பக்கம் எண் :

அதிகாரத்துடன் சிறு போர்329

Untitled Document
     அவ்விரு அதிகாரிகளும் விடுதலையடைந்து விட்டனரெனினும்,
அவர்கள் செய்த குற்றம் அதிக  வெளிப்படையானதாக இருந்ததால்,
அரசாங்கம்         அவர்களை    வேலைக்கு வைத்துக்கொள்ள
முடியவில்லை. அவர்கள் இருவரும்         உத்தியோகத்திலிருந்து
நீக்கப்பட்டனர். ஆசியாக்காரர் இலாகாவும்    ஓரளவுக்குத் தூய்மை
பெற்றது; இந்திய      சமூகத்திற்கும் கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது.

     இச் சம்பவம் என் மதிப்பை உயர்த்தியது;     என் தொழிலும்
விருத்தியடைந்தது.       அக் கொள்ளையில் சமூகம் மாதந்தோறும்
வீணாக்கிக்கொண்டிருந்த   நூற்றுக்கணக்கான பவுன்கள் - எல்லாமே
என்று சொல்ல முடியாவிட்டாலும் பெரும் பகுதி - காப்பாற்றப்பட்டன.
யோக்கியப் பொறுப்பற்றவர்கள் தாங்கள்  லஞ்சத்தொழிலை இன்னும்
செய்துகொண்டுதான் இருந்தார்களாகையால்      எல்லாவற்றையுமே
காப்பாற்றிவிட முடியாது. ஆனால்,     யோக்கியர் யோக்கியமாகவே
இருப்பது இப்பொழுது சாத்தியமாயிற்று.

     அந்த அதிகாரிகள் மிகவும் கெட்டவர்களாக இருந்த போதிலும்,
அவர்களிடம் தனிப்பட்ட முறையில் எனக்கு   எந்தவித விரோதமும்
இல்லை என்பதையும் நான் சொல்ல வேண்டும். இது அவர்களுக்கும்
தெரியும். அவர்களுக்குக்        கஷ்டம் நேர்ந்து என்னிடம் வந்த
சமயங்களில்       அவர்களுக்கு   நான் உதவி செய்திருக்கிறேன்.
அவர்களுக்கு        உத்தியோகம் கொடுக்கும் யோசனையை நான்
எதிர்க்காமல் இருந்ததால்       ஜோகன்னஸ்பர்க் முனிசிபாலிடியில்
அவர்களுக்கு உத்தியோகம்     கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருந்தது.
அவர்களின் நண்பர் ஒருவர்,     இது சம்பந்தமாக வந்து என்னைப்
பார்த்தார். அவர்களுக்கு இடையூறு செய்யாதிருக்கச்   சம்மதித்தேன்.
அவர்களுக்கு உத்தியோகமும் கிடைத்தது.

     நான் கொண்டிருந்த இவ்வித     மனோபாவத்தின் காரணமாக,
நான் தொடர்பு கொண்டிருந்த அதிகாரிகள்   என்னோடு நன்றாகவே
பழகி வந்தார்கள். அவர்களுடைய     இலாகாவுடன் நான் அடிக்கடி
போராட வேண்டியிருந்தபோதிலும், அதிகாரிகள் மாத்திரம் என்னுடன்
நட்புடனேயே              பழகிக் கொண்டிருந்தார்கள். அவ்விதம்
நடந்துகொள்ளுவது          என் சுபாவத்தில் சேர்ந்தது என்பதை
அப்பொழுது நான் நன்றாக     அறிந்து கொண்டிருக்கவில்லை. இது
சத்தியாக்கிரகத்தின்         அவசியமானதோர் பகுதி என்பதையும்,
அகிம்சையின் இயல்பே இதுதான்      என்பதையும் நான் பின்னால்
தெரிந்து கொண்டேன்.

     மனிதனும் அவனுடைய       செயல்களும் வெவ்வேறானவை.
நற்செயலைப் பாராட்டவேண்டும்;         தீய செயலைக் கண்டிக்க
வேண்டும். செயலைச் செய்யும் மனிதர்,       நல்லவராயிருப்பினும்
தீயவராயிருந்தாலும்               செயலின் தன்மைக்கு ஏற்றவாறு