பக்கம் எண் :

230சத்திய சோதனை

Untitled Document
எண்ணுகிறேன்.” இதற்கு நான்     உடனே ஒப்புக்கொண்டேன். என்
மனைவியும் குழந்தைகளும் வண்டியில் பத்திரமாக ஸ்ரீ ருஸ்தம்ஜியின்
இடத்துக்குப் போய்ச் சேர்ந்துவிட்டனர்.    காப்டனின் அனுமதியின்
பேரில் ஸ்ரீ லாப்டனுடன் நான்         கப்பலிலிருந்து இறங்கினேன்.
துறைமுகத்திலிருந்து      ஸ்ரீ ருஸ்தம்ஜி வீடு இரண்டு மைல் தூரம்.

     நாங்கள் கீழே இறங்கியதும்,        சில சிறுவர்கள் என்னை
அடையாளம் கண்டுகொண்டனர்.     “காந்தி, காந்தி” என்று சப்தம்
போட்டனர். இதைக் கேட்டதும்         ஐந்தாறு பேர் அங்கே ஓடி
வந்தார்கள்.      அவர்களும் சேர்ந்து கூச்சல் போட்டனர். கூட்டம்
பலத்துவிடக் கூடும் என்று ஸ்ரீ லாப்டன் பயந்தார்.  பக்கத்தில் நின்ற
ஒரு ரிக்ஷாவைக் கூப்பிட்டார்.       ரிக்ஷாவில் ஏறுவது என்பதே
எனக்கு எப்பொழுதும் பிடிப்பதில்லை.அப்படி ஏறியிருந்தால் அதுவே
எனக்கு       முதல் அனுபவமாக இருந்திருக்கும்.  ஆனால்,  நான்
ரிக்ஷாவில்      ஏறச் சிறுவர்கள் விடவில்லை.   ரிக்ஷாக்காரனைக்
கொன்றுவிடுவதாக மிரட்டினார்கள். அவன் ஓட்டம் எடுத்துவிட்டான்.
நாங்கள் போக ஆரம்பித்தோம். கூட்டம்    அதிகமாகிக் கொண்டே
வந்தது. மேற்கொண்டும்       போக முடியாத அளவுக்குக் கூட்டம்
பெருகிவிட்டது.   முதலில் ஸ்ரீ லாப்டனைப் பிடித்து அப்புறப்படுத்தி
எங்களைத் தனித் தனியாகப்    பிரித்துவிட்டனர்.  பிறகு என்னைக்
கற்களாலும்       அழுகிய முட்டைகளாலும் அடித்தார்கள். ஒருவர்
விடாமல் இருக்க ஒரு வீட்டின்     முன்புறக் கிராதியைப் பிடித்துக்
கொண்டேன்.        சற்று மூச்சுவிடலாம் என்று அங்கே நின்றேன்.
ஆனால், முடியவில்லை. அங்கே வந்ததும்    என்னை முஷ்டியால்
குத்தினர்;        அடித்தனர்.   எனக்குத் தெரிந்தவரான போலீஸ்
சூப்பரிண்டெண்டென்டின் மனைவியார்   அப்பக்கம் வந்தார். அந்த
வீரப் பெண்மணி என்னிடம் வந்தார். அப்பொழுது வெயில் இல்லை
என்றாலும், தம்        கைக்குடையை விரித்துக்கொண்டு எனக்கும்
கூட்டத்திற்கும் நடுவில் நின்றுகொண்டார்.   ஜனக்கூட்டத்தின் கோப
வெறியை இது தடுத்தது. போலீஸ்    சூப்பிரிண்டெண்டென்டான ஸ்ரீ
அலெக்ஸாண்டரின் மனைவிக்குத்     துன்பம் இழைக்காமல் அந்த
வெறியர்கள் என்னை அடிப்பது சிரமம் ஆகிவிட்டது.

     இதற்கு மத்தியில்      இச்சம்பவத்தைப் பார்த்த ஓர் இந்திய
இளைஞர், போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினார். என்னைச் சுற்றி நின்று
கொண்டு, நான் போக வேண்டிய இடத்தில்    என்னைக் கொண்டு
போய்ச்  சேர்த்துவிட்டு           வருமாறு   கூறிப்    போலீஸ்
சூப்பரிண்டெண்டென்டான ஸ்ரீ அலெக்ஸாண்டர், போலீஸ்காரர்களை
அனுப்பினார்.      நல்ல சமயத்தில் அவர்களும் வந்து சேர்ந்தனர்.
போலீஸ் ஸ்டேஷன்,