பக்கம் எண் :

பிரிட்டோரியாவில் முதல் நாள் 143

Untitled Document
உங்களுக்கு  உறுதியாகக் கூறுகிறேன். ஆனால்,  என் ஹோட்டலுக்கு
வருபவர்களெல்லோரும்   ஐரோப்பியர்.  போஜன அறையில் சாப்பிட
உங்களை நான்      அனுமதித்தால்   அவர்கள் கோபமடைவார்கள்.
அவர்கள் இங்கிருந்து போய்விட்டாலும் போய்விடக் கூடும்”  என்றார்,
ஸ்ரீ ஜான்ஸ்டன்.

     அதற்கு   நான்,  “ இன்றிரவுக்கு   மாத்திரம் எனக்கு   இடம்
அளிப்பதாக        இருந்தாலும்,  அதற்காக என் நன்றி.  இங்குள்ள
நிலைமையை    நான்      இப்பொழுது     அநேகமாகத் தெரிந்து
கொண்டிருக்கிறேன்.   ஆகையால்,         உங்களுக்கு   இருக்கும்
கஷ்டங்களையும்   அறிகிறேன்.  என் அறையிலேயே எனக்கு நீங்கள்
இரவுச்     சாப்பாடு    கொடுப்பது  பற்றி எனக்குக் கவலையில்லை.
நாளைக்கு வேறு ஏதாவது   ஏற்பாடு செய்து கொள்ள முடியும் என்று
நம்புகிறேன்” என்று கூறினேன்.

     பிறகு அவர் என்னை    ஓர் அறைக்கு   அழைத்துக்கொண்டு
போய்  விட்டார்.   சாப்பாடு வரும்           என்று எதிர்பார்த்துக்
கொண்டிருந்தேன்.  நான்    தனியாக  இருந்ததால்     சிந்தனையில்
ஆழ்ந்தேன். அந்த ஹோட்டலில் தங்கியவர்கள் அப்பொழுது அதிகம்
பேர் இல்லை. ஆகவே,    வேலைக்காரன்   சீக்கிரமாகவே சாப்பாடு
கொண்டு வருவான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால்,
ஸ்ரீ ஜான்ஸ்டனே அங்கே வந்தார். “உங்கள் அறையிலேயே   நீங்கள்
சாப்பிட்டுக்   கொள்ளவேண்டும்   என்று உங்களிடம்    சொன்னது
எனக்கே         வெட்கமாக இருந்தது.  ஆகவே,  உங்களைப்பற்றி
மற்றவர்களிடம் சொன்னேன். சாப்பாட்டு அறைக்கே நீங்களும்  வந்து
சாப்பிடுவதில் அவர்களுக்கு    ஏதாவது ஆட்சேபம் உண்டா? என்று
அவர்களைக் கேட்டேன். தங்களுக்கு    எந்தவிதமான ஆட்சேபமும்
இல்லை  என்றும், நீங்கள்  விரும்பும்வரை இங்கே     தங்குவதைக்
குறித்தும்   தங்களுக்குக்   கவலையில்லை      என்றும்  அவர்கள்
சொன்னார்கள். ஆகையால், தயவு செய்து     சாப்பாட்டு அறைக்கே
வாருங்கள். உங்களுக்கு இஷ்டம் இருக்கும் வரை நீங்கள்  இங்கேயே
தங்கலாம்” என்றும் அவர் கூறினார்.

     அவருக்கு மீண்டும் நன்றி கூறினேன்.   சாப்பாட்டு அறைக்குப்
போய்த் திருப்தியாகச் சாப்பிட்டேன்.

     மறுநாள் காலை  அட்டர்னி ஸ்ரீஏ.டபிள்யு.  பேக்கரைப் போய்ப்
பார்த்தேன்.      அவரைப்பற்றிய சில விவரங்களை அப்துல்லா சேத்
என்னிடம் சொல்லியிருந்தார். ஆகையால், அவர் என்னை அன்போடு
வரவேற்றதைக் கண்டு நான்  ஆச்சரியப்படவில்லை.  என் சுகத்தைக்
குறித்தும்         பிரியமாக விசாரித்தார்.  என்னைப் பற்றிய எல்லா
விவரங்களையும் சொன்னேன். அதன் பேரில்    அவர் கூறியதாவது:
இந்த     வழக்குக்குச்   சிறந்த வக்கீலை    அமர்த்தியிருக்கிறோம்.
ஆகையால், பாரிஸ்டர் என்ற வகையில்      உங்களுக்கு எங்களிடம்
வேலையில்லை. இந்த வழக்கு நீண்ட காலமாக   நடந்து  வருவதோடு
மிகவும்