கள்        இந்த இடத்திற்கு  முற்றும் புதியவர் என்றும்,
உங்களுக்கு நண்பர்கள்  இங்கே யாரும் இல்லை என்றும் தெரிகிறது.
நீங்கள் என்னுடன் வந்தால் உங்களை     ஒரு சிறு  ஹோட்டலுக்கு
இட்டுச்       செல்கிறேன்.  அந்த ஹோட்டலின் சொந்தக்காரர் ஓர்
அமெரிக்கர்.   எனக்கு      நன்றாக தெரிந்தவர்.  அவர் உங்களை
ஏற்றுக் கொள்வார் என்றே நினைக்கிறேன்” என்றார், அவர்.

     எனக்குச்   சந்தேகமாகவே இருந்தது.  ஆனாலும்  அவருக்கு
நன்றி கூறிவிட்டு,  அவருடைய  யோசனையை ஏற்றுக் கொண்டேன்.
என்னை அவர் ஜான்ஸ்டனின் குடும்ப   ஹோட்டலுக்கு அழைத்துப்
போனார்.  ஸ்ரீ ஜான்ஸ்டனைத்      தனியாக அழைத்துப் பேசினார்.
அவரும் அன்றிரவு தங்குவதற்கு இடம் தருவதாக  ஒப்புக்கொண்டார்.
ஆனால்,   அன்றிரவுச் சாப்பாட்டைத் தனியாக என் அறையிலேயே
சாப்பிட வேண்டும் என்பது நிபந்தனை.

     “எனக்கு நிறத் துவேஷம் எதுவுமே கிடையாது என்பதை