பக்கம் எண் :

333

Untitled Document
றிருந்த போதெல்லாம் அவள்       எனக்குப் பக்தியுள்ள தாதியாக
இருந்து, எவ்விதக் கைம்மாறையும் எதிர்பாராமல் பணிவிடை செய்து
வந்திருக்கிறாள்.

     மேலே நான் சொன்ன          சம்பவம் 1898-இல் நடந்தது.
பிரம்மச்சரிய எண்ணமே எனக்கு    இல்லாமல் இருந்த காலம் அது.
கணவனுக்கு மனைவி உதவியாகவுள்ள சிநேகிதி, தோழி, கணவனின்
இன்ப துன்பங்களில்        பங்காளி என்பதற்குப் பதிலாக அவள்
கணவனின் காம இச்சைக்குரிய அடிமை,          கணவன் இட்ட
வேலையைச்      செய்வதற்கென்றே  பிறந்திருப்பவள் என்று நான்
எண்ணிக்கொண்டிருந்த காலம், அது.

     1900-ஆம் ஆண்டில்தான்       இக் கருத்துக்கள் தீவிரமான
மாறுதலை அடைந்தன. ஆனால்,         அதைப்பற்றி அதற்கேற்ற
சந்தர்ப்பத்தில் சொல்லலாம் என்று   இருக்கிறேன். ஒன்று மாத்திரம்
இப்பொழுது       சொன்னால் போதும் காமப் பசி என்னிடமிருந்து
நாளாவட்டத்தில் மறைய மறைய, என்னுடைய    குடும்ப வாழ்க்கை
மேலும் மேலும்      அமைதியாகவும்        இனிமையானதாகவும்,
சந்தோஷகரமானதாகவும் ஆயிற்று;        ஆகிக்கொண்டிருக்கிறது.

     புனிதமான இந்த நினைவைப் பற்றிய   வரலாற்றைக் கொண்டு
நானும்        என் மனைவியும் பிறர் பின்பற்றுவதற்கான லட்சியத்
தம்பதிகளாக இருந்தோம் என்றோ        எங்களுக்கு லட்சியத்தில்
ஒரேவிதமான கருத்து இருந்தது என்றோ யாரும்  எண்ணிக்கொண்டு
விடவேண்டாம். எனக்கு இருந்த    லட்சியங்களைத் தவிர தனக்குத்
தனியாக     ஏதாவது லட்சியம் இருந்ததுண்டா என்பது ஒருவேளை
கஸ்தூரிபாய்க்கே தெரியாமல் இருக்கலாம். நான் செய்யும் காரியங்கள் பல இன்றுகூட அவளுக்குப் பிடிக்காமல்  இருக்கலாம். அவைகளைக்
குறித்து நாங்கள் விவாதிப்பதே இல்லை. அவைகளை  விவாதிப்பதில்
எந்தவித நன்மை இருப்பதாகவும் நான் காணவில்லை.    ஏனெனில்,
அவளைப் படிக்க வைத்திருக்க வேண்டிய சமயத்தில்  அவளுடைய
பெற்றோரும் படிக்க வைக்கவில்லை; நானும் அதைச் செய்யவில்லை.
ஆனால், அவளிடம் ஒரு பெரிய    அருங்குணம் மிகுந்த அளவில்
இருக்கிறது. ஹிந்து மனைவிகள்       பெரும்பாலாரிடம் ஓரளவுக்கு
இருக்கும் குணமே அது. அதாவது,  விரும்பியோ விரும்பாமலேயோ,
அறிந்தோ  அறியாமலேயோ என் அடிச்சுவட்டைப் பின்பற்றித் தான்
நடப்பதே தனக்குப் பாக்கியம் என்று அவள் கருதி  வந்திருக்கிறாள்.
புலனடக்க வாழ்க்கையை நடத்த    நான் செய்த முயற்சிக்கு அவள்
எப்பொழுதும் குறுக்கே நின்றதே இல்லை.      ஆகையால் அறிவுத்
துறையில்      எங்களுக்கிடையே அதிகப் பேதம் இருந்தபோதிலும்,
எங்களுடைய வாழ்க்கை திருப்தியும், சந்தோஷமும்,   முற்போக்கும்
உள்ளதாக இருந்து வருகிறது          என்றே நான் எப்பொழுதும்
உணர்கிறேன்.