பக்கம் எண் :

குழந்தைகளின் படிப்பு 239

Untitled Document
அசௌகரியங்களையும்       சமாளித்துக்கொண்டு போக என்னால்
முடியாது. இதற்கு மத்தியில் இக் குழந்தைகளுக்கு நானே போதிப்பது
என்று சொந்த முயற்சியும்  செய்து கொண்டிருந்தேன். ஆனால், நான்
சொல்லிக்கொடுப்பது என்றால்   ஒழுங்காகச் சொல்லிக் கொடுப்பதாக
இருக்கமுடியாது. தக்க         குஜராத்தி உபாத்தியாயரும் எனக்குக்
கிடைக்கவில்லை.

     ஆகையால், என்ன செய்வது என்று தெரியாமல்  திகைத்தேன்.
என் மேற்பார்வையில்,    குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க ஓர்
ஆங்கில உபாத்தியாயர் தேவை  என்று விளம்பரம் செய்தேன். இந்த
உபாத்தியாயர் ஒழுங்காக ஏதாவது    சொல்லிக்கொடுத்துக் கொண்டு
வரவேண்டும். மற்றப்படிப்பு விஷயங்களைப் பொறுத்தமட்டும் எனக்கு
ஒழிந்தபோது அப்போதைக்கப்போது நான் சொல்லிக் கொடுப்பதோடு
குழந்தைகள் திருப்தியடைய வேண்டியதே என்று முடிவு  செய்தேன்.
ஆகவே ஓர்      ஆங்கில மாதை, மாதம் ஏழு பவுன் சம்பளத்தில்,
குழந்தைகளுக்குப்     படிப்புச் சொல்லிக் கொடுக்க அமர்த்தினேன்.
இந்த ஏற்பாடு கொஞ்சகாலம் நடந்து வந்தது.  ஆனால், எனக்கு இது
திருப்திகரமாக இல்லை;       நான் எப்பொழுதும் குழந்தைகளுடன்,
தாய்மொழியிலேயே பேசிப் பழகி வந்தேன். இதனால், அவர்களுக்குக்
கொஞ்சம்        குஜராத்தி தெரிய வந்தது. குழந்தைகளைத் திரும்ப
இந்தியாவிற்கு      அனுப்பிவிடுவதற்கும் எனக்கு விருப்பம் இல்லை.
ஏனெனில், சிறு குழந்தைகளைப்      பெற்றோரிடமிருந்து பிரிக்கவே
கூடாது என்று, அந்த நாளிலிருந்தே நான் கருதிவந்தேன்.

     ஒழுங்கான ஒரு குடும்பத்தில்,   குழந்தைகள் இயற்கையாகவே
அடையும் கல்விப் பயிற்சியை, மாணவர்களின் விடுதிகளில் அவர்கள்
அடைய முடியாது. ஆகையால், என்  குழந்தைகளை என்னுடனேயே
வைத்துக்கொண்டேன்.    என் சகோதரியின் மகனையும் என் மூத்த
மகனையும்,        இந்தியாவில் மாணவர்கள் தங்கிப் படிக்கும் ஒரு
பள்ளிக்குக் கொஞ்சகாலம் அனுப்பினேன். ஆனால், சீக்கிரத்திலேயே
அவர்களைத் திருப்பி அழைத்துக்   கொண்டுவிட வேண்டியதாயிற்று.
பிறகு என் மூத்த மகன்,     வயதடைந்த வெகு காலத்திற்குப் பிறகு,
என்னிடம் மனஸ்தாபம் கண்டு,      இந்தியாவுக்குப் போய்விட்டான்.
அங்கே அகமதாபாத்தில்     ஓர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தான்.
ஆனால் என் மருமகனோ, என்னால் கொடுக்க  முடிந்த கல்வியோடு
திருப்தியடைந்து என்னுடனேயே    இருந்துவிட்டான் என்று ஞாபகம்.
நல்ல வாலிபப் பருவத்தில் அவன்  துரதிருஷ்டவசமாகச் சிறிது காலம்
நோயுற்றிருந்து இறந்து போய்விட்டன்.       என் குமாரர்களில் மற்ற
மூவரும் பொதுப்    பள்ளிக்கூடத்திற்குப் போய்ப் படித்ததே இல்லை.
ஆனால்        தென்னாப்பிரிக்க     சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு
இருந்தவர்களின் குழந்தைகளுக்கென்று நான்    ஆரம்பித்துச் சிறிது