பக்கம் எண் :

328சத்திய சோதனை

Untitled Document
வெள்ளக்காரக் குற்றவாளிக்குத் தண்டனை   அளிப்பது கஷ்டமானது
என்பதை நான் அறிந்திருந்தது போலவே   அவரும் அறிந்திருந்தார்.
ஆனால், “எப்படியும்,     முயன்று பார்ப்போம். ஜூரிகள் விடுதலை
செய்துவிடுவார்களே என்று பயந்துகொண்டு குற்றவாளிகளைச் சும்மா
விட்டு விடுவது என்பது சரியல்ல. அவர்களை நான் கைது   செய்து
விடுகிறேன். என்னாலான முயற்சி         எதையும் நான் செய்யாது
விடமாட்டேன் என்று உங்களுக்கு      உறுதி கூறுகிறேன்” என்றார்,
போலீஸ் கமிஷனர்.

     வாக்குறுதி எனக்குத் தேவையில்லை. பல அதிகாரிகளின்  மீது
எனக்குச் சந்தேகம் இருந்தது. ஆனால்,      அவர்கள் மீதெல்லாம்
ஆட்சேபிக்க முடியாத    சாட்சியங்கள் என்னிடம் சரி வர இல்லை.
ஆகையால், குற்றம் செய்தவர்கள் என்பதில்     யார் மீது எனக்குச்
சிறிதளவேனும் சந்தேகமே கிடையாதோ    அப்படிப்பட்ட இருவரை
மாத்திரம் கைது செய்ய           வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டன.

     என்னுடைய நடமாட்டத்தை        எப்பொழுதும் ரகசியமாக
வைத்திருப்பதற்கில்லை. அநேகமாக       ஒவ்வொரு நாளும் நான்
போலீஸ் கமிஷனரிடம்         போய்க்கொண்டிருக்கிறேன் என்பது
அநேகருக்குத் தெரியும். எந்த   இரு அதிகாரிகளைக் கைது செய்ய
வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டனவோ அந்த இரு  அதிகாரிகளுக்கும்
ஓரளவுக்குத் திறமை வாய்ந்த ஒற்றர்கள் இருந்தனர். அவர்கள் என்
அலுவலகத்தைக்       கண்காணித்துக் கொண்டிருந்து என்னுடைய
நடமாட்டத்தைக்         குறித்து அந்த அதிகாரிகளுக்கு அடிக்கடி
அறிவித்துக் கொண்டிருந்தார்கள். இன்னுமொன்றையும்  நான் ஒப்புக்
கொள்ள வேண்டும். அந்த           இரு அதிகாரிகளும்  மிகவும்
கெட்டவர்களாகையால், அவர்களுக்குப் பல ஒற்றர்கள்  இருந்திருக்க
முடியாது. இந்தியரும் சீனரும்          எனக்கு உதவி செய்யாமல்
இருந்திருந்தால் அவர்களைக் கைது      செய்திருக்கவே முடியாது.

     இவர்களில் ஒருவர் எங்கோ போய் மறைந்துவிட்டார். அவரை
வெளி மாகாணத்திலும் கைது        செய்துகொண்டு வருவதற்கான
வாரண்டைப் போலீஸ் கமிஷனர் பெற்றார்.  அவரைக் கைது செய்து
டிரான்ஸ்வாலுக்குக் கொண்டுவந்தார்.     அவர்கள் மீது விசாரணை
நடந்தது. அவர்களுக்கு எதிரான   சாட்சியங்கள் பலமாக இருந்தும்,
எதிரிகளில் ஒருவர்          ஓடி ஒளிந்திருந்தார் என்ற சாட்சியம்
ஜூரிகளுக்குக் கிடைத்திருந்தும்,    இருவரும் குற்றவாளிகள் அல்ல
என்று கூறி விடுதலை செய்து விட்டார்கள்.

     நான் மிகுந்த ஏமாற்றம் அடைந்தேன்.   போலீஸ் கமிஷனரும்
மிகவும் வருத்தப்பட்டார். வக்கீல் தொழிலிலேயே எனக்கு வெறுப்புத்
தோன்றிவிட்டது.      குற்றத்தை மறைத்து விடுவதற்கும் அறிவைப்
பயன்படுத்தலாம் என்பதைக் கண்டேன்.        ஆகவே, அறிவின்
பேரிலேயே எனக்கு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது.