பக்கம் எண் :

எளிய வாழ்க்கை 255

Untitled Document
ஆரம்பித்ததுமே செலவுகளைக்   குறைக்கவும் ஆரம்பித்துவிட்டேன்
சலவைச் செலவு அதிகமாகிக் கொண்டிருந்தது. அதோடு ஒழுங்காகக்
காலாகாலத்தில் வராமல்  இருப்பதிலும் அந்தச் சலவைக்காரர் பெயர்
பெற்றவர். இதனால் இருபது      முப்பது சட்டைகளும் காலர்களும்
இருந்தாலும் அவையும்          எனக்குப் போதா என்ற நிலைமை
ஏற்பட்டுவிட்டது. காலர்களைத் தினந்தோறும் மாற்றியாக  வேண்டும்.
சட்டையைத் தினமும் மாற்றாவிட்டாலும் ஒன்று விட்டு ஒரு நாளாவது
மாற்றியாக வேண்டும். இதனால்        எனக்கு இரட்டிப்புச் செலவு
ஆயிற்று. அது அனாவசியமான செலவு என்று எனக்குத் தோன்றிற்று.
ஆகையால், அந்தப்        பணத்தை மிச்சப்படுத்துவதற்காக நானே
சலவைச் சாமான்களைச்                சேகரித்துக் கொண்டேன்.
சலவையைப் பற்றிய    ஒரு         புத்தகத்தை வாங்கிப் படித்து,
அக் கலையைக்        கற்றுக்கொண்டதோடு,   என் மனைவிக்கும்
சொல்லிக் கொடுத்தேன். இதனால் எனக்கு    வேலை அதிகமாயிற்று
என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்,      அத் தொழில் எனக்குப்
புதுமையானதாகையால்    அதைச் செய்வது இன்பமாகவே இருந்தது.

     நானே சலவை செய்து போட்டுக்கொண்ட    முதல் கழுத்துப்
பட்டை (காலர்)யை நான் என்றும் மறந்துவிட  முடியாது. தேவைக்கு
அதிகமாகக் கஞ்சி போட்டுவிட்டேன்.       தேய்க்கும்  பெட்டியின்
இரும்பில் போதுமான சூடு இல்லை.      கழுத்துப்பட்டை  எங்கே
பொசுங்கிவிடுமோ என்ற பயத்தில் அதைச் சரியாக நான்  அழுத்தித்
தேய்க்கவும்  இல்லை. இதன் பலன் என்னவெனில், கழுத்துப்பட்டை
ஓரளவு விரைப்பாகத் தான் இருந்தது என்றாலும்,    அதிகப்படியாக
அதற்குப் போட்டுவிட்ட கஞ்சி, அதிலிருந்து     உதிர்ந்துகொண்டே
இருந்தது. அந்தக்      கழுத்துப்பட்டையைக்      கட்டிக்கொண்டு
கோர்ட்டுக்குப் போனேன். மற்ற     பாரிஸ்டர்களின் பரிகாசத்துக்கு
ஆளானேன்.     ஆனால், அந்த நாளிலேயே நான் பரிகாசத்துக்குப்
பயப்படாதவன் ஆகிவிட்டேன்.

     “என்      கழுத்துப்பட்டைகளை நானே     சலவை செய்து
கொள்ளுவதில், இது என் முதல் பரிசோதனை. அதனால்தான் கஞ்சி
உதிர்ந்து         கொண்டிருக்கிறது. அது      எனக்கு எவ்விதத்
தொல்லையையும் கொடுக்கவில்லை. அதோடு    நீங்கள் இவ்வளவு
சிரித்து, இன்புறுவதற்கு இது காரணமாகவும் இருக்கிறது”  என்றேன்.

     “ஆனால், இங்கே         சலவைக் கடைகளுக்குப் பஞ்சமே
இல்லையே?” என்று ஒரு நண்பர் கேட்டார்.

     “சலவைச் செலவு அதிகமாகிறது.    ஒரு கழுத்துப்பட்டையின்
விலை எவ்வளவோ அவ்வளவு     ஆகிவிடுகிறது அதைச் சலவை
செய்யும் கூலி.     அப்படியானாலும்          ஆகட்டும் என்றால்,
என்றென்றைக்கும்    சலவைத் தொழிலாளியையே      நம்பி வாழ
வேண்டியதாக இருக்கிறது. ஆகையால்,      என் துணிகளை நானே