பக்கம் எண் :

168சத்திய சோதனை

Untitled Document
இந்தியர்களாக இல்லாது போய்விட்டனரா?

     ஆனால், நானோ      தாய்நாட்டுக்குத்   திரும்பும் நிலையில்
இருந்தேன். ஆகவே, இவ் விஷயத்தில்    என் மனத்தில் தோன்றிய
எண்ணங்களை      வெளியில் கூறத் தயங்கினேன். “இந்த மசோதா
சட்டமாகிவிட்டால்,    நமது       கதியை அது இன்னும்  அதிகக்
கஷ்டமானதாக்கி விடும். நமது சவப்பெட்டியில் அடிக்கப்படும் முதல்
ஆணி இது. நமது சுயமதிப்பின் வேரையே இது தாக்குகிறது” என்று
மாத்திரம் அப்துல்லா சேத்திடம் கூறினேன்.

     உடனே     அவர் கூறியதாவது:  “நீங்கள் சொன்னநிலைமை
ஏற்படலாம்.   வாக்குரிமை வரலாற்றை   உங்களுக்குக் கூறுகிறேன்.
அதைப்பற்றி எங்களுக்கு எதுவுமே தெரியாது. எங்களுடைய சிறந்த
அட்டர்னிகளில் ஒருவரான      ஸ்ரீ எஸ்கோம்புதான் இதைப் பற்றி
எங்களிடம்       சொன்னார்.   அது நடந்தவிதம் இதுதான்: அவர்
தீவிரமாகப்   போராடுகிறவர்.   அவருக்கும்        கப்பல் துறை
இன்ஜீனீயருக்கும்    பரஸ்பரம் பிடிக்காது.    இன்ஜீனீயர், தமக்கு
வோட்டுகள்    இல்லாதபடி செய்து,          தம்மைத் தேர்தலில்
தோற்கடித்துவிடுவார் என்று ஸ்ரீஎஸ்கோம்பு நினைத்தார். ஆகையால்,
எங்களுடைய நிலைமையை எங்களுக்கு அவர் எடுத்துச் சொன்னார்.
அவர்         கூறிய யோசனையின்   பேரில் நாங்களெல்லோரும்
வாக்காளர்களாகப் பதிவு செய்து கொண்டு,    அவருக்கு வோட்டுப்
போட்டோம்.   நீங்கள்        அந்த வாக்குரிமை   முக்கியமானது
என்கிறீர்கள்.    ஆனால், அது எங்களுக்கு எவ்விதம் முக்கியமல்ல
என்பதை நீங்கள் இப்பொழுது அறியலாம்.     என்றாலும்,  நீங்கள்
கூறுவது: எங்களுக்குப் புரிகிறது சரி, அப்படியானால் நீங்கள் கூறும்
யோசனை தான் என்ன?”

     விருந்துக்கு    வந்திருந்த    மற்றவர்களும்  நாங்கள் பேசிக்
கொண்டிருந்ததைக்    கவனமாகக் கேட்டுக்      கொண்டிருந்தனர்.
அவர்களில் ஒருவர், “செய்யவேண்டியது    என்ன என்பதை நான்
சொல்லட்டுமா?     இந்தக் கப்பலில் நீங்கள் புறப்படுவது என்பதை
ரத்துச் செய்துவிடுங்கள். இன்னும்     ஒரு மாதம் இங்கே இருங்கள்.
நீங்கள் கூறுகிறபடி நாங்கள் போராடுகிறோம் என்றார்.”

     மற்றவர்கள்     எல்லோரும்   “அதுதான் சரி; அதுதான் சரி;
அப்துல்லா சேத்!          காந்தியை நிறுத்திவையுங்கள்” என்றார்.

     சேத் மிகவும்    சாமர்த்தியம் உள்ளவர்.  அவர் கூறியதாவது:
“இப்பொழுது நான்     அவரை நிறுத்தி வைப்பதற்கில்லை. அவரை
நிறுத்திவைப்பதற்கு         எனக்கு இருக்கும் உரிமை இப்பொழுது
உங்களுக்குத்தான்       இருக்கிறது. ஆனால்,  நீங்கள் சொல்லுவது
என்னவோ முற்றும் சரியானதே. இங்கே இருக்கவேண்டும்    என்று
நாம்    எல்லோரும் அவரைக் கேட்டுக் கொள்ளுவோம். அவர் ஒரு
பாரிஸ்டர் என்பது உங்களுக்கு நினைவிருக்க