பக்கம் எண் :

212சத்திய சோதனை

Untitled Document
     “பம்பாயில்        அது   சரிப்படாது”    இங்கே  நிருபர்கள்
பத்திரிக்கைக்குச் செய்தி   அனுப்புவது மோசமாக இருக்கிறது. இந்தக்
கூட்டத்தினால் நாம் பயனடைய வேண்டுமாயின்,  உமது பிரசங்கத்தை
நீர் எழுதி விட வேண்டும்.     அதோடு நாளை விடிவதற்குள் அதை
அச்சிட்டும் விட வேண்டும். இதைச்     செய்துவிட உம்மால் முடியும்
என்றே நம்புகிறேன்” என்றார்.

     எனக்கு ஒரே நடுக்கம் எடுத்துவிட்டது.என்றாலும் முயல்வதாகச்
சொன்னேன்.

     “அப்படியானால், கையெழுத்துப் பிரதியை   வாங்கிக் கொள்ள
ஸ்ரீ முன்ஷி உம்மிடம் எந்த    நேரத்திற்கு வரவேண்டும் என்பதைச்
சொல்லும்” என்றார்.

     “இரவு பதினொரு மணிக்கு” என்றேன்.

     அடுத்த நாள்    கூட்டத்திற்குப் போனதும்,  ஸர் பிரோஸ்ஷா
கூறிய யோசனை,எவ்வளவு புத்திசாலித்தனமானது என்பதைக் கண்டு
கொண்டேன்.     ஸர் கோவாஸ்ஜி ஜஹாங்கீர்      இன்ஸ்டிடியூட்
மண்டபத்தில்       பொதுக்கூட்டம் நடந்தது.  ஒரு கூட்டத்தில் ஸர்
பிரோஸ்ஷா மேத்தா  பேசுகிறார் என்றால் எப்பொழுதுமே மண்டபம்
நிறைந்துவிடும்.     அவர் பிரசங்கத்தைக் கேட்க வேண்டும் என்ற
ஆர்வத்தில், முக்கியமாக மாணவர்கள்,     எள் விழவும் இடமின்றி
வந்து கூடுவார்கள்    என்று       கேள்விப்பட்டிருக்கிறேன். என்
அனுபவத்தில்       அப்படிப்பட்ட  முதல் கூட்டம் இதுதான். நான்
பேசுவது, சிலருக்கு மாத்திரமே கேட்கும் என்பதைக் கண்டேன். என்
பிரசங்கத்தைப் படிக்க        ஆரம்பித்ததுமே என் உடம்பெல்லாம்
நடுங்கிற்று. உரக்க, இன்னும் கொஞ்சம் உரக்கப் பேசும்படி கூறி ஸர்
பிரோஸ்ஷா தொடர்ந்து      என்னை உற்சாகப்படுத்திக் கொண்டே
இருந்தார். அது என்னை   உற்சாகப் படுத்துவதற்குப் பதிலாக, என்
தொனி மேலும் மேலும் குறைந்து கொண்டு போகும்படியே  செய்தது
என்பது என் ஞாபகம்.

     எனது  பழைய நண்பர்       ஸ்ரீ கேசவராவ் தேஷ்பாண்டே
என்னைக் காப்பாற்ற வந்தார்.    என் பிரசங்கத்தை அவர் கையில்
கொடுத்து விட்டேன். அவர்     பேச்சுத் தொனிதான் ஏற்ற தொனி.
ஆனால்,         கூடியிருந்தவர்களோ,   அவர் பேச்சைக் கேட்க
மறுத்துவிட்டனர்.    ‘வாச்சா!’ ‘வாச்சா!’    என்ற முழக்கம் எங்கும்
எழுந்தது. ஆகவே,       ஸ்ரீ வாச்சா எழுந்து என் பிரசங்கத்தைப்
படித்தார்.   அற்புதமான        பலனும்   ஏற்பட்டது. கூட்டத்தில்
இருந்தவர்கள்      முற்றும் அமைதியோடு இருந்து, பிரசங்கத்தைக்
கேட்டார்கள். அவசியமான   இடங்களில் கரகோஷமும், ‘வெட்கம்!’
என்ற       முழக்கமும் செய்தார்கள்.   இது என் உள்ளத்துக்குக்
குதூகலம் அளித்தது.

     பிரசங்கம் ஸர் பிரோஸ்ஷாவுக்குப் பிடித்திருந்தது. நான்