பக்கம் எண் :

நேட்டால் இந்தியர் காங்கிரஸ்181

Untitled Document
வசூல் வேலை அதிக எளிதாயிற்று.

     கடன் வாங்கி,        அந்தப்   பணத்தைக் கொண்டு  பொது
வேலையைச்   செய்யக்கூடாது   என்பதை       ஆரம்பத்திலேயே
அறிந்துகொண்டிருந்தேன். மக்களின் வாக்குறுதியை   எல்லாவற்றிலும்
நம்பலாம்; ஆனால்,       பண விஷயத்தில் மாத்திரம் நம்பக்கூடாது.
கொடுப்பதாகத் தாங்கள்     ஒப்புக்கொண்ட பணத்தைச் சீக்கிரத்தில்
கொடுக்கக் கூடியவர்களை     நான் பார்த்ததே இல்லை.  நேட்டால்
இந்தியர்களும் இதற்கு   விலக்கானவர்கள் அல்ல.   எனவே, பணம்
இருந்தால் ஒழிய     எந்த வேலையையும் செய்வதில்லையாகையால்,
நேட்டால் இந்தியர் காங்கிரஸ் கடன்பட்டதே இல்லை.

     அங்கத்தினர்களைச் சேர்ப்பதில் என்   சக ஊழியர்கள் அதிக
உற்சாகத்துடன் வேலை செய்தார்கள். அந்த வேலை அவர்களுடைய
மனத்திற்குப் பிடித்ததாக      இருந்ததோடு, அது அதிகப் பயனுள்ள
அனுபவமாகவும்  இருந்தது.   ஏராளமானவர்கள் ரொக்கமாகச் சந்தா
கொடுத்துச்     சேர  முன்வந்தனர்.   தொலைவாக,   உள்நாட்டில்
இருந்த கிராமங்களின்    விஷயத்தில்தான்   வேலை கஷ்டமானதாக
இருந்தது. பொது வேலையின்     தன்மையை மக்கள் அறியவில்லை.
என்றாலும்,   தொலை தூரங்களில்       இருந்த இடங்களிலிருந்தும்
எங்களுக்கு    அழைப்புக்கள் வந்தன.   ஒவ்வோர்     இடத்திலும்
முக்கியமான    வியாபாரிகள்    எங்களை   வரவேற்று, வேண்டிய
உதவிகளைச் செய்ய முன்வந்தார்கள்.

     இந்தச் சுற்றுப் பிரயாணத்தின் போது    ஒரு சமயம் நிலைமை
சங்கடமானதாகிவிட்டது.   நாங்கள் யாருடைய       விருந்தினராகச்
சென்றிருந்தோமோ,   அவர்       ஆறு பவுன்  கொடுப்பார் என்று
எதிர்பார்த்தோம். ஆனால், அவரோ மூன்று பவுனுக்கு மேல்  எதுவும்
கொடுக்க     மறுத்துவிட்டார்.   அவரிடமிருந்து    அத்தொகையை
வாங்கிக்     கொண்டோமாயின்   மற்றவர்களும்  அது   மாதிரியே
கொடுப்பார்கள். எங்கள்  வசூல் கெட்டுவிடும்.   அன்று இரவு வெகு
நேரம் ஆகி விட்டது.     எங்களுக்கோ பசி.  ஆனால்,  ‘அவரிடம்
வாங்கியே      தீருவது’  என்று   நாங்கள்  முடிவு கட்டிக்கொண்ட
தொகையை அவரிடம் வாங்காமல் அவர் வீட்டில்  நாங்கள் எப்படிச்
சாப்பிடுவது?      என்ன சொல்லிப் பார்த்தும் பயனில்லை. அவரோ
பிடிவாதமாக இருந்தார். அவ்வூரின் மற்ற வர்த்தகர்களும் அவருக்குச்
சொல்லிப்  பார்த்தார்கள். இரவெல்லாம்      அப்படியே எல்லோரும்
உட்கார்ந்திருந்தோம்.    அவரும்  பிடிவாதமாக இருந்தார். நாங்களும்
பிடிவாதமாக இருந்தோம். என் சக  ஊழியர்களில் பலருக்குக் கோபம்
பொங்கிற்று.       ஆனால்,   அடக்கிக்கொண்டார்கள். கடைசியாகப்
பொழுதும் விடிந்து விட்ட பிறகு அவர் இணங்கி