பக்கம் எண் :

புயல்227

Untitled Document
கடலில் தள்ளப்படுவீர்கள்! திரும்பிவிட  ஒப்புக் கொள்ளுவீர்களாயின்
உங்கள் கப்பல் கட்டணத்தொகையும்   உங்களுக்குக் கிடைத்துவிடும்’
என்று மிரட்டினர். இதற்கெல்லாம் நாங்கள் மசியவில்லை. என்னுடைய
சகப் பிரயாணிகளிடம் சதா போய், அவர்களை நான் உற்சாகப்படுத்தி
வந்தேன். ‘நாதேரி’  கப்பலில் இருந்த பிரயாணிகளுக்கும் ஆறுதலான
செய்திகளை அனுப்பிக்கொண்டு வந்தேன்.   அவர்கள் எல்லோருமே
அமைதியாகவும் தைரியமாகவும் இருந்து வந்தனர்.

     பிரயாணிகளின்       பொழுதுபோக்குக்காக எல்லா வகையான
விளையாட்டுக்களுக்கும் ஏற்பாடு செய்தோம். கிறிஸ்துமஸ் தினத்தன்று,
காப்டன்,மேல் வகுப்புப் பிரயாணிகளுக்கு விருந்தளித்தார். விருந்துக்கு
அழைக்கப்பட்டிருந்தவர்களில்       முக்கியமானவர்கள் நானும் என்
குடும்பத்தினரும். விருந்து முடிந்த பிறகு    பிரசங்கங்களும் நடந்தன.
அப்பொழுது நான் மேற்கத்திய     நாகரிகத்தைப் பற்றிப் பேசினேன்.
பெரிய விஷயங்களைக் குறித்துப் பேச அது சமயம் அல்ல  என்பதை
நான்       அறிவேன். ஆனால்,         என் பேச்சு வேறுவிதமாக
இருப்பதற்கில்லை.           பிறகு நடந்த களியாட்டங்களில் நானும்
பங்கெடுத்துக்கொண்டேன். ஆனால், என்     மனமெல்லாம் டர்பனில்
நடந்துகொண்டிருக்கும்         போராட்டத்திலேயே ஈடுபட்டிருந்தது.
உண்மையில் அப் போர் என்னை     எதிர்த்து நடந்ததேயாகும். என்
மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் இரண்டு:

1.  நான் இந்தியாவில்             இருந்தபோது நேட்டால்
 வெள்ளைக்காரர்களை அக்கிரமமாகக்      கண்டித்தேன்
 என்பது.
2.  நேட்டாலை இந்திய மயம்       ஆக்கிவிட வேண்டும்
 என்பதற்காக,  அங்கே குடியேறுவதற்கு இரு கப்பல்கள்
 நிறையப் பிரயாணிகளைக்     கொண்டுவந்திருக்கிறேன்
 என்பது.

     என் பொறுப்பை நான் அறிவேன்.  என்னால் தாதா அப்துல்லா
கம்பெனியார், பெரிய          ஆபத்துக்கு ஆளாகி இருக்கின்றனர்.
பிரயாணிகளின்           உயிர்களுக்கு ஆபத்து  இருக்கிறது. என்
குடும்பத்தினரையும் அழைத்து வந்ததால்   அவர்களையும் ஆபத்தில்
வைத்துவிட்டேன் என்பவற்றை எல்லாம் அறிவேன்.

     ஆனால், நான் முற்றும் குற்றம் அற்றவன்.      நேட்டாலுக்குப்
போகுமாறு நான் எவரையும் தூண்டவில்லை.   பிரயாணிகள் கப்பலில்
ஏறியபோது      அவர்கள் யார் என்பதே  எனக்குத் தெரியாது. என்
உறவினர் இருவரைத் தவிர         கப்பலில் இருந்த பிரயாணிகளில்
ஒருவருடைய பெயர், விலாசம் கூட எனக்குத்  தெரியாது. நேட்டாலில்
நான்     இருந்தபோது வெள்ளைக்காரர்களைக் குறித்து நான் கூறாத
வார்த்தை ஒன்றையேனும்,          இந்தியாவில் இருந்தபோது நான்
சொன்னதே இல்லை. மேலும் நான் சொன்னது   இன்னது என்பதற்கு