பக்கம் எண் :

பாலசுந்தரம் 185

Untitled Document
ஏற்பட்டிருக்கும் காயங்களின் தன்மையைக் குறித்து, டாக்டரிடமிருந்து
ஓர் அத்தாட்சி      வேண்டுமென்று கேட்டேன் ;  அத்தாட்சியைப்
பெற்றேன். காயமடைந்தவரை நேரே மாஜிஸ்டிரேட்டிடம் அழைத்துச்
சென்றேன். அவரிடம் பாலசுந்தரத்தின் பிரமாண   வாக்குமூலத்தைச்
சமர்ப்பித்தேன்.   அதை படித்ததும்  மாஜிஸ்டிரேட்   எரிச்சலுற்றார்.
எஜமானுக்கு சம்மன் அனுப்பினார்.

     அந்த எஜமான்  தண்டிக்கப்பட வேண்டும்  என்பதன்று  என்
விருப்பம். அவரிடமிருந்து பாலசுந்தரம்  விடுதலை பெற   வேண்டும்
என்றே நான் விரும்பினேன்.   ஒப்பந்தத்     தொழிலாளரைப்பற்றிய
சட்டங்களைப் படித்தேன். சாதாரண   வேலைக்காரன் ஒருவன், முன்
கூட்டி அறிவிக்காமல் வேலையை    விட்டுப் போய்  விடுவானாயின்,
எஜமான்      அவன்மீது சிவில் கோர்ட்டில்  வழக்குத் தொடரலாம்.
ஆனால்,     ஒப்பந்தத் தொழிலாளியின் விஷயத்திலோ  இம் முறை
முற்றும்   மாறானது.  அதேபோன்ற   நிலையில்        முன்கூட்டி
அறிவிக்காமல் ஓர் ஒப்பந்தத்  தொழிலாளி  போய்விட்டால், எஜமான்
அத்தொழிலாளிமீது கிரிமினல்     கோர்ட்டில் வழக்குத் தொடுத்துத்
தண்டித்துச் சிறையில் இடலாம். இதனாலேயே இந்த  ஒப்பந்த முறை,
அடிமைத் தனத்தைப் போல் மிக மோசமானது என்று, ஸர் வில்லியம்
ஹண்டர் கூறினார். ஓர் அடிமையைப் போன்றே  ஒப்பந்தக் கூலியும்
எஜமானனின் சொத்து.

     பாலசுந்தரத்தை விடுவிப்பதற்கு, இருந்த வழிகள்  இரண்டுதான்.
ஒப்பந்தத்   தொழிலாளரின்     பாதுகாப்பாளரைக்       கொண்டு,
பாலசுந்தரத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்யும்படி செய்யலாம். அல்லது
வேறு         ஓர் எஜமானிடம்   அவரை மாற்றிவிடச் செய்யலாம்.
இல்லையாயின் பாலசுந்தரத்தின்        எஜமான் அவரை விடுவித்து
விடுமாறு செய்யலாம். அந்த      எஜமானிடம் சென்று பின்வருமாறு
கூறினேன்: “உங்கள் மீது வழக்குத் தொடுத்து, நீங்கள்    தண்டனை
அடைய வேண்டும் என்று நான்  விரும்பவில்லை. அவரைப் பலமாக
அடித்துவிட்டீர்கள்       என்பதை  நீங்கள் உணருகிறீர்கள் என்றே
நம்புகிறேன். அவருடைய ஒப்பந்தத்தை     மற்றொருவருக்கு நீங்கள்
மாற்றி விடுவீர்களாயின்   நான் திருப்தியடைவேன்”.  இதற்கு அவர்
உடனே       சம்மதித்து விட்டார்.  பிறகு ஒப்பந்தத் தொழிலாளரின்
பாதுகாப்பாளரைப்     போய்ப் பார்த்தேன். புதிய எஜமான் ஒருவரை
நான் கண்டுபிடிப்பதாக இருந்தால் அதற்குத் தாமும்    சம்மதிப்பதாக
அவர் கூறினார்.

     எனவே, ஓர் எஜமானைத்    தேடிப் புறப்பட்டேன். ஒப்பந்தத்
தொழிலாளியை    இந்தியர் யாரும் வேலைக்கு வைத்துக் கொள்ளக்
கூடாதாகையால், நான் தேடும் எஜமான் வெள்ளைக்காரராகவே