பக்கம் எண் :

30சத்திய சோதனை

Untitled Document

விஷமுள்ளது என்று கேள்வியுற்றோம்.     அவ்விதையைத்  தேடிக்
கொண்டு காட்டுக்குப் போய்    அதைக் கொண்டு  வந்துவிட்டோம்.
மாலை நேரமே இதற்கு        நல்லவேளை என்றும்  முடிவாயிற்று.
கேதார்ஜி கோயிலுக்குப்         போய் அங்கே  விளக்குக்கு நெய்
வார்த்தோம்; சுவாமி தரிசனம்         செய்து  கொண்டோம். பிறகு
ஒதுக்குப் புறமான          ஒரு மூலைக்குப்  போனோம். ஆனால்,
எங்களுக்குத் துணிச்சல்        வரவில்லை.   உடனேயே செத்துப்
போகாமல் இருந்து விட்டால்? அதோடு தற்கொலை         செய்து
கொள்ளுவதால் தான் என்ன நன்மை?    சுதந்திரமின்மையைத்தான்
ஏன் சகித்துக் கொள்ளக் கூடாது?      என்றாலும் இரண்டு, மூன்று
விதைகளை விழுங்கிவிட்டோம். இன்னும்      அதிகமாகத் தின்னத்
தைரியமில்லை. எங்கள்         இருவருக்குமே  சாவதற்குப் பயம்.
மனத்தைத் தேற்றிக்கொள்ள    ராம்ஜி       கோயிலுக்குப் போய்
தற்கொலை எண்ணத்தையே         விட்டுவிடுவது  என்று முடிவு
செய்தோம்.

     தற்கொலை செய்துகொள்ள எண்ணுவதைப்போலத் தற்கொலை
செய்து கொண்டு விடுவது         அவ்வளவு எளிதானதே அல்ல
என்பதைப் புரிந்துகொண்டேன். அதிலிருந்து,  யாராவது தற்கொலை
செய்துகொள்ளுவதாக மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்  என்று நான்
அறிந்தால், நான் கொஞ்சமும் பயப்படுவதே இல்லை.   தற்கொலை
எண்ணத்தினால் முடிவாக ஒரு  நன்மையும் உண்டாயிற்று.  துண்டுச்
சிகரெட்டுகளைப் பொறுக்கிப்      புகை பிடிக்கும் வழக்கத்தையும்,
புகை பிடிப்பதற்காக     வேலைக்காரனின் காசைத் திருடுவதையும்
நாங்கள் இருவரும் விட்டுவிட்டோம்.

     நான் வயதடைந்துவிட்ட     பின்பு,  புகை பிடிக்கவேண்டும்
என்று           விரும்பியதே  இல்லை. புகை பிடிக்கும் பழக்கம்,
காட்டுமிராண்டித்தனமானது, ஆபாசமானது, தீமையை விளைவிப்பது
என்று நான் எப்பொழுதும்         கருதி வந்திருக்கிறேன். உலகம்
முழுவதிலுமே புகை பிடிப்பதில்   இவ்வளவு வெறி ஏன் இருக்கிறது
என்பது எனக்கு விளங்கவே இல்லை. புகை பிடிப்பவர்கள் நிரம்பிய
வண்டியில் பிரயாணம் செய்யவே  எனக்குச் சகிப்பதில்லை. எனக்கு
மூச்சுத் திணறி விடுகிறது.

     இந்தத் திருட்டையும்விட மிக    மோசமான ஒன்று, அதற்குக்
கொஞ்சம் பின்னால் நான் செய்த குற்றமாகும்.       பன்னிரெண்டு
அல்லது பதின்மூன்று     வயதிருக்கும்போது காசுகள் திருடினேன்;
வயது எனக்கு இன்னும்      குறைவாகவும் இருந்திருக்கலாம். நான்
செய்த மற்றொரு திருட்டோ,      எனக்குப்    பதினைந்த வயதாக
இருக்கும்போது, இச்சமயம்,    மாமிசம் தின்னும் என் அண்ணனின்
கைக்காப்பிலிருந்து       கொஞ்சம் தங்கத்தைத் திருடினேன். இந்த
அண்ணன் இருபத்தைந்து ரூபாய் கடன்பட்டிருந்தார். அவர் கையில்
கெட்டித் தங்கக் காப்பு அணிந்திருந்தார். அதிலிருந்து