பக்கம் எண் :

திருட்டும் பரிகாரமும்31

Untitled Document

கொஞ்சம் தங்கத்தை வெட்டி          எடுத்துவிடுவது கஷ்டமன்று.

     சரி, அப்படியே    செய்யப்பட்டது; கடனும் தீர்ந்தது. ஆனால்,
இக்குற்றம் என்னால்   பொறுக்க முடியாததாயிற்று. இனித் திருடுவதே
இல்லை என்று முடிவு கட்டிக்      கொண்டேன். இக்குற்றத்தை என்
தந்தையாரிடம் ஒப்புக் கொண்டு    விடுவது என்றும் தீர்மானித்தேன்.
ஆனால், சொல்லத்           துணிவு வரவில்லை. என் தந்தையார்
என்னை அடிப்பார் என்று        நான் பயப்படவில்லை. எங்களில்
யாரையுமே அவர் அடித்ததாக எனக்கு    ஞாபகமில்லை. அவருக்கு
நான் உண்டாக்கக்கூடிய மனவேதனையைக்   குறித்தே அஞ்சினேன்.
அதற்கும் துணிந்துதான் ஆகவேண்டும் என்று எனக்குத் தோன்றியது.
எல்லாவற்றையும் அவரிடம் சொல்லி    விட்டாலன்றிப் பாவம் தீராது
என்றும் கருதினேன்.

     என் குற்றத்தை ஒரு கடிதத்தில்      எழுதி என் தந்தையிடம்
கொடுத்து, மன்னிப்புக் கேட்பதென்று   கடைசியாகத் தீர்மானித்தேன்.
ஒரு துண்டுக் காகிதத்தில்  அதை எழுதி நானே என் தந்தையாரிடம்
கொடுத்தேன்.   அக்குறிப்பில்      நான்         என் குற்றத்தை
ஒப்புக்கொண்டிருந்ததோடு அதற்கு தக்க தண்டனையை   எனக்குக்
கொடுக்குமாறும் கேட்டிருந்தேன்.    என்     குற்றத்திற்காக அவர்
தம்மையே       தண்டித்துக்கொள்ள வேண்டாம் என்றும் முடிவில்
அவரைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.    இனித் திருடுவது இல்லை
என்றும் நான் பிரதிக்ஞை செய்து கொண்டேன்.

     குற்றத்தை ஒப்புக்கொண்டு     எழுதியிருந்த காகிதத்தை என்
தந்தையாரிடம் நான் கொடுத்தபோது என்  உடலெல்லாம் நடுங்கியது.
அப்பொழுது அவர் பவுந்திர     நோயினால் பீடிக்கப்பட்டுப் படுத்த
படுக்கையாக இருந்தார்.   சாதாரண மரப்பலகையே அவர்  படுக்கை.
என் கடிதத்தை அவரிடம் கொடுத்துவிட்டு, அப்பலகைக்கு   எதிரில்
உட்கார்ந்தேன்.

     அவர் முழுவதையும் படித்தார். முத்துத் துளிகள் போல் அவர்
கன்னங்களில் கண்ணீர் வழிந்து காகிதத்தை நனைத்தது. ஒரு கணம்
கண்ணை மூடிக்கொண்டு           சிந்தித்தார்.  பிறகு கடிதத்தைக்
கிழித்தெறிந்தார். அக்கடிதத்தைப்            படிப்பதற்காக எழுந்து
உட்கார்ந்தவர், திரும்பவும்            படுத்துக் கொண்டார். நானும்
கதறி அழுதேன். என் தந்தையார்    அனுபவித்த வேதனையை நான்
காண முடிந்தது. நான் ஓவியக்காரனாக        இருந்தால் அக்காட்சி
முழுவதையுமே இன்று சித்திரமாக எழுதிவிட         முடியும். அது
இப்பொழுதும் மனத்தில் தெளிவாக இருந்து வருகிறது.

     முத்துப்போன்ற அந்த அன்புத்துளிகள் என்     உள்ளத்தைச்
சுத்தப்படுத்தி, என் பாவத்தையும்      அலம்பிவிட்டன. அத்தகைய
அன்பை அனுபவித்தவர்கள் மட்டுமே,     அது இன்னது என்பதை
அறிய முடியும். அன்புக் கணைகளினால் எய்யப்பட்டவன்