பக்கம் எண் :

புயலின் குமுறல்கள்221

Untitled Document
என்று வற்புறுத்தியதோடு என்னையும் என் குடும்பத்தையும் கட்டணம்
வாங்காமல்     ஏற்றிச் செல்வதாகவும் அறிவித்தார். இதை நன்றியுடன்
ஏற்றுக் கொண்டேன்.     டிசம்பர் ஆரம்பத்தில் இரண்டாம் முறையாக
நான்       தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்பட்டேன். இப்பொழுது என்
மனைவி, இரு குமாரர்கள், விதந்துவாகிவிட்ட என் சகோதரியின் ஒரே
குமாரன் ஆகியவர்களுடன் பயணமானேன். அதே சமயத்தில் ‘நாதேரி’
என்ற மற்றொரு கப்பலும் டர்பனுக்குப்      புறப்பட்டது. அக் கப்பல்
கம்பெனிக்கு தாதா  அப்துல்லா கம்பெனியே ஏஜெண்டுகள். இந்த இரு
கப்பல்களிலும் சுமார்  எண்ணூறு     பிரயாணிகள் இருந்திருப்பார்கள்.
அவர்களில் பாதிப்பேர்    டிரான்ஸ்வாலுக்குப் போக வேண்டியவர்கள்.