பக்கம் எண் :

220சத்திய சோதனை

Untitled Document
காரியாலயத்தையும் தமது பத்திரிகையையும்     என் இஷ்டத்திற்குப்
பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.     தென்னாப்பிரிக்க இந்தியர்
நிலைமையைக்    குறித்து, அவர் எழுதிய தலையங்கங்களின் அச்சு
நகல்களை முன் கூட்டியே அவர்            எனக்கு அனுப்புவார்.
அத் தலையங்கங்களில் நான் விரும்பும் திருத்தங்களைச்      செய்து
கொள்ளவும் அவர் என்னை அனுமதித்தார். எங்களுக்கிடையே நட்பு
வளர்ந்துவிட்டது என்று சொல்லுவதும் மிகையாகாது. தம்மால் இயன்ற
உதவிகளை எல்லாம்      செய்வதாக அவர் எனக்கு வாக்களித்தார்.
வாக்களித்தபடியே நிறைவேற்றியும் வந்தார்.      அவர் கடுமையான
நோய்வாய்ப்படும் வரையில் என்னுடன்      கடிதப் போக்குவரத்தும்
வைத்துக் கொண்டிருந்தார்.

     என் வாழ்க்கை முழுவதுமே இவ்விதமான பல   நண்பர்களைப்
பெறும் பாக்கியம் எனக்கு இருந்திருக்கிறது.      இந்தச் சிநேகங்கள்
எதிர்பாராத விதமாகத் திடீரென்று    ஏற்பட்டவை. மிகைப்படுத்தாமல்
உள்ளதை உள்ளபடியே கூறும் என் குணமும்,      உண்மையினிடம்
எனக்கு இருந்த பற்றும், ஸ்ரீ சாண்டர்ஸூக்கு   என்னிடம் பிரியத்தை
உண்டாக்கின. நான் மேற்கொண்ட       வேலையைக் குறித்து, வெகு
நுட்பமாகக் குறுக்குக் கேள்விகள் எல்லாம்        போட்டுத் தெரிந்து
கொண்ட பிறகே என் முயற்சிக்கு          அனுதாபம் காட்ட அவர்
முற்பட்டார். தென்னாப்பிரிக்க          வெள்ளையரின் கட்சியையும்
பாரபட்சமின்றி அவருக்கு       எடுத்துக் காட்டுவதற்குச் சிரமத்தைப்
பாராமல்    நான் செய்த முயற்சியையும் கண்டார். இதற்காக என்னை
அவர் பாராட்டினார்.

     எதிர்க்கட்சிக்கு நியாயத்தைச் செய்வதன் மூலம்   தன் கட்சிக்கு
நியாயம் சீக்கிரத்தில் கிடைக்கிறது      என்பதை    என் அனுபவம்
காட்டியிருக்கிறது.

     எதிர்பாராத வகையில் ஸ்ரீ சாண்டர்ஸின்   உதவி கிடைத்ததால்,
முடிவில், ‘கல்கத்தாவிலும்       பொதுக்    கூட்டத்தை நடத்துவதில்
வெற்றிபெற முடியும்’ என்ற           நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.
அப்பொழுது          டர்பனிலிருந்து    ‘பார்லிமெண்டு ஜனவரியில்
ஆரம்பமாகிறது. விரைவில் திரும்புக’ என்ற தந்தி வந்தது.

     ஆகவே, பத்திரிகைகளில்   பிரசுரிப்பதற்கு        ஒரு கடிதம்
அனுப்பினேன். திடீரென்று கல்கத்தாவைவிட்டு     நான் ஏன் புறப்பட
வேண்டியிருக்கிறது என்று அதில் விளக்கிக் கூறி விட்டுப் பம்பாய்க்குப்
புறப்பட்டேன். புறப்படும் முன்பு       தாதா அப்துல்லா கம்பெனியின்
பம்பாய் ஏஜெண்டுக்கு ஒரு தந்தி கொடுத்து,   தென்னாப்பிரிக்காவிற்கு
முதலில் புறப்படும் கப்பலில் எனக்கு இடத்திற்கு ஏற்பாடு   செய்யுமாறு
அறிவித்தேன். தாதா அப்துல்லா அப்பொழுதுதான்,      ‘கோர்லாண்டு’
என்ற கப்பலை வாங்கியிருந்தார்.      அக் கப்பலிலேயே நான் போக
வேண்டும்