பக்கம் எண் :

புயலின் குமுறல்கள்223

Untitled Document
அதன்படி என் மனைவி      பார்ஸிப் புடவை உடுத்திக்கொண்டாள்.
சிறுவர்கள், பார்ஸிக் கோட்டும்         கால்சட்டைகளும் போட்டுக்
கொண்டனர். பூட்ஸு ம்            ஸ்டாக்கிங்கும் இல்லாமல் யாரும்
இருப்பதற்கில்லை. அவற்றைப்     போட்டுப் பழக்கப்படுவதற்கு என்
மனைவிக்கும் குழந்தைகளுக்கும் நீண்ட காலம் பிடித்தது.   பூட்ஸ்கள்
அவர்கள் காலை நசுக்கின. ஸ்டாக்கிங்குகளோ, வியர்வையால் நாற்றம்
எடுத்துவிட்டன.              கால்விரல்கள் அடிக்கடி புண்ணாயின.
இவைகளையெல்லாம் சொல்லி       அவற்றைப் போட்டுக் கொள்ள
அவர்கள் ஆட்சேபிக்கும் போதெல்லாம் அதற்குச்    சமாதானம் கூற
நான் பதில்களைத்         தயாராக வைத்திருப்பேன்.  ஆனால்,என்
பதில்களால் திருப்தியடைந்து விடாமல்,என் அதிகாரத்திற்குப் பயந்தே,
அவர்கள் விடாமல்,          அவற்றை அணிந்து வந்தார்கள் என்று
நினைக்கிறேன்.‘வேறு வழி இல்லை’      என்பதனாலேயே அவர்கள்
உடை மாற்றத்திற்கும் சம்மதித்தார்கள். அந்த உணர்ச்சி காரணமாகவே,
ஆனால் இன்னும் அதிகத் தயக்கத்துடனேயே,          கத்தியையும்
முள்ளையும் கொண்டு சாப்பிடவும் சம்மதித்தார்கள்.     இந்தவிதமான
நாகரிகச் சின்னங்களின் மீது எனக்கு இருந்த மோகம் குறைந்த பிறகு,
அவர்கள் கத்தியையும் முள்ளையும்        உபயோகித்துச் சாப்பிடும்
வழக்கத்தைக் கைவிட்டார்கள்.       புதிய முறைகளில் நீண்ட காலம்
பழகிவிட்டதால், பழைய  வழக்கத்திற்குத் திரும்புவதும் அவர்களுக்குச்
சங்கடமாகவே இருந்தது.     ஆனால் நாகரிகத்தின்         இந்தப்
பகட்டுகளையெல்லாம் உதறி          எறிந்து விட்ட பிறகு, நாங்கள்
சுமையெல்லாம் நீங்கி விடுதலை பெற்ற    உணர்ச்சியோடு இருந்ததை
நான் இன்று காண முடிகிறது.

     அதே கப்பலில் என்          உறவினர்கள் சிலரும், எனக்குப்
பழக்கமானவர்களும் இருந்தனர். எனது கட்சிக்காரரின்    நண்பருக்கு
அக் கப்பல்        சொந்தமானதாகையால்,  அதில் நான் விரும்புகிற
இடத்திற்கெல்லாம் தாராளமாகப் போக முடிந்தது.     அதனால் இந்த
உறவினர் முதலியவர்களையும்       மூன்றாம் வகுப்பில் வந்த மற்றப்
பிரயாணிகளையும் நான் அடிக்கடி சந்தித்து வந்தேன்.

     மத்தியில் எந்தத்     துறைமுகத்திலும் நிற்காமல், கப்பல், நேரே
நேட்டாலுக்குப் போய்க்கொண்டிருந்தது. ஆகையால்,எங்கள் பிரயாணம்
பதினெட்டு       நாட்களில் முடிந்துவிடும். ஆனால், ஆப்பிரிக்காவில்
அடிக்கவிருந்த   தீவிரமான போராட்டப் புயலைக் குறித்து எங்களுக்கு
எச்சரிக்கை செய்வதைப் போல்,   நேட்டாலுக்கு இன்னும் நான்கு நாள்
பிரயாணமே பாக்கி இருந்த சமயத்தில், கடலில்     கடுமையான புயல்
காற்று வீசியது. அது டிசம்பர் மாதம்.          பூமத்திய ரேகைக்குத்
தெற்கிலுள்ள பகுதிக்கு        அதுவே கோடைக் காலம். ஆகையால்,
அப் பருவத்தில்     தென் சமுத்திரத்தில்,    பெரியதும் சிறியதுமாகப்
புயல்காற்றுகள் அடிப்பது சகஜம். ஆனால் எங்களைத்