பக்கம் எண் :

18சத்திய சோதனை

Untitled Document

இளம்பெண்ணும்,  என்னுடைய         உதாரணத்தைக்  கண்டாவது
எச்சரிக்கையுடன்    இருக்கட்டும் ; கையெழுத்து   நன்றாக  இருக்க
வேண்டியதும்         படிப்பின்   ஒரு பகுதி என்பதை அறியட்டும்.
குழந்தைகளுக்கு எழுத்துக்களை எழுதுவதற்குக் கற்றுக் கொடுப்பதற்கு
முன்னால் சித்திரம்      வரையக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று
இப்பொழுது     கருதுகிறேன். பூக்கள், பறவைகள் போன்றவைகளைக்
குழந்தை பார்த்தே       தெரிந்து     கொள்ளுவதைப்      போல,
எழுத்துக்களையும்   அது    பார்த்தே       தெரிந்து கொள்ளட்டும்.
பொருள்களைப் பார்த்து அவற்றை வரையக்   கற்றுக் கொண்ட பிறகு
எழுத்துக்களை எழுதக் கற்கட்டும். அப்பொழுது    அக்குழந்தையின்
கையெழுத்து அழகாக அமையும்.

     என் பள்ளிக்கூட நினைவுகளில்    குறிப்பிடத்தக்கவை மற்றும்
இரண்டு உண்டு. என் விவாகத்தினால்   எனக்கு ஒரு வருடப் படிப்பு
வீணாகி விட்டது. ஒரு வகுப்புத்   தாண்டி மேல் வகுப்பில் என்னைத்
தூக்கிப்போட்டு எனக்கு அந்த நஷ்டத்தை ஈடு செய்துவிட ஆசிரியர்
விரும்பினார். நன்றாக உழைத்துப் படிக்கும்  பிள்ளைகளுக்கே இந்தச்
சலுகையை அளிப்பது வழக்கம். நான்      மூன்றாம் வகுப்பில் ஆறு
மாதங்களே படித்தேன். கோடை விடுமுறைக்கு    முன்னால் நடக்கும்
பரீட்சைக்குப் பிறகு         என்னை நான்காம் வகுப்புக்கு அனுப்பி
விட்டார்கள். நான்காம்     வகுப்பிலிருந்து          பல  பாடங்கள்
ஆங்கிலத்திலேயே        போதிக்கப்பட்டன. எனக்கோ திக்குத்திசை
தெரியவில்லை. க்ஷேத்திர      கணிதம் புதுப்பாடம். ஏற்கனவே அது
எனக்கு அவ்வளவு நன்றாகத்     தெரியாது. அதை ஆங்கிலத்திலும்
போதிக்க   ஆரம்பித்து   விட்டதால்     எனக்கு இன்னும் அதிகக்
கஷ்டமாயிற்று. ஆசிரியர் இப்பாடத்தை மிக   நன்றாகவே  சொல்லிக்
கொடுத்தார். ஆனால் என்னால் விளங்கிக்    கொள்ள இயலவில்லை.
பன்முறையும் மனச்சோர்வடைந்து விடுவேன். மூன்றாம்   வகுப்புக்கே
திரும்பிப் போய்விடலாம் என்றும் எண்ணுவேன். இரண்டு    வருடப்
படிப்பை  ஒரே வருடத்தில் படித்துவிடலாம் என்பது அதிகப்படியான
ஆசை என்றும்    எனக்குத் தோன்றும், ஆனால், அப்படி மூன்றாம்
வகுப்புக்கே போய்விடுவது எனக்கு    மாத்திரமல்ல, ஆசிரியருக்கும்
அவமானம். ஏனெனில்       கஷ்டப்பட்டுப் படிக்கக்கூடியவன் நான்
என்று நம்பியே என்னை மேல்    வகுப்பில் சேர்க்க அவர் சிபாரிசு
செய்தார். இந்த இரண்டு       அவமானங்களையும் குறித்து எனக்கு
ஏற்பட்ட பயத்தினால்   விடாப்பிடியாகப்     படிக்கலானேன். அதிக
சிரமத்தின் பேரில்   யூக்ளிட்டின் பதின்மூன்றாவது பாடத்திற்கு வந்த
பிறகு அந்தப் பாடம் மிக    எளிதானது என்று திடீரென்று எனக்குத்
தோன்றியது. பகுத்தறிவின்          சக்தியைக் கொண்டு மாத்திரமே
கற்றுவிட முடியும். ஒரு பாடம் கஷ்டமானதாகவே