பக்கம் எண் :

303

Untitled Document
நிலையிலிருந்து நிச்சயமற்ற நிலைக்குப் போவது ஆகிய இவை யாவும்
ஒரு கணம் எனக்கு வேதனை   தருவனவாகவே இருந்தன. ஆனால்,
நிச்சயமற்றதான வாழ்வைக் கண்டு        அஞ்சாத தன்மை எனக்கு
இருந்தது. சத்தியமாக இருக்கும்    கடவுளைத் தவிர மற்ற எல்லாமே
நிச்சயமற்றதாயிருக்கும்         இவ்வுலகத்தில் நிச்சயமான வாழ்வை
எதிர்பார்ப்பது தவறு என்று எண்ணுகிறேன்.       நம்மைச் சுற்றிலும்
தோன்றுபவை, நிகழ்பவை ஆகிய      எல்லாமே நிச்சயமற்றவையும்
அநித்தியமானவையுமே ஆகும். ஆனால்,          இவற்றிலெல்லாம்
மறைந்திருக்கும் எல்லாவற்றிலும்   மேலானதான பரம்பொருள் ஒன்றே
நிச்சயமானது. அந்த நிச்சயமான     பரம்பொருளை ஒரு கணமேனும்
தரிசித்து,      அதனுடன் தன்னை இணைத்துக் கொண்டு விடுபவனே
பெரும் பாக்கியசாலி. அந்தச்        சத்தியப் பொருளைத் தேடுவதே
வாழ்வின் நித்தியானந்தமாகும்.

     சரியான தருணத்தில் நான் டர்பன் போய்ச் சேர்ந்தேன். அங்கே
வேலை எனக்காகக் காத்துக்கொண்டிருந்தது. சேம்பர் லேனிடம்  தூது
செல்வதற்குத் தேதியும்           நிச்சயிக்கப்பட்டிருந்தது. அவரிடம்
சமர்ப்பிப்பதற்கு மகஜரைத் தயாரிப்பதோடு நானும் தூது கோஷ்டியுடன்
சென்று அவரைப் பார்க்கவேண்டும்.