பக்கம் எண் :

302சத்திய சோதனை

Untitled Document
வருவார். தாம் செய்துவரும்       வேலையின் தன்மையைக் குறித்து
அவ்வப்போது எனக்குச் சொல்லி வருவார்.

     என் சொந்தத் திட்டங்கள் எவையும்   நிலைத்திருக்கக் கடவுள்
என்றுமே அனுமதித்ததில்லை       என்றே சொல்ல வேண்டும். என்
திட்டங்கள் அவர் வழியில் அவர்    பைசல் செய்துகொண்டிருந்தார்.

     நான் எண்ணியவாறு நான்    பம்பாயில் நிலைத்து விட்டதாகத்
தோன்றிய சமயத்தில்                எதிர்பாராத விதமாகத் தென்
ஆப்பிரிக்காவிலிருந்து எனக்கு ஒரு தந்தி    வந்தது. “சேம்பர்லேன்
இங்கே எதிர்பார்க்கப்படுகிறார்.       தயவு செய்து உடனே திரும்பி
வாருங்கள்” என்பதே அந்தத் தந்தி.       நான் வாக்களித்திருந்தது
நினைவுக்கு வந்தது.              பிரயாணத்திற்கு எனக்குப் பணம்
அனுப்பியதுமே   நான் புறப்படத் தயாராக இருப்பதாகப் பதில் தந்தி
கொடுத்தேன். அவர்களும் உடனே பணம்     அனுப்பி விட்டார்கள்.
என் அலுவலகத்தைக் கைவிட்டுவிட்டுத்    தென்னாப்பிரிக்காவுக்குப்
புறப்பட்டேன்.

     அங்கிருந்த வேலை முடிய ஓர்   ஆண்டாவது ஆகும் என்று
எண்ணினேன். எனவே,         பம்பாயில் பங்களாவை அப்படியே
வைத்துக்கொண்டு என்         மனைவியையும் குழந்தைகளையும்
அங்கேயே விட்டுச் சென்றேன்.

     நாட்டில் ஒரு வேலையும்         அகப்படாமல் கஷ்டப்படும்
ஊக்கமுள்ள இளைஞர்கள், மற்ற நாடுகளில் குடியேறிவிட வேண்டும்
என்று இப்பொழுது நம்பினேன். ஆகையால்,        அப்படிப்பட்ட
இளைஞர்கள் நான்கு, ஐந்து பேரை         என்னுடன் அழைத்துச்
சென்றேன். அதில் ஒருவர் மகன்லால் காந்தி.

     காந்தி குடும்பம் எப்பொழுதுமே பெரிய குடும்பம்.     பழைய
சுவட்டிலேயே போய்க் கொண்டிருக்க   விரும்பாதவர்களைக் கண்டு
பிடித்து வெளிநாடுகளுக்குத் துணிந்து          போகும்படி செய்ய
விரும்பினேன். இவர்களில் அநேகரை    என் தந்தையார் சமஸ்தான
உத்தியோகங்களில் அமர்த்தி வந்தார்.       அத்தகைய உத்தியோக
மோகத்திலிருந்து அவர்களை விடுவிக்க விரும்பினேன். அவர்களுக்கு
வேறு வேலை தேடிக் கொடுக்கவும்   என்னால் முடியாது. அவர்கள்
சுயநம்பிக்கையில்         வாழ்பவர்களாக இருக்க வேண்டும் என்று
விரும்பினேன்.

     ஆனால், என் லட்சியங்கள்    உயர்வானவை ஆக ஆக, என்
லட்சியங்களையே ஏற்றுக்கொள்ளும்படி      அந்த இளைஞர்களைத்
தூண்ட முயன்றேன். மகன்லால் காந்திக்கு     வழிகாட்டிய வகையில்
என் முயற்சி மிகப் பெறும் வெற்றியை அடைந்தது.    இதைப் பற்றிப்
பிறகு கூறுகிறேன்.

     மனைவி, குழந்தைகளை         விட்டுப் பிரிவது, நிலையான
குடித்தனத்தை நடுவில் குலைப்பது, நிச்சயமானதொரு