பக்கம் எண் :

568சத்திய சோதனை

Untitled Document
வைக்குமாறு யோசனை கூறி அவர் எனக்குக்  கடிதமும் எழுதினார்.
நான் அப்பொழுது      அகமதாபாத்தில் இருந்ததால், பம்பாய்க்கும்
அதற்கும் உள்ள தூரத்தின்     காரணமாக நான் அறிவித்த பிறகே
அக்கடிதம் எனக்குக் கிடைத்தது. ஆகவே   அவர் திடீரென்று நாடு
கடத்தப்பட்டது எனக்கு மனவேதனை மட்டுமன்றி ஆச்சரியத்தையும்
அளித்தது.

     இவ்விதமான       நிலைமைகள்  ஏற்பட்டுவிடவே பம்பாய்க்
‘கிரானிகிளின் டைரக்டர்கள்,  பத்திரிக்கையை நடத்தும் பொறுப்பை
ஏற்றுக் கொள்ளும்படி என்னைக்     கேட்டுக் கொண்டார்கள். ஸ்ரீ
பிரெல்வி ஏற்கனவே அப்பத்திரிகையில் இருந்தார்.   ஆகவே, நான்
செய்யவேண்டியது அதிகமில்லை. ஆனால்,       என் சுபாவத்தை
அனுசரித்து இப்பொறுப்பு என்னுடைய   சிரமத்தை அதிகமாக்கியது.

     ஆனால், எனக்குச் சிரமம் இல்லாதபடி செய்ய வந்தது போல்
அரசாங்கமும் முன் வந்துவிட்டது.   அரசாங்கத்தின் உத்தரவினால்
‘கிரானிகிள்’ பத்திரிக்கையை நிறுத்திவைத்து விட வேண்டியதாயிற்று.

     ‘கிரானிகிள்’ நிர்வாகத்தை நடத்தி வந்த   நண்பர்களான ஸ்ரீ
உமார் ஸோபானியும், ஸ்ரீ  சங்கரலால் பாங்கரும்,   இதே சமயத்தில்
‘எங் இந்தியா’ என்ற    பத்திரிக்கையையும் நிர்வகித்து வந்தார்கள்.
‘கிரானிகள்’            நிறுத்திவைக்கப்பட்டு விட்டதால், அதனால்
ஏற்பட்டிருக்கும் குறை நீங்குவதை முன்னிட்டு,   ‘எங் இந்தியா’வின்
ஆசிரியர் பதவியை        நான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று
சொன்னார்கள். வாரப்    பத்திரிக்கையாக           நடந்து வந்த
‘எங் இந்தியா’வை, வாரம்        இருமுறைப்  பத்திரிகையாக்கலாம்
என்றார்கள்.                நானும் அதைத் தான் எண்ணினேன்.
சத்தியாக்கிரகத்தின் உட்பொருளைப்     பொதுமக்களுக்கு விளக்கிச்
சொல்ல வேண்டும் என்று நான்   ஆவலோடு இருந்தேன். அதோடு
இம்முயற்சியால் பாஞ்சால நிலைமையைக் குறித்தும் ஓரளவுக்கு என்
கடமையைச் செய்யலாம் என்றும் நம்பினேன்.      ஏனெனில், நான்
என்ன       எழுதினாலும்,   அதன் முடிவு     சத்தியாக்கிரகமே.
அரசாங்கத்திற்கும் அது தெரியும். ஆகையால், இந்நண்பர்கள் கூறிய
யோசனையை உடனே ஏற்றுக்கொண்டு விட்டேன்.

     ஆனால், ஆங்கிலத்தை   உபயோகித்து,  சத்தியாக்கிரகத்தில்
பொது மக்களுக்கு எவ்வாறு       பயிற்சி அளிக்க முடியும்? நான்
முக்கியமாக    வேலை செய்து வந்த இடம் குஜராத். ஸ்ரீ ஸோபானி,
ஸ்ரீ பாங்கர் கோஷ்டியுடன்   அச்சமயம் ஸ்ரீ இந்துலால் யாக்ஞிக்கும்
இருந்தார். குஜராத்தி     மாதப் பத்திரிக்கையான நவஜீவனை அவர்
நடத்தி வந்தார்.      இந்த நண்பர்கள் அதற்குப் பணவுதவி செய்து
வந்தார்கள். அந்த    மாதப் பத்திரிக்கையையும்     அந்நண்பர்கள்
என்னிடம் ஒப்படைத்தனர்.        ஸ்ரீ இந்துலாலும் அதில் வேலை
செய்வதாகக்