பக்கம் எண் :

‘நவ ஜீவன்’, ‘எங் இந்தியா’ 569

Untitled Document
கூறினார். அந்த மாதப் பத்திரிக்கை  வாரப் பத்திரிக்கையாக மாற்றப்
பட்டது.

     இதற்கு மத்தியில் ‘கிரானிகிள்’       புத்துயிர் பெற்றெழுந்தது.
ஆகையால்,               ‘எங் இந்தியா’ முன்பு போலவே வாரப்
பத்திரிக்கையாயிற்று. இரண்டு வாரப்     பத்திரிக்கைகளை, இரண்டு
இடங்களிலிருந்து பிரசுரிப்பதென்பது, எனக்கு    அதிக அசௌகரிய
மானதோடு           செலவும் அதிகமாயிற்று. ‘நவஜீவன்’ முன்பே
அகமதாபாத்திலிருந்து பிரசுரமாகி வந்ததால்     என் யோசனையின்
பேரில் ‘எங் இந்தியா’வும் அங்கேயே மாற்றப்பட்டது.

     இந்த மாற்றத்திற்கு இதல்லாமல்  வேறு காரணங்களும் உண்டு.
இத்தகைய பத்திரிகைகளுக்குச்       சொந்தமாக அச்சகம் இருக்க
வேண்டியது அவசியம்        என்பதை   ‘இந்தியன் ஒப்பீனியன்’
அனுபவத்திலிருந்து      அறிந்திருந்தேன்.    மேலும், இந்தியாவில்
அப்பொழுது கடுமையான      அச்சுச் சட்டங்கள் அமுலிலிருந்தன.
ஆகையால்,       என்னுடைய கருத்துக்களைத் தங்கு தடையின்றி
வெளியிட நான் விரும்பினால்,           லாபம் கருதியே நடத்தப்
பட்டவையான         அப்பொழுதிருந்த அச்சகங்கள், அவற்றைப்
பிரசுரிக்கத் தயங்கும். எனவே, சொந்தத்தில்       ஓர் அச்சகத்தை
அமைத்துக்கொள்ள     வேண்டியது மிகவும் அத்தியாவசியமாயிற்று.
அகமதாபாத்திலேயே     சௌகரியமாக   அச்சகத்தை அமைத்துக்
கொள்ளலாமாகையால், ‘எங் இந்தியா’வையும்     அங்கே கொண்டு
போனோம்.

     சத்தியாக்கிரகத்தைக்            குறித்துப் பொதுமக்களுக்கு
இப் பத்திரிக்கைகளின்      மூலம் என்னால்    இயன்ற வரையில்
போதிக்கும்         வேலையைத்          தொடங்கினேன். இரு
பத்திரிக்கைகளுக்கும் ஏராளமானவர்கள்  சந்தாதாரர்களாயினர். ஒரு
சமயம் ஒவ்வொரு பத்திரிக்கையும்        நாற்பதினாயிரம் பிரதிகள்
செலவாயின. நவஜீவன்      சந்தாதாரர்கள் தொகை ஒரேயடியாகப்
பெருகிய போதிலும்      ‘எங் இந்தியா’வின் சந்தாதார்கள் தொகை
நிதானமாகவே அதிகரித்தது.         நான் சிறைப்பட்ட பிறகு, இரு
பத்திரிக்கைகளின் சந்தாதாரர் தொகையும்      அதிகமாக குறைந்து
விட்டது. இன்று எண்ணாயிரம் பிரதிகளே போகின்றன.

     இப்பத்திரிக்கைகளில்        விளம்பரங்களைப் பிரசுரிப்பதை
ஆரம்பத்திலிருந்தே மறுத்துவிட்டேன். இதனால்   அப்பத்திரிகைகள்
எந்த நஷ்டத்தையும்    அடைந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை.
ஆனால், இதற்கு மாறாக,         அப்பத்திரிக்கைகள் சுதந்திரமாக
இருந்துவருவதற்கு     என் தீர்மானம் பெரிய அளவுக்கு உதவியாக
இருந்தது என்பதே என் நம்பிக்கை.

     என் அளவில் நான்        மன அமைதியை அடைவதற்கும்
இப்பத்திரிக்கைகள் எனக்கு உதவியாக இருந்தன. சாத்விகச்