பக்கம் எண் :

178சத்திய சோதனை

Untitled Document
அத்தாட்சிப் பத்திரத்தையும் தாக்கல் செய்யவில்லை என்ற ஆட்சேபம்
அர்த்தம் இல்லாதது. அவர் பொய்ப்      பிரமாணப் பத்திரம் தாக்கல்
செய்திருந்தால்,      அவர் மீது வழக்குத் தொடுத்து,  அவர் குற்றம்
செய்திருப்பதாக நிரூபிக்கப்பட்டால்     வக்கீல்பட்டியலிலிருந்து இவர்
பெயரை      நீக்கிவிடலாம்.    வெள்ளையருக்கும்    வெள்ளையர்
அல்லாதவர்களுக்கும் இடையே எந்தவிதமான பாகுபாட்டையும் சட்டம்
கற்பிக்கவில்லை. ஆகவே ஸ்ரீ காந்தி அட்வகேட்டாகத் தம்மைப் பதிவு
செய்து     கொள்ளுவதைத் தடுக்கக் கோர்ட்டுக்கு எந்த அதிகாரமும்
இல்லை.    அவருடைய மனுவை ஏற்றுக் கொள்ளுகிறோம். ஸ்ரீ காந்தி,
இப்பொழுது நீர் பிரமாணம் எடுத்துக் கொள்ளலாம்.”

     நான்   எழுந்துபோய்   ரெஜிஸ்டிரார்    முன்பு    பிரமாணம்
எடுத்துக்கொண்டேன். நான் பிரமாணம் எடுத்துக்கொண்டதும்  பிரதம
நீதிபதி என்னைப் பார்த்துக் கூறியதாவது:

     “ஸ்ரீ காந்தி,   நீர் உம்முடைய   தலைப்பாகையை இப்பொழுது
எடுத்துவிட வேண்டும். தொழில் நடத்தும் பாரிஸ்டர்கள்  சம்பந்தமாக
உள்ள கோர்ட்டின் விதிகளை அனுசரித்து நீங்கள் நடக்க வேண்டும்.”

     எனக்குரிய    வரம்புகளை    நான் உணரலானேன்.  ஜில்லா
மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் நான் எடுக்க மறுத்த தலைப்  பாகையைச்
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்குப் பணிந்து    எடுத்து விட்டேன். இந்த
உத்தரவை நான் எதிர்த்திருந்தால், அந்த எதிர்ப்பு    நியாயமானதாக
இருந்திருக்காது என்பதல்ல. ஆனால்,        என் பலத்தைப் பெரிய
விஷயங்களில்     போராடுவதற்காகச்       சேமித்து வைக்க நான்
விரும்பினேன். தலைப்பாகையை வைத்துக் கொண்டுதான் இருப்பேன்
என்பதை வற்புறுத்துவதில் என்னுடைய    ஆற்றலையெல்லாம் நான்
செலவிட்டுவிடக் கூடாது.     அது,    சிறந்த    லட்சியத்திற்காகப்
பாடுபடுவதற்கு உரியதாகும்.

     நான் பணிந்துவிட்டது (அல்லது என் பலவீனமோ என்னவோ?
சேத் அப்துல்லாவுக்கும் மற்ற      நண்பர்களுக்கும் பிடிக்கவில்லை.
கோர்ட்டில்,           வக்கீல்  தொழிலை நடத்தி வரும்போது என்
தலைப்பாகையை வைத்துக்கொள்ள எனக்குள்ள உரிமையை விடாமல்
நான் வற்புறுத்தியிருக்க வேண்டும் என்று   அவர்கள் கருதினர். என்
நியாயத்தை       எடுத்துக் கூறி    அவர்களுக்குத் திருப்தியளிக்க
முயன்றேன்.   ரோமில்   இருக்கும்போது   ரோமர்கள் செய்வதைப்
போலவே நீயும் செய் என்ற  பழமொழியினை அவர்கள் உணரும்படி
செய்ய    முயன்றேன்.  “இந்தியாவில் ஓர்  ஆங்கில அதிகாரியோ,
நீதிபதியோ          உங்கள்   தலைப்பாகையை எடுத்து விடுமாறு
சொன்னால் அதற்கு உடன்பட மறுத்துவிடுவது சரியானதாக இருக்கும்.
ஆனால், நேட்டால் மாகாணத்தில்