பக்கம் எண் :

256சத்திய சோதனை

Untitled Document
சலவை செய்து கொள்ளுவது மேல் என்று எண்ணுகிறேன்” என்றேன்.

     ஆனால், தம் வேலைகளைத் தாமே    செய்து கொள்ளுவதில்
உள்ள இன்பத்தை என் நண்பர்கள்   உணரும்படி செய்ய என்னால்
ஆகவில்லை.       என் சொந்த வேலையைப்  பொறுத்த வரையில்,
நாளாவட்டத்தில்        சலவைத் தொழிலில் நான் அதிகத் தேர்ச்சி
பெற்றவன் ஆகிவிட்டேன்.           என்னுடைய சலவை, சலவைத்
தொழிலாளியின் சலவைக்கு      எந்தவிதத்திலும் குறைவானதாகவும்
இல்லை. என்னுடைய     கழுத்துப் பட்டைகள்,   மற்றவர்களுடைய
கழுத்துப்பட்டைகளைவிட       விறைப்பிலும்       பளபளப்பிலும்
குறைந்தனவாகவும் இல்லை.

     கோகலே, தென்னாப்பிரிக்காவுக்கு வந்தபோது,      அவர் ஓர்
அங்கவஸ்திரம் வைத்திருந்தார்.  அதை மகாதேவ கோவிந்த ரானடே,
அவருக்கு அன்பளிப்பாகத் தந்திருந்தார்; அந்த அருமையான ஞாபகச்
சின்னத்தை கோகலே மிகவும் போற்றிக்    கவனத்துடன் பாதுகாத்து
வந்தார். விசேட             சமயங்களில் மாத்திரமே அதை அவர்
உபயோகிப்பார்.    அப்படிப்பட்ட விசேட சந்தர்ப்பம் ஒன்று வந்தது.
ஜோகன்னஸ்பர்க்  இந்தியர், கோகலேக்கு அளித்த விருந்துபச்சாரமே
அந்தச்     சந்தர்ப்பம். இதற்கு அந்த அங்கவஸ்திரத்தைப் போட்டுக் கொண்டு போக, கோகலே விரும்பினார். ஆனால்,     அது கசங்கிப்
போயிருந்ததால் ‘இஸ்திரி’        போடவேண்டி இருந்தது. சலவைத்
தொழிலாளியிடம் அனுப்பி, ‘இஸ்திரி’   போட்டுக்கொண்டு வருவதற்கு
நேரம் இல்லை. எனவே, அதில்      என்னுடைய கைத்திறமையைக்
காட்டுவதாகக் கூறினேன்.

     “வக்கீல் தொழிலில் என்றால்    உம்முடைய திறமையில் நான்
நம்பிக்கை வைக்க முடியும். ஆனால்  சலவைத் தொழிலில் உமக்குத்
திறமை இருப்பதாக  நம்புவதற்கில்லை” என்றார் கோகலே.” அதைக்
கெடுத்து விடுவீராயின் என்ன செய்வது? அது   எனக்கு எவ்வளவு
அருமையான பொருள் தெரியுமா?” என்றும் கூறினார்.     இவ்விதம்
சொல்லி, அந்த அன்பளிப்பு தமக்குக் கிடைத்த வரலாற்றையும் அதிக
ஆனந்தத்தோடு கூறினார். நானே      அவ்வேலையைச் செய்வதாக
மீண்டும்  வற்புறுத்தினேன். வெகு நன்றாகச் செய்து கொடுப்பதாகவும்
வாக்களித்தேன்! பிறகு அதை, ‘இஸ்திரி’ போட  அனுமதி கிடைத்தது.
அதைச் செய்து முடித்து அவருடைய      பாராட்டையும் பெற்றேன்.
அதற்குப் பிறகு அவ்வேலைத் திறமைக்கு       எனக்கு நற்சாட்சிப்
பத்திரம் அளிக்க உலகமே மறுத்து விட்டாலும்    எனக்குக் கவலை
இல்லை.

     சலவைத் தொழிலாளிக்கு        அடிமையாக இருப்பதிலிருந்து
என்னை நான் விடுவித்துக்        கொண்டதைப் போலவே க்ஷவரத்
தொழிலாளியை எதிர்பார்ப்பதையும்     போக்கிக்கொண்டு விட்டேன்.
இங்கிலாந்துக்குப் போகிறவர்கள்        எல்லோரும் க்ஷவரம் செய்து