பக்கம் எண் :

332சத்திய சோதனை

Untitled Document
சந்தோஷத்துடன் செய்ய வேண்டும் என்று  விரும்பினேன். ஆகவே,
உரத்த சப்தத்துடன், “அம்மாதிரியான   மடத்தனத்தையெல்லாம் என்
வீட்டில் சகிக்க மாட்டேன்” என்றேன்.

     இச் சொற்கள் கூறிய அம்புகளாக அவள்  உள்ளத்தில் தைத்து
விட்டன. உங்கள் வீட்டை        நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்,
என்னைத் தொலைத்துவிடுங்கள்”    என்று அவள் திருப்பிக் கூச்சல்
போட்டாள். நான் என்னையே               மறந்துவிட்டேன். என்
உள்ளத்திலிருந்த இரக்க       ஊற்று வற்றிப் போய்விட்டது. அவள்
கைகளைப் பிடித்து அத்திக்கற்ற மாதை      ஏணிக்கு எதிரிலிருந்து
வாயிற்படிக்கு இழுத்துக்கொண்டு போனேன்.     அவளை வெளியே
பிடித்துத்      தள்ளி விடுவதற்காகக் கதவைத்  திறக்கப் போனேன்.
அவளுடைய கன்னங்களின் வழியே      கண்ணீர் தாரைதாரையாக
வழிந்தது. அழுது கொண்டே அவள் கூறியதாவது:     “உங்களுக்கு
வெட்கம் என்பதே இல்லையா?       இப்படியும் உங்களுக்குச் சுய
உணர்வு அற்றுப் போய் விடவேண்டுமா?     எனக்குப் போக்கிடம்
எங்கே இருக்கிறது? எனக்குப் புகலிடம்      அளிப்பதற்கு இங்கே
என் பெற்றோர்களாவது உறவினர்களாவது   இருக்கிறார்களா? நான்
உங்கள் மனைவி  என்பதனால் அடித்தாலும்    உதைத்தாலும் நான்
பொறுத்துக்     கொள்ள வேண்டியதுதான்  என்று நினைக்கிறீர்கள்.
உங்களுக்குப் புண்ணியமாகப் போகிறது,       நல்லவிதமாக நடந்து
கொள்ளுங்கள். கதவை மூடுங்கள்.      நம்மைப் பார்த்து யாராவது
சிரிக்கப்போகிறார்கள்!”

     இதைக் கேட்ட நான் என் முகத்தைக்   கம்பீரமாக வைத்துக்
கொண்டேன். ஆனால், உண்மையில் வெட்கமடைந்தேன். கதவையும்
மூடினேன். என்ன விட்டு       என் மனைவி போய்விட முடியாது
என்றால், அவளை விட்டு            நானும் பிரிந்துவிடமுடியாது.
எங்களுக்குள் எத்தனையோ        சச்சரவுகள் இருந்திருக்கின்றன.
ஆனால், அவற்றின் முடிவில்   எங்களுக்குள் சமாதானமே நிலவும்.
சகிப்புத் தன்மையின் இணையில்லாத    சக்தியினால் எப்பொழுதும்
வெற்றி பெறுகிறவள், மனைவியே.

     இச்சம்பவம், அதிர்ஷ்டவசமாக நான் கடந்துவெளிவந்து விட்ட
ஒரு காலத்தைப் பற்றியது. ஆகையால், இச்சம்பவத்தை எந்தவிதமான
பற்றுமில்லாமல்  சொல்லக்கூடிய நிலையில் நான் இன்று இருக்கிறேன்.
குருடனான, வெறிகொண்ட கணவனாக   நான் இப்பொழுது இல்லை;
என் மனைவியின் உபாத்தியாயராகவும் இல்லை.       கஸ்தூரிபாய்
விரும்பினால், நான் முன்னால் அவளுக்கு     எவ்வளவு தொல்லை
அளித்து வந்தேனோ அவ்வளவு தொல்லையும்     அவள் எனக்கு
இன்று அளிக்க முடியும். சோதனைக்கு         உட்பட்டுத் தேறிய
நண்பர்கள்   நாங்கள். இப்பொழுது நாங்கள் ஒருவரை ஒருவர் காம
இச்சையின் இலக்காகக் கருதவில்லை. நான் நோயுற்