பக்கம் எண் :

250சத்திய சோதனை

Untitled Document
மனபலம் என்னிடம் இல்லை. எனது சிற்றின்ப இச்சையை அடக்குவது
எப்படி? ஒருவன் தன்னுடைய மனைவியிடம் கூடச் சிற்றின்ப உறவைப்
போக்கிக் கொண்டுவிடுவது      என்பது      விசித்திரமானதாகவே
அப்பொழுது தோன்றிற்று. ஆனால், ஆண்டவனின்   அருள் பலத்தில்
பூரண நம்பிக்கை வைத்து, துணிந்து விரதத்தை மேற்கொண்டேன்.

     அந்த விரதத்தை அனுசரித்து வந்திருக்கும்    இருபது ஆண்டு
காலத்தை நான்    இப்பொழுது   எண்ணிப் பார்க்கும்போது எனக்கு
அளவற்ற       ஆனந்தமும் ஆச்சரியமுமே உண்டாகின்றன. புலன்
அடக்கத்தில் ஏறக்குறைய    வெற்றிகரமாக அனுசரித்து வந்திருக்கும்
பயிற்சி 1901-ஆம்      ஆண்டிலிருந்தே நடந்து வருகிறது. ஆனால்,
விரதத்தை      அனுசரித்த பிறகு எனக்கு ஏற்பட்ட சுதந்திரத்தையும்
ஆனந்தத்தையும்         1906-ஆம்   ஆண்டிற்கு முன்னால் நான்
அனுபவித்ததில்லை. விரதம் கொள்ளுவதற்கு முன்னால்       எந்தச்
சமயத்திலும் ஆசைக்கு   அடிமை ஆகிவிடக்கூடும் என்ற நிலையில்
நான் இருந்தேன். ஆனால், இப்பொழுதோ    எந்த ஆசையினின்றும்
என்னைக் காக்கும் நிச்சயமான கேடயமாக விரதம் இருந்து வருகிறது.
பிரம்மச்சரியத்தின் அபார சக்தி,   நாளுக்கு நாள் எனக்குப் புலனாகி
வந்தது.     நான் போனிக்ஸில் இருந்தபோது,       இவ்விரதத்தை
மேற்கொண்டேன்.    வைத்தியப்          படைவேலை நீங்கியதும்
போனிக்ஸு க்குப்     போனேன். பிறகு     ஜோகன்னஸ்பர்க்கிற்குத்
திரும்பிவிட வேண்டியதாயிற்று.        நான் அங்கே திரும்பிய ஒரு
மாதத்திற்கெல்லாம்     சத்தியாகிரகப்            போராட்டத்திற்கு
அடிகோலப்பட்டது. பிரம்மச்சரிய விரதம், எனக்குத்     தெரியாமலே
என்னைச் சத்தியாகிரகத்திற்குத் தயார் செய்து கொண்டிருந்தது போல்
இருந்தது. சத்தியாக்கிரகம், முன்னாலேயே யோசித்துச்  செய்யப்பட்ட
திட்டம் அன்று நான் விரும்பாமலே அது தானாக வந்தது.  ஆனால்,
என்னுடைய காரியங்களெல்லாம் அந்த லட்சியத்தில் கொண்டு போய்
விட்டன என்பதைக்   காண்கிறேன். ஜோகன்னஸ்பர்க்கில் அதிகமாக
இருந்து வந்த வீட்டுச்    செலவுகளையெல்லாம் குறைத்து விட்டேன்.
பிரம்மச்சரிய விரதத்தை  மேற்கொள்வதற்கென்றே போனதைப் போல்
போனிக்ஸு க்குச் சென்றேன்.

     ‘பிரம்மச்சரியத்தைப் பூரணமாக     அனுசரிப்பதே பிரம்மத்தை
அடைவதற்கு மார்க்கம்’ என்ற அறிவு, சாத்திரங்களைப் படித்ததனால்
ஏற்பட்டதன்று.       அனுபவத்தினால்       இந்த  அறிவு எனக்கு
நாளாவட்டத்தில் மெள்ள மெள்ள வளர்ந்தது.      இது சம்பந்தமான
சாத்திர நூல்களை         என் வாழ்க்கையில் பின்னால்தான் நான்
படித்தேன். உடல், மனம், ஆன்மா ஆகியவைகளைக்  காப்பதிலேயே
பிரம்மச்சரியம் இருக்கிறது. விரதத்தின் ஒவ்வொரு   நாளும் என்னை
இந்த அறிவுக்குப் பக்கத்தில் கொண்டுபோயிற்று. ஏனெனில்,