பக்கம் எண் :

ஒரு துக்கமான சம்பவம் 21

Untitled Document
என்று  என் தாயார்,   என் மூத்த அண்ணன்,       என் மனைவி
முதலியவர்கள் எல்லோரும் எனக்கு எச்சரிக்கை  செய்தார்கள். என்
மனைவியின் எச்சரிக்கையை    நான் மதிக்கவில்லை. ஆனால், என்
தாயார், மூத்த அண்ணன்  ஆகியோருடைய கருத்துக்கு விரோதமாக
நான் நடக்கத் துணியவில்லை.            ஆகவே, அவர்களுக்குப்
பின்வருமாறு சமாதானம் கூறினேன்: நீங்கள்  கூறும் குறைகளெல்லாம்
அவரிடம்  இருக்கின்றன    என்பதை    நான் அறிவேன். ஆனால்
அவரிடம் இருக்கும் நற்குணங்கள்  உங்களுக்குத் தெரியா. அவரைத்
திருத்திவிட வேண்டும்        என்பதற்காகவே, நான்    அவருடன்
பழகுவதால் அவர்        என்னைக் கெடுத்துவிட முடியாது. அவர்
தம்முடைய வழிகளை  மாத்திரம் திருத்திக் கொண்டு விட்டால் மிகச்
சிறந்தவராகி விடுவார்     என்பது நிச்சயம். ஆகையால், எனக்காக
நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று        உங்களை வேண்டிக்
கொள்கிறேன்.

     நான் இவ்விதம் கூறியது அவர்களுக்குத் திருப்தியளித்திருக்கும்
என்று நான்   எண்ணவில்லை          என்றாலும், அவர்கள் என்
சமாதானத்தை    ஏற்றுக்கொண்டு     என் வழியே போக என்னை
அனுமதித்து விட்டார்கள்.

     நான் அப்பொழுது   எண்ணியதெல்லாம்   தவறு  என்பதைப்
பிறகு கண்டேன். சீர்திருத்த   முற்படுகிறவர், யாரைச்    சீர்திருத்த
விரும்புகிறாரோ அவரிடம்          நெருங்கிய சகவாசம் வைத்துக்
கொள்ளலாகாது.ஆன்ம ஒருமைப்பாடே உண்மையான நட்பு.ஆனால்,
அத்தகைய    நட்பை  இவ்வுலகில்     காண்பது அரிது. ஒரேவித
சுபாவமுள்ளவர்களிடையே   ஏற்படும் நட்பே முற்றும் சிறந்ததாகவும்
நீடித்ததாகவும் இருக்கும்.   நண்பர்களில்          ஒருவர் குணம்
இன்னொருவருக்குப் படிகிறது. ஆகவே நட்பினால்    சீர்திருத்துவது
என்பதற்கு அதிக இடமே இல்லை.  தனிப்பட்டு அன்னியோன்யமாக
நெருங்கிப் பழகுவதையெல்லாம் தவிர்க்க   வேண்டும் என்பதே என்
அபிப்பிராயம். ஏனெனில், மனிதனிடம்        நற்குணங்களை விடத்
தீயகுணங்களே எளிதில் படிந்து விடுகின்றன. கடவுளோடு தோழமை
கொள்ள விரும்புவோர் தனியே  விலகி இருக்க வேண்டும்; அல்லது
உலகம் முழுவதையுமே    தமது நண்பனாக்கிக் கொள்ள வேண்டும்.
நான் கூறுவது     தவறாக இருக்கலாம். என்றாலும், ஒரு நெருங்கிய
நட்பை வளர்த்துக் கொள்ள நான் செய்த   முயற்சியில் தோல்வியே
ஏற்பட்டது.

     ராஜ்கோட் முழுவதிலும் சீர்திருத்தம் என்ற அலையின் வேகம்
மிகுந்திருந்த சமயத்திலேயே  இந்த நண்பரை முதன் முதலில்  நான்
சந்தித்தேன். எங்கள்      ஆசிரியர்களில் பலர் ரகசியமாக மதுவும்,
மாமிசமும்        சாப்பிடுகிறார்கள் என்று இந்த நண்பர் என்னிடம்
கூறினார். ராஜ்கோட்டில் இருக்கும் பல பிரமுகர்களின்