பக்கம் எண் :

194சத்திய சோதனை

Untitled Document
அன்பு   வெள்ளம்       பொங்குகிறதல்லவா?    இவ்விதம் எல்லா
ஜீவராசிகளிடத்தும்    அன்பு கொள்ளுவது     என்பது ஏசுநாதரின்
வாழ்க்கையில்       காணப்படவில்லை”. இவ்விதம் நான் ஒப்பிட்டுக்
கூறியது அந்த    நல்ல பெண்மணிக்கு  மனவருத்தத்தை உண்டாக்கி
விட்டது.    அவருக்கு ஏற்பட்ட     உணர்ச்சியை நான் அறிந்தேன்.
அப்பேச்சை நிறுத்தி விட்டேன்.    பிறகு சாப்பிடப் போனோம். ஐந்து
வயது கூட ஆகாத அவருடைய      ஆண்குழந்தையும் எங்களுடன்
இருந்தான்; குழந்தைகளின் நடுவில்     இருக்கும்போது, நான் அதிக
ஆனந்தத்துடன்    இருப்பேன்.  நீண்ட நாட்களாகவே அச்சிறுவனும்
நானும்       நண்பர்கள்.       சாப்பிடும் போது,  அவன் தட்டில்
இருந்த  மாமிசத்தை இகழ்ச்சியாகவும், என் தட்டில் இருந்த ஆப்பிள்
பழத்தைப்  பெருமைப்படுத்தியும் பேசினேன்.  கள்ளங் கபடம் அற்ற
அச்சிறுவன்   என் பேச்சில் மயங்கி விட்டான் ;  அவனும் ஆப்பிள்
பழத்தின் பெருமையைப் பேச ஆரம்பித்து விட்டான்.

     ஆனால்,   அவன்  தாயாரோ   அப்படியே      திகைத்துப்
போய்விட்டார்.       அது எனக்கு எச்சரிக்கையாக இருந்தது. என்
பேச்சை நிறுத்தி, வேறு விஷயத்தைக் குறித்து  பேச ஆரம்பித்தேன்.
வழக்கம் போல்        அடுத்தவாரம்  அவ்வீட்டுக்குப்  போனேன்.
நடுக்கத்தோடுதான்    போனேன்.  அங்கே போகாமல் இருந்து விட
வேண்டும் என்றும்  எனக்குத் தோன்றவில்லை. அப்படியே போகாது
நின்றுவிடுவது சரி  என்றும் எனக்குப் படவில்லை.  ஆனால் அந்த
நல்ல பெண்மணி எனக்கு வழியை எளிதாக்கி விட்டார்.

     அவர் கூறியதாவது: “ஸ்ரீ காந்தி!   உம்முடைய சகவாசம் என்
பையனுக்கு   நன்மையானதாகாது    என்று    நான் உங்களுக்குச்
சொல்லிவிட வேண்டியிருக்கிறது. இப்படிச்  சொல்ல நேர்ந்ததற்காகத்
தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.    ஒவ்வொரு நாளும் அவன்
மாமிசம் சாப்பிடத் தயங்குகிறான்.       உங்கள் வாதத்தை நினைவு
படுத்திப்    பழமே வேண்டும் என்கிறான். காரியம் மிஞ்சி விட்டது.
அவன்    மாமிசம்     சாப்பிடுவதை      விட்டுவிட்டால் அவன்
நோயுறாவிட்டாலும்    அவன் இளைத்தாவது போவான். இதை நான்
எப்படிச் சகிப்பது? இனிமேல்      உங்களுடைய வாதங்களெல்லாம்
பெரியவர்களாகிய         எங்களிடம் மட்டும் இருக்கட்டும். அந்த
வாதங்களினால் குழந்தைகள் கெட்டுப் போவது நிச்சயம்.”

     நான் பின்வருமாறு பதில் சொன்னேன்: “அம்மா! நான் மிகவும்
வருந்துகிறேன். எனக்கும்   குழந்தைகள் இருக்கின்றன. ஆகையால்,
தாய் என்ற வகையில்       உங்களுடைய    உணர்ச்சிகளை நான்
அறிகிறேன்.   இத்தகைய வருந்தத்தக்க நிலைமையை நாம் எளிதில்
ஒரு முடிவுக்குக்       கொண்டு வந்து விட முடியும். நான் வாயால்
சொல்வதை விட நான் எதைச் சாப்பிடுகிறேன்,  எதைச் சாப்பிடாமல்
ஒதுக்குகிறேன் என்பதைப் பார்ப்பது, குழந்தையின்