பக்கம் எண் :

180சத்திய சோதனை

Untitled Document
காங்கிரஸ்’ எனப் பெயரிடவேண்டும் என்று விரிவான விளக்கத்துடன்
நான்   சிபாரிசு செய்தேன்.    மே மாதம் 22ஆம் தேதி,  நேட்டால்
இந்தியர் காங்கிரஸ் பிறந்தது.

     சேத்  அப்துல்லாவின் விசாலமான அறை முழுவதிலும் அன்று
ஒரே கூட்டம்    நிறைந்துவிட்டது.   வந்திருந்தவர்கள் எல்லோரும்
காங்கிரஸைக்     குதூகலமாக வரவேற்றனர். அதன் அமைப்பு விதி
எளிதானது. சந்தா மாத்திரம் அதிகம்.        மாதம் ஐந்து ஷில்லிங்
கொடுப்பவர் மாத்திரமே          அங்கத்தினராகலாம்.  பண வசதி
உள்ளவர்கள்,        தங்களால்    இயன்ற வரையில் தாராளமாகக்
கொடுக்கும்படி  கேட்டுக் கொள்ளப்பட்டனர்.  மாதம் இரண்டு பவுன்
தருவதாக அப்துல்லா சேத் முதலில் கையெழுத்திட்டார். மற்றும் இரு
நண்பர்களும் அதேபோல் கையெழுத்திட்டனர். நானும்   என் சந்தா
விஷயத்தில் தாராளமாக       கொடுக்க நினைத்து மாதத்திற்கு ஒரு
பவுன் என்று       எழுதினேன்.   என்னைப்  பொறுத்தவரை இது
சின்னத்தொகை    அல்ல.   நான் சம்பாதித்து,  என் வாழ்க்கையை
நடத்திக்கொண்டு   போவதெனில்,   இத் தொகை    என் சக்திக்கு
மிஞ்சியதென்று எண்ணினேன். கடவுளும் எனக்கு   உதவி செய்தார்.
மாதம் ஒரு பவுன் சந்தா செலுத்தும் உறுப்பினர்கள் பலர் சேர்ந்தனர்.
மாதம் 10 ஷில்லிங் தருவதாக      முன்வந்தவர்களின் தொகையோ
இன்னும் அதிகம்.   இவையெல்லாம் போக       நன்கொடையாகக்
கொடுக்கப்பட்டதையும் நன்றியுடன் ஏற்றுக்கொண்டோம்.

     கேட்ட   மாத்திரத்திலேயே யாரும்      சந்தாவைச் செலுத்தி
விடுவதில்லை என்பது  அனுபவத்தில்   தெரியலாயிற்று.  டர்பனுக்கு
வெளியிலிருந்த     உறுப்பினர்களிடம்  அடிக்கடி போய்க் கேட்பது
என்பதும் முடியாதது. ஒரு சமயம் இருக்கும் உற்சாகம்  இன்னுமொரு
சமயம் இருப்பதில்லை. டர்பனில் இருந்த   உறுப்பினர்களிடம் கூடப்
பன்முறை       விடாமல் கேட்டுத்   தொந்தரவு செய்துதான் சந்தா
வசூலிக்க வேண்டியதிருந்தது.

     நானே     காரியதரிசியாகையால்,  சந்தா வசூலிக்கும் வேலை
என்னுடையதாயிற்று. என் குமாஸ்தா, நாளெல்லாம் சந்தா வசூலிக்கும்
வேலையிலேயே ஈடுபட்டிருக்க வேண்டிய   ஒரு நிலைமை ஏற்பட்டு
விட்டது.          அவரும்  அலுத்துப் போனார்.  இந்த நிலைமை
மாறவேண்டுமானால்,      மாதச் சந்தா என்பதற்குப் பதிலாக அதை
வருடச் சந்தாவாக்கி,     அந்தச் சந்தாவைக்     கண்டிப்பாக முன்
பணமாகச் செலுத்திவிடச்   செய்துவிடவேண்டும் என்று கருதினேன்.
ஆகவே காங்கிரஸின்      கூட்டத்தைக் கூட்டினேன். மாதச் சந்தா
என்பதற்குப் பதிலாக, அதை வருடச் சந்தாவாகச்    செய்துவிடுவது
என்பதையும்,     குறைந்த பட்ச           சந்தா 3 பவுன் என்று
நிர்ணயிப்பதையும் எல்லோரும் வரவேற்றனர். இவ்விதம்