பக்கம் எண் :

நிறத் தடை 177

Untitled Document
உண்டு.ஐரோப்பிய வியாபாரிகளிடம் வாங்கி, நீங்கள் அனுப்பியிருக்கும்
நன்னடத்தை அத்தாட்சிகள் என்னைப் பொறுத்தவரை   பயனற்றவை.
உங்களைக்    குறித்து அவர்களுக்கு என்ன தெரியும்? அவர்களுக்கு
உங்களிடம் எவ்வளவு பழக்கம் இருக்க முடியும்?”

     “இங்கே எனக்கு       எல்லோருமே  புதியவர்கள்தான். சேத்
அப்துல்லாவும்     இங்கேதான்  முதல் முதலாக என்னை அறிவார்”
என்றேன்.

     “ஆனால், அவர் உங்கள் ஊரைச் சேர்ந்தவர் என்கிறீர்களே?
உங்கள் தகப்பனார்    அங்கே முல் மந்திரியாக இருந்தார் என்றால்,
சேத் அப்துல்லாவுக்கு உங்கள் குடும்பம் தெரிந்தே இருக்கவேண்டும்.
அவரிடமிருந்து    உறுதிமொழிப்   பத்திரத்தை    நீங்கள் தாக்கல்
செய்வதாக   இருந்தால்,  எனக்குக்     கொஞ்சமும்  ஆட்சேபமே
இல்லை.  அப்பொழுது    உங்கள் மனுவை       நான் எதிர்த்துப்
பேசுவதற்கில்லை என்று வக்கீல்கள் சங்கத்திற்குச் சந்தோஷமாகவே
அறிவித்து விடுவேன்” என்றார்.

     அவருடைய  இந்தப் பேச்சு எனக்கு ஆத்திரத்தை மூட்டியது.
ஆனால்,      என்     உணர்ச்சிகளை   அடக்கிக் கொண்டேன்.
என்னுள்ளேயே பின்வருமாறு  சொல்லிக் கொண்டேன் :    “தாதா
அப்துல்லாவின் அத்தாட்சியை நான் தாக்கல் செய்திருந்தால் அதை
நிராகரித்திருப்பார்கள்;  ஐரோப்பியரிடமிருந்து அத்தாட்சி வேண்டும்
என்றும்   கேட்டிருப்பார்கள். நான் அட்வகேட்டாகப் பதிவு செய்து
கொள்வதற்கும்       என் பிறப்புக்கும்    பூர்வோத்தரங்களுக்கும்
என்ன    சம்பந்தம்?   என்        பிறப்பு எளிமையானதாகவோ,
ஆட்சேபகரமானதாகவோ இருக்குமாயின்,  அதை   எப்படி எனக்கு
எதிராக உபயோகிக்க முடியும்?” ஆனால், என் கோபத்தையெல்லாம்
அடக்கிக்    கொண்டு அமைதியாக அவருக்குப் பின்வருமாறு பதில்
சொன்னேன்:

     “அந்த   விவரங்களையெல்லாம்  கேட்பதற்கு     வக்கீல்கள்
சங்கத்திற்கு       எந்தவிதமான     அதிகாரமும் இருப்பதாக நான்
ஒப்புக்கொள்ளாவிட்டாலும்,    நீங்கள் விரும்பும்       அத்தாட்சிப்
பத்திரத்தைத் தாக்கல் செய்யத் தயாராக இருக்கிறேன்.”

     சேத் அப்துல்லாவின் அத்தாட்சியைத்    தயாரித்து, வக்கீல்கள்
சங்கத்தின் ஆலோசகரிடம்   சமர்ப்பித்தேன்.  தாம் திருப்தியடைந்து
விட்டதாக அவர்      சொன்னார். ஆனால், வக்கீல்கள் சங்கத்தினர்
திருப்தியடையவில்லை.       சுப்ரீம் கோர்ட்டில்      என் மனுவை
எதிர்த்தார்கள்.   இந்த எதிர்ப்புக்குப்       பதில் சொல்லுமாறு என்
மனுவைத் தாக்கல் செய்த    ஸ்ரீ எஸ்கோம்பைக்கூட அழைக்காமலே,
கோர்ட்டு, அச்சங்க  எதிர்ப்பை நிராகரித்து விட்டது.  பிரதம நீதிபதி
கூறியதாவது: “மனுதாரர், தம்முடைய மனுவுடன் அசல்