பக்கம் எண் :

226சத்திய சோதனை

Untitled Document
அன்றாடம் என்ன        நடந்துகொண்டிருக்கிறது என்பதைத் தாதா
அப்துல்லா         கம்பெனியார் தவறாமல் எங்களுக்கு அறிவித்துக்
கொண்டிருந்தனர். வெள்ளைக்        காரர்கள் தினந்தோறும் பெரிய
பொதுக்கூட்டங்களை நடத்தி வந்தனர். தாதா அப்துல்லா கம்பெனியை,
எல்லா விதங்களிலும்            மிரட்டிக் கொண்டிருந்தார்கள். சில
சமயங்களில் அக் கம்பெனிக்கு      ஆசை வார்த்தைகளையும் கூறி
வந்தனர்.     இரு   கப்பல்களும் திருப்பி   அனுப்பப்பட்டுவிட்டால்
கம்பெனிக்குத் தக்க நஷ்டஈடு கொடுத்துவிடுவதாகவும் சொன்னார்கள்.
ஆனால், இந்த மிரட்டல்களுக்கெல்லாம் பயந்து விடக்  கூடியவர்கள்
அல்ல தாதா அப்துல்லா கம்பெனியார். சேத்து அப்துல்  கரீம் ஹாஜி
ஆதம், அச்சமயம் அந்தக் கம்பெனியின்     நிர்வாகப் பங்குதாரராக
இருந்தார். ‘எப்படியும்       கப்பல்களைக் கரைக்குக் கொண்டுவந்து,
பிரயாணிகளை            இறக்கியே தீருவது’ என்று அவர் உறுதி
கொண்டிருந்தார். அவர் தினந் தோறும்     விவரமாகக் கடிதங்களை
எழுதி எங்களுக்கு          அனுப்பிக் கொண்டிருந்தார். என்னைப்
பார்ப்பதற்காக டர்பனுக்கு வந்த காலஞ்சென்ற ஸ்ரீ மன்சுக்லால் நாஸர்,
அச்சமயம்      அதிர்ஷ்டவசமாக அங்கே இருந்தார். அவர் திறமை
வாய்ந்தவர்; அஞ்சாதவர்.    இந்திய சமூகத்திற்கு வழிகாட்டி வந்தார்.
அக் கம்பெனியின் வக்கீலான       ஸ்ரீ லாப்டனும் அஞ்சா நெஞ்சம்
படைத்தவர்.               வெள்ளைக்காரர்களின் போக்கை அவர்
கண்டித்தார். இந்திய சமூகத்தினிடம் கட்டணம் வாங்கும் வக்கீல் என்ற
முறையில் மட்டும் அன்றி     அச் சமூகத்தின் உண்மையான நண்பர்
என்ற முறையிலும்   அவர்களுக்கு அவர் ஆலோசனை கூறி வந்தார்.

     இவ்வாறு சம பலம் இல்லாத இரு கட்சியினரின் போர்க்களமாக
டர்பன் ஆயிற்று. ஒருபக்கத்தில்   ஒரு சிலரேயான ஏழை இந்தியரும்
அவர்களுடைய ஆங்கில நண்பர்கள் சிலரும்; மற்றொரு பக்கத்திலோ,
ஆயுதங்களிலும் எண்ணிக்கையிலும், படிப்பிலும்,  செல்வத்திலும் பலம்
படைத்திருந்த        வெள்ளையர்கள்! நேட்டால்     அரசாங்கமும்
அவர்களுக்குப் பகிரங்கமாக உதவி செய்து வந்ததால், அரசாங்கத்தின்
பக்க பலமும் அவர்களுக்கு இருந்தது.      மந்திரி சபையில் அதிகச்
செல்வாக்கு     வாய்ந்த அங்கத்தினராயிருந்த ஸ்ரீ ஹாரி எஸ்கோம்பு,
வெள்ளையரின்         பொதுக்கூட்டங்களில் பகிரங்கமாகக் கலந்து
கொண்டார்.

     கப்பல் பிரயாணிகளை அல்லது       கப்பல் ஏஜெண்டுகளான
கம்பெனியை எப்படியாவது மிரட்டி, பிரயாணிகள்     இந்தியாவுக்குத்
திரும்பிப் போய்விடுமாறு   பலவந்தப்படுத்திவிட வேண்டும் என்பதே,
கப்பல் கரைக்கு வராமல் நிறுத்தி வைத்ததன் உண்மையான நோக்கம்.
இப்பொழுது எங்களை நோக்கியும் மிரட்டல்களை       ஆரம்பித்து
விட்டார்கள். ‘திரும்பிப் போய்விடாவிட்டால்        நீங்கள் நிச்சயம்