பக்கம் எண் :

216சத்திய சோதனை

Untitled Document
துணிந்து எளிதில்    இறங்கிவிட முடியாது :   ஆனால், கங்கையோ
அரவணைத்துக் கொள்ள    எல்லோரையும் அன்புடன் அழைக்கிறது.
கையில் துடுப்புடன் படகில் ஏரி,          அதில் மிதப்பதே இன்பம்.
பள்ளிக்கூடத்தில் சேர வரும் ஒரு மாணவனை    ஓர் உபாத்தியாயர்
எவ்விதம் பரீட்சிப்பாரோ         அதே போலக் கோகலே என்னை
நுட்பமாகப் பரீட்சை செய்தார்.    யாரிடம் போகவேண்டும் என்பதை
அவர் எனக்குச் சொன்னார்.    நான் செய்ய இருக்கும் பிரசங்கத்தை
முன்னால்        தாம் பார்க்க   விரும்புவதாகக் கூறினார். கல்லூரி
முழுவதையும் சுற்றிக் காட்டினார்.  தம்மால் ஆனதைச் செய்யத் தாம்
எப்பொழுதும் தயாராக      இருப்பதாகவும் எனக்கு உறுதியளித்தார்.
டாக்டர் பந்தர்காரைச்     சந்தித்ததன் முடிவைத் தமக்கு அறிவிக்கச்
சொன்னார். மிக்க மகிழ்ச்சியுடன்     என்னை அனுப்பினார். அன்று
முதல்-ராஜீயத் துறையில்-அவர்   ஜீவித்திருந்த காலத்திலும் அதற்குப்
பின்னர் இன்றளவும், முற்றும்      என் உள்ளத்தில் இணையற்றதான
பீடத்தில் கோகலே அமர்ந்து விட்டார்.

     டாக்டர் பந்தர்கார்,  தந்தைக்கு மகனிடம் இருக்கும் அன்புடன்
என்னை வரவேற்றார். நான் அவரைப் பார்க்கப் போனது மத்தியான
வேளை. அந்த நேரத்தில்கூட       ஓய்வின்றி நான் எல்லோரையும்
சந்தித்து வந்தது,       சோர்வு என்பதையே அறியாத அப் பண்டித
மணிக்கு என் மீது                அதிகப் பரிவை உண்டாக்கியது.
பொதுக்கூட்டத்திற்கு எக் கட்சியையும்      சேராதவரே தலைவராக
இருக்க       வேண்டும் என்று நான் வற்புறுத்தியதை உடனே அவர்
ஏற்றுக்கொண்டார். “அதுதான் சரி”,        “அதுதான் சரி” என்றும்
அவராகவே ஆனந்தத்துடன் கூறினார்.

     நான் கூறியதையெல்லாம்       கேட்டுக்கொண்ட பிறகு அவர்
கூறியதாவது       “ராஜீய விஷயங்களில் நான் சம்பந்தம் வைத்துக்
கொள்ளுவதில்லை         என்பதை     எல்லோரும் உங்களுக்குச்
சொல்வார்கள். ஆனாலும், உங்கள்  கோரிக்கையை மறுக்க என்னால்
முடியாது. உங்கள் கட்சி மிகவும் நியாயமானது. உங்கள்   முயற்சியோ
அற்புதமானது. ஆகவே, உங்கள்               பொதுக்கூட்டத்தில்
பங்கெடுத்துக்கொள்ள நான் மறுத்து    விடுவதற்கில்லை. திலகரையும்
கோகலேயையும் நீங்கள் கலந்து ஆலோசித்தது மிகவும்   சரியானதே
அவர்களுடைய இரு சபைகளின் கூட்டு ஆதரவில் நடக்கும் பொதுக்
கூட்டத்திற்குத் தலைமை வகிப்பதில் நான் மகிழ்ச்சி    அடைகிறேன்
என்று தயவு செய்து       அவர்களிடம் சொல்லுங்கள். கூட்டத்தின்
நேரத்தைக் குறித்து, நீங்கள் என்னைக்    கேட்க வேண்டியதில்லை.
அவர்களுக்குச் சௌகரியப்படும் நேரம்,எனக்கும் சௌகரியமானதே“.
இவ்விதம் கூறி எனக்கு வாழ்த்தும்     ஆசீர்வாதமும் தந்து, அவர்
விடை கொடுத்து அனுப்பினார்.

     புலமை மிக்கவர்களும்,      தன்னலமே இல்லாதவர்களுமான