பக்கம் எண் :

ஒரு துக்கமான சம்பவம் [தொடர்சி] 25

Untitled Document
ஆட்டிறைச்சி, தின்பதற்குத்      தோலைப்போல் கடினமாக இருந்தது.
என்னால் அதைத் தின்னவே   முடியவில்லை. எனக்கு அருவருப்பாக
இருந்தது. தின்ன முடியாதென்று விட்டுவிட்டேன்.

     அதன் பிறகு அன்றிரவெல்லாம் எனக்குத் தூக்கமே வரவில்லை.
ஒரு பயங்கரம் எனக்குச் சதா இருந்து     கொண்டிருந்தது. கொஞ்சம்
கண் அயரும் போதெல்லாம்,  உயிரோடு ஓர் ஆடு என் வயிற்றுக்குள்
இருந்துகொண்டு    கத்துவதுபோல் தோன்றும். திடுக்கிட்டு எழுவேன்.
செய்து விட்ட காரியத்திற்காக மனம் உறுத்திக் கொண்டே   இருக்கும்.
ஆனால்       புலால் உண்பது   ஒரு கடமை என்று எனக்கு நானே
நினைவுபடுத்திக் கொள்வேன்; உற்சாகத்தையும் அடைவேன்.

     என் நண்பர் பிடித்த பிடியைச்    சாமானியத்தில் விட்டு விடக்
கூடியவர் அல்ல.இறைச்சியை ருசியுள்ள      பலகாரங்களாகத் தயார்
செய்து,அவை கண்ணுக்கும்           அழகாக இருக்கும்படி செய்ய
ஆரம்பித்தார்.       அவற்றைச் சாப்பிடுவதற்கு  இப்பொழுதெல்லாம்
ஆற்றங்கரையில்      தன்னந்தனியான இடத்தைத் தேடிப் போவதும்
இல்லை. ராஜாங்க மாளிகை        ஒன்று கிடைத்தது.      மேஜை
நாற்காலிகளெல்லாம் போடப்பட்டிருந்த அம்மாளிகையின்    போஜன
மண்டபத்தை, அங்கிருந்த சமையற்காரனுடன் பேசி,    அந்த நண்பர்
ஏற்பாடு செய்திருந்தார்.

     இந்தத் தூண்டியில்      நான்      விழுந்துவிட்டேன். கடை
ரொட்டியிடம் எனக்கு      இருந்த     வெறுப்பையும்,ஆடுகளிடம்
கொண்டிருந்த இரக்கத்தையும் ஒருவாறு போக்கிக்கொண்டு விட்டேன். தனி மாமிசம் எனக்குப்         பிடிக்கவில்லையென்றாலும் மாமிசப் பலகாரங்களை ருசித்துச்       சாப்பிட்டு வந்தேன். இவ்விதம் சுமார்
ஓராண்டு நடந்து வந்தது. ஆனால்,      ஆறு தடவைகளுக்கு மேல் இத்தகைய விருந்துகளை நாங்கள் சாப்பிட்டு விடவில்லை. ஏனெனில், தினந்தோறும் எங்களுக்கு ராஜாங்க      மாளிகை கிடைக்கவில்லை.
அத்துடன் மாமிசப்    பலகாரங்களைத்          தயாரிப்பது அதிக
செலவுள்ளதாகையால் அடிக்கடி தயாரிப்பது  என்பதிலும் கஷ்டங்கள் இருந்தன. இந்தச்     சீர்திருத்தத்திற்குக் கொடுக்க என்னிடம் பணம்
இல்லை. ஆகையால் இந்தச் செலவுக்கு வேண்டியதையெல்லாம்  என் நண்பர் தான் தேடிக்கொள்ள வேண்டியிருந்தது. அவருக்கு  எப்படிப் பணம் கிடைத்தது    என்பதும் எனக்குத் தெரியாது.என்னை மாமிசம்
தின்பவனாக்கி    விடவேண்டும்  என்பதில் அவர்      உறுதியுடன்
இருந்ததால் இதற்கு அவர்  எப்படியோ   பணம் சம்பாதித்து வந்தார்.
ஆனால், இதில் அவருடைய  சக்திக்கும் ஓர் அளவு இருந்திருக்கவே
வேண்டும். எனவே, இந்த  விருந்துகள்       சுருக்கமாகவும், நீண்ட
நாட்களுக்கு ஒரு முறையும்தானே நடைபெற முடியும்?

     இந்த ரகசிய  விருந்துகளைச் சாப்பிடும் சந்தர்ப்பம் கிடைக்கும்