பக்கம் எண் :

244சத்திய சோதனை

Untitled Document
எனக்கு       அடிக்கடி  சோதனைகளைக் கொடுத்து வந்தது. என்
மனைவியின்   பிரசவ காலத்தில் சிறந்த வைத்திய உதவியை ஏற்பாடு
செய்து கொள்ளுவது          என்று நானும்     என் மனைவியும்
தீர்மானித்திருந்தோம். ஆனால்,       சமயத்தில் டாக்டரும் தாதியும்
எங்களைக் கைவிட்டுவிட்டால்   நாங்கள் என்ன செய்வது? அதோடு
தாதி,    இந்தியப் பெண்ணாகவும் இருக்க வேண்டும். பயிற்சி பெற்ற
இந்தியத்  தாதி கிடைப்பது      இந்தியாவிலேயே கஷ்டம் என்றால்
தென்னாப்பிரிக்காவில் எவ்வளவு கஷ்டம் என்பதைப் பற்றிச் சொல்ல
வேண்டியதில்லை. எனவே,          பிரசவ சிகிச்சை சம்பந்தமாகத்
தெரிந்திருக்க         வேண்டியவைகளையெல்லாம் நானே படித்துக்
கொண்டேன். டாக்டர் திரிபுவனதாஸ் எழுதிய   ‘தாய்க்குப் புத்திமதி’
என்ற நூலைப் படித்தேன்.     மற்ற இடங்களில் அங்கும் இங்குமாக
நான் பெற்ற    அனுபவங்களையும் வைத்துக்கொண்டு, அந்த நூலில்
கூறப்பட்டிருந்த முறைகளை அனுசரித்து என் இரு குழந்தைகளையும்
வளர்த்தேன். ஒவ்வொரு         பிரசவ சமயத்திலும் குழந்தையைக்
கவனிக்க         ஒரு தாதியை அமர்த்துவோம்.  ஆனால், இரண்டு
மாதங்களுக்கு மேல்   அந்தத் தாதியை வைத்துக் கொள்ளுவதில்லை.
தாதியை அமர்த்துவதும்        என்     மனைவியைக் கவனித்துக்
கொள்ளுவதற்கே அன்றி,    குழந்தைகளைப் பராமரிப்பதற்கு அன்று.
அந்த வேலையை நானே பார்த்துக் கொண்டேன்.

     கடைசிக் குழந்தையின்   பிரசவந்தான்      என்னை மிகவும்
கடுமையான         வேதனைக்கு உள்ளாக்கி விட்டது. திடீரென்று
பிரசவவேதனை ஏற்பட்டது. உடனே வைத்தியர்    கிடைக்கவில்லை.
மருத்துவச்சியை    அழைத்து வரவும் கொஞ்ச நேரம் ஆகிவிட்டது.
அவள் வந்திருந்தாலும் பிரசவத்திற்கு     அவள் உதவி செய்திருக்க
முடியாது.       சுகப்பிரசவம் ஆகும்படி நானே கவனித்துக்கொள்ள
வேண்டியதாயிற்று. டாக்டர் திரிபுவன தாஸின் நூலை நான் நன்றாகப்
படித்து வைத்திருந்தது எனக்கு அதிக உதவியாக இருந்தது. எனக்குக்
கொஞ்சமேனும் பயமே ஏற்படவில்லை.

     குழந்தைகளைச் சரியானபடி        வளர்க்க வேண்டுமானால்,
சிசுக்களைப் பேணும் முறை,          பெற்றோருக்குத் தெரிந்திருக்க
வேண்டியது அவசியம் என்று நான் நிச்சயமாகக்  கருதுகிறேன். இது
விஷயமாக நன்றாகப் படித்திருந்தது      எவ்வளவு பயன் உள்ளதாக
இருந்தது என்பதை  ஒவ்வொரு கட்டத்திலும் நான் பார்த்திருக்கிறேன்.
இதைக்குறித்து நான் ஆராய்ந்து, அந்த அறிவைப் பயன்படுத்தியிராது
போனால், என் குழந்தைகள் இன்று இருப்பதைப் போல்   இவ்வளவு
உடல் நலத்துடன் இருந்திருக்க மாட்டார்கள். குழந்தை,  அதன் ஐந்து
வயது வரையில் கற்றுக்கொள்ள வேண்டியது  எதுவும் இல்லை என்ற
ஒரு       மூடநம்பிக்கை நமக்கு இருந்து வருகிறது. இதற்கு மாறாக
உண்மை    என்னவென்றால்,  ஒரு குழந்தை   அதன் முதல் ஐந்து