பக்கம் எண் :

நேட்டாலில் குடியேறினேன் 171

Untitled Document
எனலாம். ‘இத்தகைய    கடுமையான       மசோதாவுக்கு இந்தியர்,
தங்களுடைய எதிர்ப்பைத்   தெரிவிக்காததிலிருந்தே, வாக்குரிமைக்கு
அவர்கள்     தகுதியற்றவர்கள்  என்பது ருசுவாகிறது’ என்று சட்ட
சபையில் மசோதாவின் மீது பேசியவர்கள் கூறினர்.

     நிலைமையைப்    பொதுக்கூட்டத்திற்கு  விளக்கிக்  கூறினேன்.
நாங்கள் செய்த    முதல் காரியம்,   சட்டசபையின் சபாநாயகருக்குத்
தந்தி   கொடுத்ததாகும்,  மசோதாமீது  மேற்கொண்டும் விவாதிப்பதை
ஒத்தி   வைக்குமாறு        அவரைக் கோரினோம்.  அதே போன்ற
தந்திகளைப்     பிரதமர்         ஸர் ஜான் ராபின்ஸனுக்கும், தாதா
அப்துல்லாவின்      நண்பர்  என்ற முறையில் ஸ்ரீ எஸ்கோம்புக்கும்
அனுப்பினோம். மசோதாவின் விவாதம்  இரண்டு தினங்களுக்கு ஒத்தி
வைக்கப்படும் என்று     சபாநாயகர்    உடனே பதில் அனுப்பினார்.
இதனால் மகிழ்ச்சியடைந்தோம்.

     சட்டசபை   முன்பு  சமர்ப்பிப்பதற்கு மகஜரைத் தயாரித்தோம்.
அதற்கு     மூன்று பிரதிகள்      தயாரிக்க வேண்டி இருந்ததோடு
பத்திரிகைகளுக்கும்     தனியாக ஒரு   பிரதி    வேண்டியிருந்தது.
மகஜரில்    எவ்வளவு முடியுமோ அவ்வளவு கையெழுத்துக்களையும்
வாங்கிவிடுவதென்றும்     உத்தேசிக்கப்பட்டது.   இந்த வேலைகளை
எல்லாம் ஒரே   இரவில் செய்து முடிக்கவேண்டியிருந்தது. ஆங்கிலம்
தெரிந்த தொண்டர்களும்       மற்றும் பலரும் இரவெல்லாம் வேலை
செய்தனர்.    ஸ்ரீ ஆர்தர் வயதானவர்; அழகாக  எழுதுவதில் பெயர்
பெற்றவர்.    முக்கியப் பிரதியை அவரே எழுதினார்.  மற்றவைகளை
ஒருவர் படித்துச் செல்ல, மற்றவர்கள் எழுதினர்.     இவ்விதம் ஒரே
சமயத்தில் ஐந்து பிரதிகள்      தயாராகிவிட்டன.   தொண்டர்களான
வர்த்தகர்கள்     மகஜரில்    கையெழுத்து வாங்கத் தங்கள் சொந்த
வண்டிகளில்    சென்றனர்;     வாடகை வண்டிகளில் போனவர்கள்
தாங்களே வாடகையைக்   கொடுத்துவிட்டார்கள்.   இவைகளெல்லாம்
வெகுசீக்கிரத்தில்       செய்து   முடிக்கப் பெற்றன.   மகஜரையும்
அனுப்பிவிட்டோம்.   பத்திரிகைகளும் அதைப் பிரசுரித்து ஆதரவான
அபிப்ராயங்களை எழுதின. இவ்விதம்    அது சட்டசபையிலும் சிறிது
ஆதரவான    அபிப்ராயத்தை உண்டாக்கியது.  மகஜரைக்  குறித்துச்
சட்டசபையில்       விவாதித்தனர்.        மசோதாவைக் கொண்டு
வந்திருந்தவர்கள், மகஜரில் கூறப்பட்டிருந்த வாதங்களுக்குப்  பதிலாக
நிச்சயமாக நொண்டிச்    சமாதானங்களையே கூறினர்.    என்றாலும்
மசோதா நிறைவேறிவிட்டது.

     இப்படித்தான் நடக்கப்போகிறது என்பதை நாங்கள் எல்லோரும்
அறிவோம்.     ஆனால்,   அக்கிளர்ச்சி சமூகத்தினர் இடையே ஒரு
புத்துயிரை அளித்தது.      இந்தியர் யாவரும் பிரிக்க முடியாத ஒரே
சமூகத்தினர். வர்த்தக உரிமைக்காகப்