பக்கம் எண் :

186சத்திய சோதனை

Untitled Document
இருக்க    வேண்டும்.    அப்பொழுது     எனக்கு    மிகச்  சில
ஐரோப்பியர்களையே தெரியும். அவர்களில் ஒருவரைச்  சந்தித்தேன்.
பால சுந்தரத்தை வைத்துக்கொள்ள   அவர் மிக அன்புடன்  ஒப்புக்
கொண்டார்.     அவருடைய    அன்பை நன்றியறிதலோடு  ஏற்றுக்
கொண்டேன். பால சுந்தரத்தின் எஜமான்     குற்றஞ்செய்திருப்பதாக
மாஜிஸ்டிரேட் முடிவு கூறினார்.     ஒப்பந்தத்தை வேறு ஒருவருக்கு
மாற்றிவிட அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார் என்றும்   பதிவு செய்தார்.

     பாலசுந்தரத்தின்     வழக்கு,   ஒப்பந்தத்       தொழிலாளர்
ஒவ்வொருவருடைய காதுக்கும் எட்டிவிட்டது.   அவர்கள் என்னைத்
தங்களுடைய நண்பனாகக் கருதினார்கள்.இந்தத் தொடர்பைக் குறித்து,
நான் அளவற்ற   மகிழ்ச்சியடைந்தேன்.  ஒப்பந்தத் தொழிலாளர்கள்,
ஓயாமல்        என்  காரியாலயத்திற்கு வந்த வண்ணம் இருந்தனர்.
அவர்களுடைய       இன்ப துன்பங்களை அறிந்து கொள்ளுவதற்கு
எனக்குச் சிறந்த வாய்ப்பு அதனால் ஏற்பட்டது.

     பாலசுந்தரம் வழக்கின் எதிரொலி, தொலை தூரத்தில் இருக்கும்
சென்னையிலும்       கேட்டது.  அம்மாகாணத்தின் பல பகுதிகளில்
இருந்தும் ஒப்பந்தத்  தொழிலாளராக நேட்டாலுக்கு வந்திருந்தவர்கள்
தங்கள் சகோதரத் தொழிலாளர்களின் மூலம் இவ்வழக்கைக் குறித்து
அறியலாயினர்.

     அவ் வழக்கைப்    பொறுத்தவரையில்        அதில் அதிக
விசேஷமானது       எதுவும் இல்லை. ஆனால்,  தங்கள் கட்சியை
எடுத்துப்    பேசுவதற்கும்,    தங்களுக்காகப் பகிரங்கமாக வேலை
செய்வதற்கும், நேட்டாலில்   ஒருவர் இருக்கிறார் என்பது, ஒப்பந்தத்
தொழிலாளருக்கு ஆனந்தத்தோடு கூடிய   அதிசயமாக இருந்ததோடு,
அதனால் அவர்களுக்கு ஒரு நம்பிக்கையும் உண்டாயிற்று.

     முண்டாசுத் துணியைக் கையில் வைத்துக்கொண்டு, பாலசுந்தரம்
என்   காரியாலயத்திற்குள் வந்தார்  என்று ஆரம்பத்தில் கூறினேன்.
இதில் நமது  மானக்கேட்டைக் காட்டும் துக்ககரமான அம்சம் ஒன்று
இருக்கிறது. என் தலைப்பாகையை எடுத்துவிடும்படி  கூறப்பட்டதைக்
குறித்த     சம்பவத்தை முன்பே     விவரித்திருக்கிறேன். தலையில்
வைத்திருப்பது      குல்லாயாக    இருந்தாலும்,  தலைப்பாகையாக
இருந்தாலும்,     தலையில் சுற்றிய   ஒரு துண்டாக இருந்தாலும் ஓர்
ஐரோப்பியரைப்       பார்க்கப் போகும்போது, ஒவ்வோர் ஒப்பந்தத்
தொழிலாளியும்,        புதிதாக வந்த ஒவ்வோர் இந்தியரும், அதைத்
தலையிலிருந்து எடுத்தாக      வேண்டும். இரண்டு கைகளால் சலாம்
போட்டாலும் போதாது. இந்தப் பழக்கம் நிர்ப்பந்தமாகச் சுமத்தப்பட்டு
வந்திருக்கிறது. என் விஷயத்திலும் அதே    பழக்கத்தை அனுசரிக்க
வேண்டும் என்று     பாலசுந்தரம் கருதியிருக்கிறார்.   அதனாலேயே
முண்டாசுத் துணியைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு என்னிடம்