பக்கம் எண் :

ஒரு துக்கமான சம்பவம் [தொடர்சி] 27

Untitled Document
கடவுள் தமது   எல்லையில்லாக் கருணையினால் என்னைத்  தடுத்துக்
காத்தார். இந்தப்          பாவக்குழிக்குள் போனதுமே  பார்வையை
இழந்தவன்போல் ஆகிவிட்டேன்.பேசவும் நா எழவில்லை படுக்கையில்
அப்பெண்ணின் பக்கத்தில் உட்கார்ந்தேன்.   ஆனால், ஒரு வார்த்தை
கூட என்னால் பேச முடியவில்லை.   ஆகவே, அவள் பொறுமையை
இழந்து விட்டாள். என்னைத் திட்டி,   அவமதித்து, வெளியே போகச்
சொல்லி விட்டாள்.  எனது ஆண்மைக்கே இதனால் இழுக்கு ஏற்பட்டு
விட்டதாக  அப்பொழுது நினைத்தேன். இந்த அவமானத்தினால் நான்
பூமிக்குள் புதைந்துவிட வேண்டும்  என்றும் விரும்பினேன்.  ஆனால்,
என்னைக் காத்தருளியதற்காக  அப்பொழுதிலிருந்து நான் கடவுளுக்கு
நன்றி தெரிவித்து வருகிறேன். என்      வாழ்க்கையில் இதுபோலவே
நடந்த மற்றும் நான்கு சம்பவங்களும் எனக்கு    நினைவிருக்கின்றன.
அநேகமாக         இவற்றிலெல்லாம்    என்னளவில் நான்  செய்த
முயற்சியைவிட எனது        நல்லதிருஷ்டமே என்னைக்   காத்தது.
கண்டிப்பான       அறநெறியைக்    கொண்டு கவனித்தால்,  இந்தச்
சம்பவங்களையெல்லாம் ஒழுக்கத் தவறுகள்        என்றே  சொல்ல
வேண்டும். ஏனெனில், மனதில் சிற்றின்ப இச்சை     இருந்தது;  அது
காரியத்தைச்        செய்துவிட்டதற்குச் சமமே. ஆனால்,  சாதாரண
நோக்கோடு              கவனிப்பதாயின், உடலினால்  ஒரு  பாவ
காரியத்தைச்   செய்துவிடாதவன்     காப்பாற்றப்பட்டவனே  என்று
கருதப்படுவான். நான்         காப்பாற்றப்பட்டேன் என்பதும்  இந்த
அர்த்தத்திலேதான்.

     சில செயல்களிலிருந்து தப்புவது,   அப்படித் தப்புகிறவனுக்கும்
அவனைச் சுற்றியிருப்போருக்கும்      தெய்வாதீனமாக நிகழும் ஒரு
காரியமாக இருக்கிறது. அவனுக்கு  நல்லது இன்னதென்பதில் திரும்ப
உணர்வு ஏற்படும்போது, அவ்விதம்     தப்பிவிட்டதற்காக கடவுளின்
கருணைக்கு           நன்றியுள்ளவனாகிறான். மனிதன் என்னதான்
முயன்றாலும், அது முடியாமல்      அடிக்கடி ஆசையின் வலையில்
சிக்கிக் கொண்டு விடுகிறான்     என்பதை நாம் அறிவோம். அப்படி
அவன் சிக்கிக்கொண்டாலும், கடவுள்   குறுக்கிட்டு அவனைக் காத்து
வருவதும் உண்டு என்பதையும் அறிவோம். இவையெல்லாம் எவ்விதம்
நிகழ்கின்றன?        மனிதன் எவ்வளவு தூரம் தன் இஷ்டம்போல்
நடந்துகொள்ளக்       கூடியவனாக இருக்கிறான்? எவ்வளவு தூரம்
சந்தர்ப்பங்களுக்கு     அவன் அடிமையாயிருக்கிறான்? விதி எங்கே
வந்து புகுகிறது?         என்பனவெல்லாம் நம்மால் அறிய இயலாத
மர்மங்கள். அவை என்றும்   மர்மங்களாகவே இருந்து வரும். இனிக்
கதையைத் தொடர்ந்து      கவனிப்போம். என் நண்பரின் சகவாசம்
தீமையானது என்பதை அறிய, இந்த     விபசாரி நிகழ்ச்சி கூட என்
கண்களைத் திறந்து        விடவில்லை. எனவே, நான் எதிர்பாராத
வகையில் அவரிடம் இருக்கும் சில  குறைகளை என் கண்ணாலேயே