பக்கம் எண் :

கூலியாக இருப்பதன் துன்பம்155

Untitled Document
செய்தார்கள். திருத்தப்பட்ட  அச்சட்டத்தின்படி இந்தியர் எல்லோரும்
டிரான்ஸ்வாலுக்குள் போவதற்குக்    கட்டணமாக ஆளுக்கு 3 பவுன்
தலைவரி செலுத்த     வேண்டும். அவர்களுக்கென்று ஒதுக்கப்படும்
பகுதிகளில் அல்லாமல் அவர்கள் வேறு எங்குமே சொந்தமாக  நிலம்
வைத்துக் கொள்ளக் கூடாது.       ஆனால்,   அனுபவத்தில் அந்த
ஒதுக்கப்பட்ட பகுதிகளிலும் நிலம் அவர்களுக்குச் சொந்தமாவதில்லை.
இந்தியருக்கு       வாக்குரிமை          இல்லை.   இவை யாவும்
ஆசியாக்காரர்களுக்கு என்று   செய்யப்பட்ட விசேஷச்சட்டத்தினால்
நடந்தன. கறுப்பர்களுக்கு என்று         இயற்றப்பட்ட சட்டங்களும்
அவர்கள் விஷயத்தில் அமுல்    செய்யப்பட்டன.  பின்னால் கூறிய
இச்சட்டங்களின் படி, இந்தியர் பொது     நடைபாதைகளில் நடக்கக்
கூடாது அனுமதிச்சீட்டு இல்லாமல் இரவு 9 மணிக்குப் பிறகு வீட்டை
விட்டு வெளியே  வரவும் கூடாது. இந்தக் கடைசி விதி, இந்தியரைப்
பொறுத்தவரையில்,     சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல் உபயோகிக்கப்
பட்டு வந்தது.    தங்களை,          ‘அரபுக்கள்’ என்று சொல்லிக்
கொண்டவர்களுக்குச் சலுகை காட்டுவதற்காக    இந்த விதியிலிருந்து
அவர்களுக்கு   விலக்களித்தார்கள்.  இவ்விதம் அளிக்கப்பட்ட விதி
விலக்கும்   இயற்கையாகவே          போலீஸாரின் இஷ்டத்தைப்
பொறுத்ததாகத்தான் இருந்து வந்தது.

     அவ்விரு சட்டங்களினாலும்     ஏற்பட்ட கஷ்டங்களை நான்
அனுபவிக்க நேர்ந்தது. நான் அடிக்கடி   இரவில் ஸ்ரீ கோட்ஸூடன்
உலாவ வெளியே போவேன்.     இரவு 10 மணிக்கு முன்னால் வீடு
திரும்புவதில்லை. போலீஸார் என்னைக்      கைது செய்துவிட்டால்
என்ன செய்வது? இவ்விஷயத்தில் என்னைவிட  ஸ்ரீ கோட்ஸூக்குத்
தான் அதிகக் கவலை. தம்முடைய நீக்ரோ    வேலைக்காரர்களுக்கு
அவர் அனுமதிச்சீட்டுக் கொடுக்க      வேண்டியிருந்தது. ஆனால்,
எனக்கும் அவர் எப்படிச்சீட்டுக் கொடுப்பது?   வேலைக்காரனுக்குத்
தான் எஜமான்   இத்தகையச்சீட்டுக் கொடுக்கலாம்.  எனக்கும் ஒரு
சீட்டு வேண்டும்  என்று கேட்டிருந்தால், அப்படிச் சீட்டுக் கொடுக்க
ஸ்ரீ கோட்ஸ்   தயாராக இருந்தாலும்,  அவரால் கொடுக்க முடியாது.
ஏனெனில் அவ்விதம் கொடுப்பது மோசடியாகக்  கருதப்பட்டிருக்கும்.

     ஆகவே, ஸ்ரீ கோட்ஸோ,     அவருடைய நண்பர் ஒருவரோ,
என்னை அரசாங்க அட்டர்னியான டாக்டர் கிராஸே   என்பவரிடம்
அழைத்துச்      சென்றனர்.   நாங்கள் இருவருமே ஒரே இடத்தில்
பாரிஸ்டரானவர்கள்    என்பது தெரிய வந்தது.  இரவு 9 மணிக்குப்
பிறகு வீட்டிற்கு வெளியே இருப்பதற்கு     எனக்கு அனுமதிச்சீட்டு
வேண்டியிருக்கிறது   என்ற விஷயம் அவருக்கு அதிக வருத்தத்தை
அளித்தது. எனக்கு அவர்      தமது அனுதாபத்தைத் தெரிவித்துக்
கொண்டார். எனக்கு      அனுமதிச் சீட்டுக் கொடுப்பதற்கு  உத்தர
விடுவதற்குப் பதிலாக, எந்த நேரத்திலும்    போலீஸாரின் குறுக்கீடு