பக்கம் எண் :

உயர்நிலைப் பள்ளியில் 17

Untitled Document

பள்ளிக் கூடம்    போய்ச்     சேருவதற்கு முன்னால்  அங்கிருந்து
பிள்ளைகளெல்லாம் போய்விட்டார்கள்.  வந்திருந்தோரின்  கணக்கை
திரு ஜிமி மறுநாள் தணிக்கை செய்து பார்த்தபோது நான் வரவில்லை
என்று குறித்திருந்ததைக் கண்டார். ஏன் வரவில்லை என்று என்னைக்
கேட்டதற்கு நடந்ததைச் சொன்னேன்.   நான் கூறியதை நம்ப அவர்
மறுத்து விட்டார். ஓரணாவோ அல்லது  இரண்டணாவோ (எவ்வளவு
என்று எனக்குச்     சரியாக நினைவில்லை)    அபராதம் செலுத்த
வேண்டும் என்று உத்தரவிட்டார்.

     பொய் சொன்னதாக நான்   தண்டிக்கப்பட்டேன்! இது எனக்கு
மிகுந்த மன வேதனையாகி விட்டது.   நான் குற்றமற்றவன் என்பதை
நிரூபிப்பது எப்படி? அதற்கு வழியே  இல்லை. வேதனை தாங்காமல்
கதறி அழுதேன். உண்மையுள்ளவன்             எச்சரிக்கையுடன்
இருப்பவனாகவும்     இருக்க வேண்டியது     முக்கியம் என்பதை
உணர்ந்தேன். பள்ளிக்கூடத்தில் நான் அசட்டையாக நடந்துகொண்ட
முதல் சந்தர்ப்பமும், கடைசிச்      சந்தர்ப்பமும் இதுதான். முடிவில்
அந்த அபராதம் ரத்துச்     செய்யப்பட்டு  விட்டதில் நான் வெற்றி
அடைந்தேன் என்று   இலேசாக ஞாபகம் இருக்கிறது. பள்ளிக்கூடம்
விட்டதும் நேரே வீட்டுக்கு  நான்  வந்துவிட வேண்டும் என்று தாம்
விரும்புவதாகத் தலைமையாசிரியருக்கு  என் தந்தையே எழுதியதன்
பேரில், தேகாப்பியாசத்திற்குப்    போகவேண்டும் என்பதில் இருந்து
விலக்குப்பெற்றேன்.

     தேகாப்பியாசத்தில் அசட்டையாக       இருந்து விட்டதனால்
எனக்குத் தீமை ஏற்படாது போனாலும் மற்றொரு  விஷயத்தில் நான்
அசட்டையாக இருந்து விட்டதன்        பலனை    இப்பொழுதும்
அனுபவித்துக் கொண்டு வருகிறேன். கையெழுத்து  நன்றாக இருக்க
வேண்டும் என்பது படிப்பில் ஒரு பகுதியல்ல என்ற கருத்து எனக்கு
எங்கிருந்து உண்டாயிற்று    என்று    தெரியவில்லை.       நான்
இங்கிலாந்துக்குப் போகும் வரையில் இந்த அபிப்பிராயமே  எனக்கு
இருந்தது. பிறகு, முக்கியமாகத்       தென்னாப்பிரிக்காவில், இளம்
வக்கீல்களும், தென்னாப்பிரிக்காவில்    பிறந்து. அங்கேயே படித்த
இளைஞர்களும் மிக அழகாக எழுதுவதைக் கண்டபோது என்னைக்
குறித்து நானே வெட்கப் பட்டதோடு ஆரம்பத்தில் அசிரத்தையுடன்
இருந்து விட்டதற்காக          வருந்தவும் செய்தேன். மோசமான
கையெழுத்தை, அரைகுறையான        படிப்புக்கு  அறிகுறியாகக்
கொள்ளவேண்டும் என்று      கருதினேன்.  கையெழுத்து நன்றாக
இருக்கும்படி செய்யப் பிறகு முயன்றேன். ஆனால், அதற்குக் காலம்
கடந்து போய் விட்டது. இளமையில்        அசட்டையாக இருந்து
விட்டதனால் ஏற்பட்ட தீமையைப் பிறகு என்றுமே நிவர்த்தி செய்து
கொள்ள இயலவில்லை. ஒவ்வோர் இளைஞரும்