பக்கம் எண் :

இந்தியருடன் தொடர்பை நாடினேன் 153

Untitled Document
கொடுக்க ஒப்புக்கொண்டேன்.   சொல்லிக் கொடுப்பதில் எனக்குள்ள
தகுதியைப்பற்றி எனக்கு    எந்தவிதமான சந்தேகமும் இல்லை. என்
மாணவர்கள்       சளைத்துப் போனாலும் போகலாமே ஒழிய, நான்
சளைக்கமாட்டேன்.   சில    சமயங்களில் நான் அவர்கள் இருக்கும்
இடத்திற்குப்       போகும்போது    அவர்கள் தங்கள் வேலையில்
ஈடுபட்டிருப்பார்கள்.        என்றாலும்,  நான் பொறுமையை இழந்து
விடுவதில்லை.      ஆங்கிலத்தில் புலமை பெறும் வகையில் அதைக்
கற்றுக்கொள்ள வேண்டும்   என்று இம்மூவரில் எவருக்கும் விருப்பம்
இல்லை. ஆனால், இவர்களில் இருவர் சுமார்   எட்டு மாத காலத்தில்
நல்ல அபிவிருத்தியை அடைந்தனர் என்று     சொல்லலாம். இருவர்,
கணக்கு எழுதவும்,    வியாபார சம்பந்தமான சாதாரணக் கடிதங்களை
எழுதவும் போதுமான அளவுக்கு ஆங்கிலம்    கற்றுக்கொண்டார்கள்.
ஆனால்,  நாவிதருக்கோ இம்மொழியைக் கற்பதிலிருந்த ஆசை, தமது
வாடிக்கைக்காரர்களிடம் பேசக்கூடிய அளவிற்குத் தெரிந்தால் போதும்
என்பதோடு நின்றது.    இவ்விதம் படித்ததனால்,  இம்மாணவர்களில்
இருவர், நல்ல வருமானம் பெறுவதற்கான     தகுதியை அடைந்தனர்.

     முன்னால் கூறிய பொதுக்கூட்டத்தின் பலன் எனக்குத்  திருப்தி
அளித்தது. இத்தகைய பொதுக்கூட்டங்களை   வாரத்திற்கு ஒருமுறை
கூட்டுவது என்று முடிவு    செய்யப்பட்டது என்றே எனக்கு ஞாபகம்.
மாதம்      ஒருமுறை கூட்டுவது என்றும் முடிவு செய்திருக்கக்கூடும்.
அநேகமாகத் தவறாமல் கூட்டங்கள் நடந்து வந்தன. அச்சமயங்களில்
அவரவர்களின்    அபிப்பிராயங்களைத்   தாராளமாக எடுத்துக்கூறி
வந்தனர். இதன் பலன் என்னவென்றால், பிரிட்டோரியாவில் எனக்குத்
தெரியாத  இந்தியர் எவருமே இல்லை     என்று ஆகிவிட்டதுதான்.
அவர்களில்      ஒவ்வொருவரின்   நிலைமையையுங்கூட     நான்
அறிந்திருந்தேன். பிரிட்டோரியாவில் இருக்கும்   பிரிட்டிஷ் ஏஜண்டு
ஜேகோபஸ் டி வெட்டுடனும் பழக்கம் வைத்துக் கொள்ள வேண்டும்
என்று இது என்னை ஊக்குவித்தது.         இந்தியரிடம் அவருக்கு
அனுதாபம் உண்டு.  ஆனால், அவருக்கு இருந்த செல்வாக்கோ மிகச்
சொற்பம். என்றாலும், தம்மால் இயன்றவரை உதவி செய்வதாக அவர்
ஒப்புக்கொண்டார்.  நான்  விரும்பும் போது          தம்மை வந்து
பார்க்கும்படியும் என்னை அழைத்தார்.

     பிறகு ரெயில்வே     அதிகாரிகளுக்கு எழுதினேன். ரெயிலில்
பிரயாணம் செய்வது சம்பந்தமாக       இந்தியருக்கு இருந்து வரும்
கஷ்டங்கள், ரெயில்வேக்களின்     விதிகளின்படியும் நியாயமற்றவை
என்பதை அவர்களுக்கு         எடுத்துக் காட்டினேன்.  ரெயில்வே
அதிகாரிகளிடமிருந்து எனக்குப் பதில் வந்தது.     தக்க உடையுடன்
இருக்கும் இந்தியருக்கு, முதல்,     இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகள்
கொடுக்கப்படும் என்று           அந்தப் பதிலில் கூறியிருந்தார்கள்.