பக்கம் எண் :

தொண்டில் ஆர்வம் 243

Untitled Document
நிரந்தரமான ஜீவகாருண்யத் தொண்டு செய்ய வேண்டும் என்று  என்
மனம் அவாவுற்றது.   செயின்ட் எயிடானின் மிஷனுக்கு டாக்டர் பூத்
தலைவராக இருந்தார்.   அவர் அன்பு நிறைந்த உள்ளம் படைத்தவர்.
தம்மிடம் வரும்     நோயாளிகளுக்கு இலவசமாக அவர் வைத்தியம்
செய்து வந்தார். பார்ஸி ருஸ்தம்ஜியின் தருமத்தைக் கொண்டு, டாக்டர்
பூத்தின் நிர்வாகத்தின் கீழ்,     ஒரு சிறு தரும வைத்திய சாலையை
ஆரம்பிக்க முடிந்தது. அந்த வைத்திய சாலையில் நோயாளிகளுக்குப்
பணிவிடை     செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எனக்குப் பலமாக
இருந்தது. மருந்து கலந்து கொடுக்கும் வேலை தினமும்  இரண்டொரு
மணி நேரத்திற்கு இருக்கும். அந்த   அளவுக்கு என் காரியாலயத்தின்
வேலையைக் குறைத்துக்கொண்டு, அங்கே ‘கம்பவுண்ட’ராக இருப்பது
என்று தீர்மானித்தேன். என் வக்கீல் தொழில் சம்பந்தமான   வேலை,
பெரும்பாலும் என் ஆபீஸிலேயே கவனிக்க   வேண்டிய வேலைதான்.
சாஸனப் பத்திரங்களை எழுதுவதும் மத்தியஸ்தம் செய்வதுமே இந்தத்
தொழிலில் என்     முக்கியமான அலுவல். மாஜிஸ்டிரேட் கோர்ட்டில்
எனக்குச் சில வழக்குகள் இருக்கும்.   ஆனால், அவை பெரும்பாலும்
அதிக விவாதத்திற்கு இடம் இல்லாதவைகளாக  இருக்கும். என்னுடன்
தென்னாப்பிரிக்காவுக்கு வந்து, அப்போது    என்னோடேயே வசித்து
வந்த ஸ்ரீ கான்,       நான் இல்லாத சமயத்தில் என் வழக்குகளைக்
கவனித்துக்      கொள்ளுவதாக  கூறியிருந்தார். ஆகவே, அச் சிறு
வைத்திய சாலையில்     சேவை செய்வதற்கு    எனக்கு அவகாசம்
இருந்தது. அதாவது, காலையில்     வைத்திய சாலைக்குப் போகவும்
வரவும் உள்ள நேரத்தைச் சேர்த்து,     தினம் இரண்டு மணி நேரம்.
இந்த ஊழியம் என் மனத்திற்குக்     கொஞ்சம் சாந்தியை அளித்தது.
வரும்        நோயாளிகளின் நோயைக் குறித்து விசாரிப்பது, அந்த
விவரங்களை       டாக்டருக்குக் கூறுவது,   மருந்துகளைக் கலந்து
கொடுப்பது    ஆகியவையே      அந்த வேலை. அது துன்பத்தை
அனுபவித்துக்       கொண்டிருக்கும் இந்தியருடன், நான் நெருங்கிப்
பழகும்படி            செய்தது.    அவர்களில் அநேகர் ஒப்பந்தத்
தொழிலாளர்களான தமிழர், தெலுங்கர் அல்லது வட இந்தியர் ஆவர்.

     போயர் யுத்தத்தின் போது        நோயுற்றவர்களுக்கும் காயம்
அடைந்தோருக்கும் பணிவிடை செய்வதற்கு, என் சேவையை அளிக்க
நான் முன்வந்தபோது, இந்த அனுபவம்    எனக்கு  அதிக உதவியாக
இருந்தது.

     குழந்தைகளை     எவ்விதம்     வளர்ப்பது என்ற பிரச்சனை
எப்பொழுதும் என் முன்பு இருந்து வந்தது.     தென்னாப்பிரிக்காவில்
எனக்கு       இரு புதல்வர்கள் பிறந்தார்கள். அவர்களை வளர்ப்பது
சம்பந்தமான பிரச்னையைத் தீர்க்க நான்  வைத்தியசாலையில் செய்து
வந்த தொண்டு பயனுள்ளதாயிற்று. என்னுடைய சுயேச்சை  உணர்ச்சி,