பக்கம் எண் :

கூலியாக இருப்பதன் துன்பம்157

Untitled Document
அடிக்கடி மாற்றி வந்தார்கள். ஒரு நாள் அவ்விதம் காவலுக்கு இருந்த
போலீஸ்காரர் எனக்குக் கொஞ்சமேனும்    எச்சரிக்கை செய்யாமலும்,
நடைபாதையை      விட்டுப் போய்விடும்படி சொல்லாமலும் என்னை
உதைத்துத்    தெருவில் தள்ளிவிட்டார்.  நான் திகைத்துப் போனேன்.
அவர்     இவ்விதம் நடந்து  கொண்டதைக் குறித்து அவரிடம் நான்
கேட்க       முற்படுவதற்கு முன்னால்   ஸ்ரீகோட்ஸ் சப்தம் போட்டு
என்னைக்       கூப்பிட்டார். அவர் அச்சமயம்    அந்த வழியாகக்
குதிரைமீது வந்து    கொண்டிருந்தார்.  அவர் என்னிடம் வந்து, “ஸ்ரீ
காந்தி! நடந்ததையெல்லாம் நான் பார்த்தேன். அந்த ஆள்மீது நீங்கள்
வழக்குத்      தொடருவீர்களானால், கோர்ட்டில் உங்களுக்காக நான்
மகிழ்ச்சியுடன் சாட்சி சொல்வேன்.   இவ்வளவு    முரட்டுத்தனமாக
நீங்கள் தாக்கப்பட்டதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்”  என்றார்.

     அதற்கு நான், “நீங்கள் வருந்த வேண்டாம். பாவம்,  அவருக்கு
என்ன தெரியும்? கறுப்பு மனிதர்கள்    எல்லோரும் அவருக்கு ஒரே
மாதிரிதான். என்னை       இப்பொழுது நடத்தியதைப் போல அவர்
நீக்கிரோக்களையும்       நடத்துகிறார்   என்பதில் சந்தேகமில்லை.
என்னுடைய    சொந்தக் குறை     எதற்காகவும்    கோர்ட்டுக்குப்
போவதில்லை என்பதை நான்   ஒரு விதியாகக் கொண்டிருக்கிறேன்.
ஆகையால், அவர் மீது        வழக்குத்தொடரும் உத்தேசமில்லை”
என்றேன்.

     உடனே, ஸ்ரீ கோட்ஸ், ‘உங்கள் உயரிய குணத்திற்கு அது சரி.
ஆனால்,          அதைக் குறித்து    மறுபடியும்   சிந்தியுங்கள்.
இப்படிப்பட்டவனுக்கு     நாம் பாடம் கற்பிக்க வேண்டும்’ என்றார்.
பின்னர் அந்தப் போலீஸ்காரரிடம் பேசினார்; அவரைக் கண்டித்தார்.
போலீஸ்காரர் போயர் ஆனபடியால்     இருவரும் டச்சு மொழியில்
பேசினர்.      அவர்கள் என்ன பேசினார்கள்    என்பது எனக்கு
விளங்கவில்லை. ஆனால்,   அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்டுக்
கொண்டார். அப்படிக் கேட்பதற்கு  அவசியமே இல்லை. ஏனெனில்,
அவரை முன்பே நான் மன்னித்து விட்டேன்.

     ஆனால், திரும்பவும்     அத்தெரு வழியாக நான் போகவே
இல்லை. அந்த ஆள் இருந்த   இடத்தில் வேறு ஆள் வந்திருக்கக்
கூடும். இந்தச் சம்பவத்தை அறியாமல்   புதிதாக இருக்கும் ஆளும்
இதே போல நடந்து கொண்டுவிடக் கூடும்.    அனாவசியமாக நான்
ஏன் இன்னும் ஓர் உதையை வலிய வாங்கவேண்டும்? எனவே, நான்
வேறு வழியில் போகத் தொடங்கினேன்.

     குடியேறியிருக்கும் இந்தியரிடம்   எனக்குள்ள அனுதாபத்தை
இச்சம்பவம்      அதிகமாக்கி விட்டது.  இத்தகைய சட்ட விதிகள்
சம்பந்தமாக முதலில் பிரிட்டிஷ்       ஏஜண்டைப் பார்ப்பது; பிறகு
அவசியம் என்று      தெரிந்தால் பரீட்சார்த்தமாக ஒரு வழக்கைப்