பக்கம் எண் :

பம்பாய்க் கூட்டம் 213

Untitled Document
மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன்.

     ஸ்ரீ தேஷ்பாண்டே, ஒரு       பார்ஸி நண்பர் ஆகியவர்களின்
ஆதரவை இக்கூட்டம்      எனக்குத் தேடித் தந்தது. அந்தப் பார்ஸி
நண்பர் இன்று உயர்தர அரசாங்க    அதிகாரியாக இருப்பதால் அவர்
பெயரைக்        கூற நான் தயங்குகிறேன்.    இருவரும் என்னுடன்
தென்னாப்பிரிக்காவுக்கு     வர முடிவு செய்து இருப்பதாக என்னிடம்
தெரிவித்தனர்.      அப்பொழுது ஸ்மால் காஸ் கோர்ட்டு நீதிபதியாக
இருந்த        ஸ்ரீ சி. எம். குர்ஸேத்ஜி,  அந்தப் பார்ஸி நண்பர்க்குக்
கல்யாணம் செய்துவிடத்     திட்டம் போட்டிருந்தார். ஆகவே, அவர்
பார்ஸி     நண்பரைத் தமது தீர்மானத்தை    மாற்றிக் கொள்ளும்படி
செய்துவிட்டார். ‘கல்யாணமா, தென்   ஆப்பிரிக்காவுக்குப் போவதா?’
-இந்த இரண்டில் ஒன்றை அவர்      தீர்மானிக்க வேண்டியதாயிற்று.
அவர் கல்யாணத்தையே     ஏற்றுக் கொண்டார். ஆனால், இவ்விதம்
அவர் தீர்மானத்தைக் கைவிட்டதற்காக, பிற்காலத்தில் அச்சமூகத்தைச்
சேர்ந்த பார்ஸி ருஸ்தம்ஜி பரிகாரம் செய்துவிட்டார். அநேகப் பார்ஸிப்
பெண்கள், கதர் வேலைக்குத்         தங்களை அர்ப்பணம் செய்து
கொண்டதன் மூலம்,   அந்தப் பார்ஸி நண்பர் உறுதியை மீறுவதற்குக்
காரணமாக இருந்த அவர் மனைவிக்காகப் பரிகாரம் செய்து விட்டனர்.
ஆகையால்,     அத் தம்பதிகளுக்குச் சந்தோஷமாக நான் மன்னிப்பு
அளித்துவிட்டேன். ஸ்ரீ தேஷ்பாண்டேக்குக் கல்யாண  ஆசை எதுவும்
இல்லை.        என்றாலும்,    அவராலும் வர முடியவில்லை. அவர்
அப்பொழுது,       தம் வாக்குறுதியை மீறியதற்கு, இப்பொழுது தக்க
பிராயச்சித்தங்களைச்              செய்துகொண்டு வருகிறார். நான்
தென்னாப்பிரிக்காவுக்குத்       திரும்பிப்போன போது ஜான்ஸிபாரில்
தயாப்ஜி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரைச் சந்தித்தேன்.   என்னுடன்
வந்து, எனக்கு உதவி செய்வதாக   அவரும் வாக்களித்தார். ஆனால்,
அவர் வரவே இல்லை. அந்தக்   குற்றத்திற்கு ஸ்ரீ அப்பாஸ் தயாப்ஜி,
இப்பொழுது   பரிகாரம் தேடி வருகிறார். இவ்விதம் சில பாரிஸ்டர்கள்
தென்னாப்பிரிக்காவுக்குப்     போகும்படி செய்ய நான் செய்த மூன்று
முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை.

     இது சம்பந்தமாக ஸ்ரீ பேஸ்தன்ஜி பாத்ஷாவின் நினைவு எனக்கு
இருக்கிறது. நான்        இங்கிலாந்தில் இருந்த காலம் முதற்கொண்டு
அவரிடம்     நட்புடன் இருந்தேன்.   லண்டனில் ஒரு சைவ உணவு
விடுதியில் அவரை         முதன் முதலில் சந்தித்தேன். அவருடைய
சகோதரர்      ஸ்ரீ பர்ஜோர்ஜி பாத்ஷா ஒரு ‘கிறுக்கர்’ என்று பெயர்
பெற்றிருந்ததைக் கொண்டு,    அவரைக் குறித்தும் எனக்குத் தெரியும்.
நான் அவரைப் பார்த்ததே இல்லை. அவர் விசித்திரப் போக்குடையவர்
என்று நண்பர்கள் சொன்னார்கள். குதிரைகளிடம் இரக்கப்பட்டு அவர்
(குதிரை பூட்டிய) டிராம்