பக்கம் எண் :

‘விரைவில் திரும்புங்கள் 219

Untitled Document
கனவான். நான் ஊர்               சுற்றித் திரியும் பேர்வழி என்று
எண்ணிக்கொண்டு என்னிடம் ஒன்றும்  பேசாமலே என்னைப் போகச்
சொல்லிவிட்டார். வங்கவாசி       பத்திரிகையோ இன்னும் கொஞ்சம்
அதிகமாகப் போய்விட்டது. அதன் ஆசிரியர் என்னை     ஒரு மணி
நேரம் காக்க வைத்தார்.              அவரைக் கண்டு பேசப் பலர்
வந்திருந்தார்கள். ஆனால், மற்றவர்களெல்லாம்    பேசிவிட்டுப்போன
பின்புகூட, என்னைக் கண்ணெடுத்துப் பார்க்க     அவருக்குத் தயவு
பிறக்கவில்லை. நீண்ட  நேரம் காத்துக்கொண்டிருந்த பிறகு அவரைப்
பார்த்து, என் விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்தேன்.  உடனே அவர்,
“எங்களுக்கு வேலை தலைக்கு மேல் இருக்கிறது       என்பதை நீர்
பார்க்கவில்லையா? உம்மைப்போல் கண்டு     பேச வருகிறவர்களின்
தொகைக்கு முடிவே இல்லை.         நீர் போய்விடுவதே மேல். நீர்
சொல்வதைக் கேட்க எனக்கு       இப்பொழுது சௌகரியப்படாது”
என்றார். நான் அவமதிக்கப்படுவதாக     ஒரு கணம் எண்ணினேன்.
ஆனால் உடனே ஆசிரியரின் நிலைமையையும்   புரிந்துகொண்டேன்.
‘வங்கவாசி’யின் புகழைக்        குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆசிரியரைப் பார்க்க ஓயாமல் பலர் வந்துகொண்டே   இருக்கிறார்கள்
என்பதையும் இப்போது   பார்த்தேன். அவர்கள் எல்லாம் அவருக்குப்
பழக்கமானவர்கள். அவருக்கு தம்       பத்திரிகையில் எழுதுவதற்கு
விஷயங்களுக்கும் பஞ்சம் இல்லை. தென்னாப்பிரிக்கா     விஷயமோ
அச்சமயம் இங்கே அவ்வளவு நன்றாகத் தெரியாத சங்கதி.


     எந்தக் குறையினால் ஒருவன் கஷ்டப்படுகிறானோ   அவனுக்கு
அக் குறையே பெரிது          என்று தோன்றும்.     ஆசிரியரின்
காரியாலயத்திற்குப் படையெடுத்து வரும்  அநேகரில் நானும் ஒருவன்.
அப்படி வரும் மற்றவர்கள் ஒவ்வொருவருக்கும்   அவரவர்கள் குறை
இருக்கத்தான் இருக்கிறது. எல்லோருக்குமே ஆசிரியர் என்ன  செய்ய
முடியும்? மேலும், ஆசிரியர், நாட்டில் பெரிய சக்தி வாய்ந்தவர் என்று
கஷ்டப்படுகிறவன் நினைக்கிறான். ஆனால்,         தமது சக்தி, தம்
காரியாலயத்தின் வாசலுக்கு அப்பால் செல்லாது என்பது ஆசிரியருக்கு
மாத்திரமே தெரியும். நான்         சோர்வடைந்துவிடவில்லை. மற்றப்
பத்திரிகைகளின் ஆசிரியர்களை விடாமல்    பார்த்துக் கொண்டுதான்
இருந்தேன். வழக்கம்போல்,        இந்தியாவில் இருந்த ஆங்கிலேயர்
பத்திரிகைகளின் ஆசிரியர்களையும் சந்தித்தேன்.    ‘ஸ்டேட்ஸ்மனும்’
‘இங்கிலீஷ்மனும்’ அப்பிரச்னையின்     முக்கியத்துவத்தை உணர்ந்தன.
அப்பத்திரிகை நிருபர்களுக்கு நான் நீண்ட    பேட்டிகள் அளித்தேன்.
அவை முழுவதையும் அப் பத்திரிகைகள் பிரசுரித்தன.

     ‘இங்கிலீஷ்மன்’ பத்திரிகையின் ஆசிரியர்       ஸ்ரீ சாண்டர்ஸ்,
என்னைத் தமது சொந்த மனிதனாகவே கொண்டார். தமது