பக்கம் எண் :

பல மதங்களைக் குறித்து ஆராய்சி 193

Untitled Document
     டால்ஸ்டாயின்    நூல்களையும்  அதிகக் கவனத்துடன் படித்து
வந்தேன்.  ‘சுவிசேஷங்களின் சுருக்கம்’,  ‘செய்ய வேண்டியது யாது?’
என்ற     நூல்களும்  மற்றவைகளும்    என் மனத்தைக் கவர்ந்தன.
பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றினிடமும் அன்பு   செலுத்துவதற்கான
எண்ணிறந்த வழிகளை மேலும் மேலும் உணரலானேன்.

     அந்தச் சமயத்தில்    மற்றொரு   கிறிஸ்துவக் குடும்பத்துடனும்
எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் கூறிய யோசனையின் பேரில்
ஞாயிற்றுக்கிழமை தோறும் வெஸ்லியின் கிறிஸ்தவாலயத்திற்குச் சென்று
வந்தேன்.   இத் தினங்களில் தங்கள் வீட்டுக்கு இரவுச் சாப்பாட்டுக்கு
வரும்படியும்    என்னை   அவர்கள்         அழைத்திருந்தார்கள்.
அக்கோயிலுக்குப்    போய்      வந்ததில்   என் மனத்தில் திருப்தி
உண்டாகவில்லை.    அங்கே      செய்யப்பட்ட உபதேசங்கள் பக்தி
சிரத்தையை   உண்டாக்குபவையாகத் தோன்றவில்லை. அங்கே வந்து
கூடியிருந்தவர்களும் முக்கியமாகச் சமய சிரத்தையுடன் வந்திருந்ததாக
எனக்குத் தோன்றவில்லை.   அக்கூட்டம்   பக்திமான்களின் கூட்டம்
அன்று.    உலகப் பற்றே        அதிகமாக உள்ளவர்கள், பொழுது
போக்குக்காகவும்,   பழக்கத்தையொட்டியும்            கோயிலுக்கு
வந்திருப்பதாகவே தோன்றியது. அங்கே, சிலசமயங்களில் என்னையும்
அறியாமலேயே     எனக்குத்  தூக்கம் வந்து விடுவது உண்டு. இது
எனக்கு      வெட்கமாக இருக்கும்.     ஆனால்,  என் பக்கத்தில்
இருப்பவர்களில் சிலரும் அப்படித்தான் தூங்குகிறார்கள்  என்பதைப்
பார்த்ததும்       என் வெட்கம் குறைந்து விடும்.  இப்படியே நான்
நீண்டகாலம் கோயிலுக்குப் போய்க் கொண்டிருக்க முடியாது. ஆகவே
கோயிலுக்குப் போவதைச் சீக்கிரத்தில் நிறுத்தி விட்டேன்.

     ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்  நான் போய்க் கொண்டிருந்த
குடும்பத்துடன் தொடர்பு திடீரென்று முறிந்தது.  உண்மையில்,  இனி
வர வேண்டாம் என்று நான்   எச்சரிக்கை செய்யப்பட்டேன் என்று
சொல்லலாம். இது நிகழ்ந்த விதம் இதுதான்:  அந்த வீட்டு அம்மாள்
நல்லவர்;   சூதுவாது இல்லாதவர்; ஆனால்,  அவருக்குக் கொஞ்சம்
குறுகிய புத்தியும் உண்டு. எப்பொழுதும் நாங்கள் சமய சம்பந்தமான
விஷயங்களைக்   குறித்து     விவாதிப்போம்.    அச்சமயம் நான்
அர்னால்டு    எழுதிய ‘ஆசிய ஜோதி’    என்ற நூலைப் படித்துக்
கொண்டிருந்தேன். ஒரு சமயம்   ஏசுநாதரின் வாழ்க்கையோடு புத்த
பகவானின்       வாழ்க்கையை   ஒப்பிட்டுப் பேசலானோம். நான்
சொன்னேன் :     “புத்தரின் அபாரமான கருணையைப் பாருங்கள்!
அக் கருணை,    மனிதவர்க்கத்தோடு   நின்றுவிடவில்லை ; எல்லா
ஜீவராசிகளிடத்திலும்    அக் கருணை   பரவியது.    அவருடைய
தோள்களில்   ஆட்டுக்குட்டி      ஆனந்தமாகப்        படுத்துக்
கொண்டிருந்ததை எண்ணும்போது நம் உள்ளத்தில்